Friday, May 31, 2024

வீட்டில் என்ன அறைகள் தேவை? எப்படி அமைக்க வேண்டும்?

வீட்டில் என்ன அறைகள் தேவை? எப்படி அமைக்க வேண்டும்?

வீட்டிற்கு தேவையான அறைகள்:

🏰 படுக்கை அறை

🏰 சமையல் அறை

🏰 வரவேற்பு அறை

🏰 பூஜை அறை

🏰 குளியல் அறை

🏰 உணவு உண்ணும் அறை

🏰 வாகனம் நிறுத்தும்

🏰 அறை படிக்கும் அறை

🏰 விருந்தினர் தங்கும் அறை

🏰 சேமிப்பு அறை

🏰 மோட்டார் அறை
படுக்கை அறை

🏡 வீடு கட்டும்பொழுது அறைகளை அமைக்க முன்னரே திட்டமிட வேண்டும். ஏனெனில் அறைகளை வாஸ்து பார்த்து அமைக்க வேண்டும். 

🏡 படுக்கையறை தென்மேற்கு திசையில் இருத்தல் வேண்டும். தென்மேற்கு திசையில் படுக்கையறை இருந்தால் வீட்டு உரிமையாளருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வளத்தையும் தருகிறது மற்றும் நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது. வீட்டின் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் படுக்கையறைகளைத் தவிர்க்கவும். குறிப்பாக தென்கிழக்கு திசையில் இருந்தால், இது ஜோடிகளுக்கு இடையே சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 

🏡 வடகிழக்கு திசையில் படுக்கையறை இருந்தால் உடல்நல பிரச்சினை ஏற்படும். வீட்டின் கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் குழந்தைகள் படுக்கையறை இருந்தால் மிகவும் சிறந்தாக அமையும்.
சமையல் அறை

🏡 ஒரு சமையலறையானது குறைந்தபட்சம் 8-க்கு 10 அடி என்ற கணக்கிலாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் ஓரளவு இடம் பெரியதாக இருக்கும் போது சமையல் பொருட்களையும் மளிகைப் பொருட்களையும் அலமாரி அமைத்து வைக்க முடியும்.

🏡 சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டியானது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் அமைப்பது நல்லது. ஏனெனில் சிமெண்ட் அல்லது கற்களால் அமைக்கப்படும் தொட்டியைவிடத் தண்ணீரைச் சுலபமாக வெளியேற்ற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தொட்டி சிறப்பானது ஆகும்.

🏡 சமையலறை மேடையின் உயரம் 34 அங்குலம் இருப்பது நல்லது. இது கேஸ் சிலிண்டரை உள்ளே வைப்பதற்கு ஏதுவாக இருக்கும். சமையலறை என்றால், நிச்சயம் வெப்பம் இருக்கவே செய்யும். அதற்காக மின் விசிறிகளைச் சமையலறையில் வைப்பது நல்லதல்ல. எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு சமையலறையில் குறைந்தபட்சம் 5 மின் இணைப்பு பாய்ண்டுகளை வைப்பது புத்திசாலித்தனம்.

🏡 சமையலறை என்றால், புகைபோக்கி நிச்சயம் இருக்க வேண்டும். பழைய வீடுகளில் இது நிச்சயம் இருக்கலாம். ஆனால், இப்போது கட்டப்படும் வீடுகளில் புகைபோக்கிகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. குறிப்பாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புகைபோக்கிகளை அமைப்பதும் கடினமானது. புகைபோக்கிகளுக்கு மாற்றாக, சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன்களை பயன்படுத்தலாம்.

🏡 தற்போது சமையலறைகளில் சிம்னி வைப்பதைச் சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது ஒரு சிறந்த முறையும்கூட. சிம்னி உபயோகிக்கும்போது அது கார நெடிகளையும் எண்ணெய்ப் பிசுக்குகளையும் சேமித்து வைத்துக்கொள்ளும். அதை அடிக்கடி நாம் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இயந்திரம் கெட்டு விடும்.

🏡 சமையலறைக்குப் பயன்படுத்தும் சிம்னி ஹாப் எனப்படும் அடுப்பு தரமாக இருப்பது அவசியம்.

🏡 சமையலறை மேடைக்கு மேல் பளிங்குக் கற்களைப் பயன்படுத்துவது நல்லது. மேடைக்கு மேல் 2 அடி உயரத்துக்கு டைல்ஸ் பயன்படுத்தலாம்.

🏡 சமையலறையில் முக்கியமான பகுதி அலமாரி. உணவு பொருட்களை இங்கு வைத்துப் பெண்கள் பாதுகாப்பார்கள். உணவுப் பொருட்கள் உள்ள இடம் என்பதால் இங்குப் பூச்சிகள் வரவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் அலமாரி விரைவில் பூச்சிகளால் துளைகள் இடப்பட்டுப் பாதிப்புக்குள்ளாகும். எனவே, அதன் உள் மற்றும் வெளிப்புறங்களை லேமினேட் செய்வது நல்லது.

🏡 அலமாரிகளுக்கு வர்ணம் பூசுவதன் மூலம் பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே கூடுமானவரை வர்ணம் உபயோகிப்பதைத் தவிர்த்து லேமினேட் செய்வது சிறந்தது.

🏡 மாடுலர் கிச்சன்களில் பிளைவுட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் நீர் உறிஞ்சா பிளைவுட் பயன்படுத்துவது நல்லது.
வரவேற்பு அறை 

🏡 ஒட்டுமொத்தக் கட்டிடப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கோ அல்லது நான்கில் ஒரு பங்கோ உங்கள் வரவேற்பறை அமைந்தால் சிறப்பாக இருக்கும். 

🏡 தெருவைப் பார்த்தபடியோ காம்பவுண்ட் வாசலுக்கு நேராகவோ வரவேற்பறையை அமைக்க வேண்டாம். குறைந்தபட்சம் நான்கடி உயர ஜன்னல்களை அறையில் இருக்க வேண்டும். வீட்டுக்குள் இயற்கை வெளிச்சம் வருவது மின் சிக்கனத்துக்கும் நல்லது. சூரிய வெளிச்சம் நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்க் கிருமிகளைக் கொன்று விடும். அதனால் உடலுக்கும் ஆரோக்கியம். ஜன்னல்கள் எதிர் எதிர் திசையில் இருப்பது அமைப்பாக இருக்கும். 

🏡 வரவேற்பறையை வடிவமைக்கும் முன் அறையில் அறைக்கலன்களை எங்கு, எப்படி வைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். வரவேற்பறையில் ஒரு புத்தக அலமாரி ஒன்றை நிறுவுவதாக இருந்தால் அறை கட்டப்படுவதற்கு முன்பே முடிவெடுத்துவிடுங்கள். அதற்கேற்ப வரவேற்பறையை அழகாகக் கட்டலாம். 

🏡 வரவேற்பறையின் உள்ளே மாடிப்படிகளை அமைப்பது முன்பைவிட இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. படிக்கட்டுகளை அமைப்பதில் இரு வகைகள் உண்டு. அதாவது வெளிப்புறமாக அமைக்கும் படிக்கட்டுகள். மற்றொன்று உட்புறமாக அமைக்கும் படிக்கட்டுகள். இவற்றுள் உட்புறப் படிக்கட்டுகள் பெரும்பாலும் வரவேற்பறையிலேயே அமையும். 

பூஜை அறை 

🏡 பூஜை அறைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் மிதமானதாக இருப்பது நல்லது. அழுத்தமான பளீரென்ற வண்ணங்களைத் தவிர்த்து விடுங்கள். பூஜை செய்யும்போது மனம் அமைதியாக இருப்பதே நல்லது. அதற்கு மிதமான வண்ணம்தான் ஏற்றது. வெள்ளை, வெளிர் நீலம், க்ரீம் போன்ற வண்ணங்கள் பயன்படுத்துங்கள்.

🏡 மின்சார சர விளக்குகளைப் பூஜை அறையில் மாட்டும்போது அவை ஆடம்பரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டாம். சிலரது வீட்டில் சாமிப் படங்களுக்கும், உருவங்களுக்கும் பூ வைப்பார்கள். ஆனால் அவற்றைச் சுலபத்தில் நீக்க மாட்டார்கள். வாடிய பூ தொடர்ந்து சில நாட்களுக்குக் காட்சியளிக்கும். இது தவறு. நிர்மால்யம் எனப்படும் இந்த வாடிய மலர்களை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும். முடிந்தவரை பூஜை அறை என்பது கழிப்பறையிலிருந்து தள்ளி இருக்க வேண்டும். அப்போதுதான் விரும்பத்தகாத நாற்றங்கள் பூஜையின்போது உங்கள் கவனம் சிதறாமல் இருக்கும்.

🏡 உடைந்த மற்றும் கீறல் விழுந்த கடவுள் உருவங்களை நீக்கிவிடலாம். இப்போதெல்லாம் நடமாடும் பூஜை அறைகள் வந்து விட்டன. இது நடுத்தர மக்களுக்குப் பலவித வசதிகளைக் கொடுக்கிறது. வசதியான இடத்தில் வைத்து பூஜை செய்ய முடிகிறது. வேறு வீட்டுக்கு மாறும்போதும் இதைச் சுலபமாக எடுத்துச் செல்ல முடிகிறது.எனவே இதை பற்றியும் சிறுது யோசிக்கலாம்.

குளியல் அறை

🏡 நாம் நம் வீட்டை வடிவமைக்கும்போது குறைந்தபட்சம் 30 முதல் 50 சதுர அடி அளவிலாவது குளியலறையை அமைப்பது நல்லது. அப்போதுதான் நீங்கள் ஈரமான பகுதி (WET AREA), ஈரமற்ற பகுதி (DRY AREA) என்று எளிதாகப் பிரிக்க இயலும். மேலும் சிலர் குளிக்கும் இடத்தில் பயன்படுத்தும் நீர் செல்லத் தனி வழியும் மீதிப் பாகத்துக்கு நீர் செல்லத் தனி வழியும் அமைக்கப்பட வேண்டும்.

🏡 குளியலறையைப் பொறுத்தவரை காற்று வெளிச்சம் வர ஒரே வழி வெண்டிலேட்டர் (VENTILATOR) அமைப்புகள்தான். எனவே இங்கு கட்டாயமாகக் காற்றை வெளித்தள்ளும் மின்விசிறி (EXHAUST FAN) அமைக்கப்படுவது மிகவும் அவசியமாகிறது.

🏡 வெண்டிலேட்டர்கள் இரண்டு அடி உயரத்துக்கு மிகாமல் அமைக்கப்படுவது நல்லது. அகலம் இரண்டு அடி முதல் நான்கு அடிவரை அறையின் அளவைப் பொறுத்து நாம் அமைத்துக் கொள்ளலாம்.

🏡 வெண்டிலேட்டரில் பொருத்தப்படும் கண்ணாடிகள் சொரசொரப்பான தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும். மேலும் அவை குளியலறையின் மேற்பகுதியைப் பார்ப்பது போன்று அமைக்கப்பட வேண்டும்.

உணவு உண்ணும் அறை

🏡 பொதுவாக வீடு கட்டும் போது உணவு உண்ணும் அறையை (டைனிங் ரூம்) சமையலறை அருகிலேயே வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த வகையில் தென் கிழக்கு பகுதியில் சமையலறை வரும்போது சமையலறைக்கு மேற்கு புறமாகவோ அல்லது வடக்கு புறமாகவோ உணவு உண்ணும் அறையை அமைப்பது மிக சிறப்பாக இருக்கும். இந்த டைனிங் அறையை பொருத்தவரை நீங்கள் சமையலறையிலிருந்து போய்வர ஏதுவாகவும், ஹால்லில் இருந்தும் போய் வருவதற்கு ஏதுவாகவும் வாசல் அமைப்பது மேலும் சிறப்பாகும். 

🏡 உங்களது வீட்டில் சமையலறை வடமேற்கு பகுதியில் ஒரு வேலை இருந்தால் அந்த சமையலறைக்கு தெற்கு புறமாகவோ அல்லது கிழக்கு பகுதியிலோ உணவு உண்ணும் அறையை அமைத்துக் கொள்வது நன்மை அளிக்கும். வடமேற்கு சமையலறை வரும்போது, வடகிழக்கில் டைனிங் வர வாய்ப்புள்ளது. அதுபோல வரும் பட்சத்தில் வடகிழக்கு அறையை உணவு உண்ணும் அறையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் வடகிழக்கு நன்றாக திறப்பு இருக்க வேண்டும் என்பதை மறந்துவிட கூடாது. உங்களுடைய மொத்த வீட்டில் தென்மேற்கில் டைனிங் வரும்போது அதை தவிர்ப்பது மேலும் நன்மை அளிக்கும்.

வாகனம் நிறுத்தும் அறை

🏡 பொதுவாக, நாம் அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு செல்ல வாகனங்களை பயன்படுத்துகின்றோம். நம் வீட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும். 

🏡 உங்கள் இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் எந்த பகுதியையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது. 

🏡 உங்கள் இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ Cantilever முறையில் தூண் (Pillar) இல்லாமல் அமைக்க வேண்டும். 

🏡 உங்கள் இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் அடித்தளத்தில் (Basement) கார் நிறுத்துவதற்காக கண்டிப்பாக இடம் அமைக்கக்கூடாது. 

🏡 உங்கள் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையில் அமைக்கலாம். வாஸ்துபடி அதுவே சிறந்த திசையாகும். உங்கள் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக்கூடாது. 

🏡 உங்கள் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தில் கட்டப்படும் தாய் சுவரையும், மதில் சுவரையும் தொடாமல் தனியாக அமைக்க வேண்டும். 

🏡 உங்கள் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) - மேல்கூரை (Roof) சமமாக அல்லது தெற்கு / மேற்கு உயர்த்தியும் வடக்கு / கிழக்கு தாழ்த்தியும் அமைக்க வேண்டும். 

குறிப்பு

🏡 வீட்டில் வாகனம் நிறுத்துவதற்கு தனி ஷெட் அமைத்தால் அதை வடமேற்கு அல்லது தென் கிழக்குத் திசையில் கட்ட வேண்டும். வடகிழக்கில் அதிக பாரத்தை ஏற்றக் கூடாது என்பதால் அங்கு மட்டும் கார் ஷெட்டை அமைக்கக் கூடாது.

படிக்கும் அறை

🏡 நம் வீட்டில் படிக்கும் அறை அல்லது நூலகத்தை மேற்குதிசையில் அமைப்பது சிறந்தது. அந்த அறையில் வாஸ்துப் படி கிழக்கு நோக்கியப்படி நாற்காலியைப் போட்டு படிக்க வேண்டும். மற்றும் வடக்கு நோக்கியும் நாற்காலியைப் போட்டு படிக்கலாம். ஆனால் தெற்குச் சுவருக்கு ஒட்டினாற் போல நாற்காலியை போட வேண்டும். ஏனெனில் வஸ்துபடி அதுவே சிறந்த முறையாகும்.

🏡 மேலும், மேற்குத் திசைக்கு அடுத்தபடியாக வடகிழக்கு, கிழக்கு, வடமேற்கு திசையில் படிக்கும் அறையாக அமைக்கலாம். பின்பு, புத்தக அலமாரிகள் மேற்கு அல்லது தெற்கு சுவருக்கு அருகில் இருக்க வேண்டும். இந்த அறைக்கு சுண்ணாம்பு அடிக்க விரும்பினால் அதில் இளமஞ்சள், இளம்பச்சை, மஞ்சள் ஆகிய நிறத்தில் ஏதாவது ஒரு வண்ணத்தை கலந்து அடிக்க வேண்டும். 

🏡 குறிப்பாக, வெளிச்சமும், காற்றும் வாஸ்துவிற்கு இரு கண்கள் போன்றது ஆகும். ஆகையால் குழந்தைகள் படிக்கும் அறையில் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும்படி ஜன்னல்கள் அமைக்கவேண்டும்.

குறிப்பு

🏡 ஒரு வீட்டின் படிப்பறையை வாஸ்துப்படி அமைத்தால் மாணவர்களுக்கு சிறப்பாக ஞானம் கிடைக்கும். வீட்டில் படிப்பறையானது தென்மேற்கு அறைக்கு வடக்கில் இருக்க வேண்டும். 

விருந்தினர் தங்கும் அறை

🏡 ஒருவர் மற்றொருவரின் தன்மையை எவ்வாறு மதிப்பிடுவார் என்றால் ஒருவர் மற்றொருவரை எவ்வாறு உபசரிக்கிறார் என்பதை வைத்து தான். எனவே, வாஸ்துப்படி விருந்தினர் அறையை ஒருபோதும் தென்மேற்கில் அமைக்கக் கூடாது. தென்மேற்கு அறை அந்த வீட்டின் எஜமானன் பயன்படுத்துவதற்கு மட்டுமே ஆகும். 

🏡 வீட்டில் வரவேற்பறை அமைக்க சிறந்த இடம் வடமேற்குப் பகுதி. தென்கிழக்கு மற்றும் வடகிழக்கிலும் விருந்தினர் அறை அமைக்கலாம். வீட்டில் விருந்தினர் அறை அமைக்கும் பொழுது மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு சரியான விருந்தினர் அறை அமைத்து நம் உறவுகளுக்கு பலம் சேர்ப்போம்.

சேமிப்பு அறை 

🏡 நம் வீட்டில் பொருட்கள் வைப்பதற்கென்று தனி அறை (Store Room) அமைப்பது அவசியமாகும். எனவே, பொருட்கள் வைப்பதற்காக அமைக்கப்படும் அறையை மிகுந்த கவனத்துடன் சரியான முறையில் அமைக்க வேண்டும். வாஸ்து அடிப்படையில் அதை எவ்வாறு அமைக்கலாம் எனப் பார்ப்போம். 

🏡 உங்கள் வீட்டில் அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும். 

🏡 உங்கள் வீட்டில் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அமைக்க வேண்டும். மேலும், வடமேற்கு பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அமைக்க வேண்டும். 

🏡 உங்கள் வீட்டில் எந்த ஒரு மூலையிலும் அதன் மேல் தளத்தைத் தாழ்வாக (Low Roof) அமைத்து, அந்த இடத்தை பொருட்கள் வைக்கும் அறையாக அமைக்கக் கூடாது. 

🏡 உங்கள் வீட்டிலோ அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது. 

Thursday, April 25, 2024

வீடு கட்ட கட்டிட பொறியாளர் (சிவில் இஞ்சினியர்) அனுமதி அவசியமா?

🏡 ஒரு அனுபவம் உள்ள பொறியாளரை ஒரு வீடு, வணிகக்கடை, தொழிற்சாலை கட்டிடம் கட்ட அணுகினால், கட்டிட வரைபடம் உங்கள் விருப்பம், தற்போதைய மற்றும் பிற்காலத் தேவையை கருத்தில் கொண்டு இன்றைய நவீன காலத்திற்கும் அரசு விதிகளுக்கும், நமது கலாச்சாரமும் வாஸ்து வடிவமைப்பும் பொருந்தும் வண்ணம் உங்கள் மனையின் நீள அகலம் ஆகியவை மற்றும் அந்தப்பகுதி நில அமைப்பு மற்றும் பிற்கால வளர்ச்சியையும் அடங்கும் வடிவத்தில் வரைபடம் தயாரித்துக் கொடுப்பார். 
🏡 வீடு கட்டுவதற்கான திட்டம் மற்றும் வடிவமைப்பு, கண்காணிப்பு, தரக் கட்டுப்பாடு, திட்ட அனுமதியின்படி கட்டுமானம் நிறைவு பெற்றிருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை பதிவு பெற்ற என்ஜினீயர்கள் தான் செய்ய வேண்டும். மேலும், 12 மீட்டர் உயரத்துக்குள் அமைந்த கட்டிடங்களுக்கு பதிவு பெற்ற கட்டிடக் கலை நிபுணர் (Registered Architect) அல்லது பதிவுபெற்ற பொறியாளர் (Registered Engineer) அனுமதி அவசியம்.

🏡 12 மீட்டருக்கு மேல் 18 மீட்டர் உயரத்துக்குள் அமைந்த கட்டுமானங்களை அமைக்க பதிவு பெற்ற டெவலப்பரின் அனுமதி வேண்டும். மேலும், ஸ்டக்சுரல் என்ஜினீயர், கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினீயர், ஜியோ டெக்னிக்கல் என்ஜினீயர் ஆகியோர்களது அனுமதியும் அவசியம்.
🏡 ஒரு கட்டிடத்தில் Structural Design செய்து வலிமை, பாதுகாப்பு மற்றும் செலவு குறைவான வடிவமைப்பில் கொடுப்பது ஒரு பொறியாளர் பணியாகும். எவ்வளவு அனுபவம் இருந்தாலும்கூட பொறியாளர் வாய்மொழியில் எவ்வளவு கான்கிரிட் மற்றும் கம்பியின் தேவை எவ்வளவு என்று சொல்ல கூடாது. கட்டிட வரைபடம் அதன் பயன்பாடு, அங்குள்ள மண்ணின் தரம் அனைத்தையும் கருத்தில்கொண்டு வடிவமைப்பு கணக்கிடு செய்து Structural வரைபடம் கொடுக்க வேண்டும்.

🏡 இன்று சந்தையில் ஒரே தேவைக்குப் பல நிறுவனங்களைச் சார்ந்த பொருட்கள் கிடைக்கின்றன. நம்முடைய தேவை என்ன, எப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களை அவை பூர்த்திசெய்ய வேண்டும், நம்முடைய பொருளாதாரச் சூழல் என்ன, தேவையான தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளை எந்தப் பொருள் நிறைவேற்றுகிறது என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பிறகுதான் நாம் அந்தப் பொருளை வாங்க வேண்டும். இந்தச் சூழலில் பொறியாளர் ஒருவரின் தேவை அவசியமானது.

🏡 ஒரு கட்டிடத்தை கட்டிமுடிக்க எவ்வளவு ஆட்கள், கட்டுமான பொருட்கள், உபகரணங்கள் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கீடு செய்து திட்டத்தின் மொத்தசெலவு தொகை எவ்வளவு வரும் என்றும், இந்த கட்டிடத்தை கட்டிமுடிக்க எவ்வளவு நாட்கள் தேவை எப்பொழுது எவ்வளவு என்ன பொருட்கள் மற்றும் ஆட்கள் தேவை என்பதை எல்லாம் கணக்கீடு செய்வதில் பொறியாளரின் பங்கு மிகவும் அவசியமாகும்.

🏡 கட்டிடவேலை தொடங்கவும், தொடங்கியபின் வேலையை வழிநடத்தவும், வரைபடத்தில் உள்ளதை திட்டத்தின் செலவு தொகையில் மாற்றம் இல்லாமல் அந்த கட்டிடத்தின் கட்டுமான வேலையை பூர்த்திசெய்யவும், வேலைகளுக்கு இடையில் ஏற்படும் சிறுசிறு மாறுதல்கள் மற்றும் இடர்ப்பாடுகளை சரிசெய்தல், தரமான பொருட்களை தேவையான அளவு வாங்கவும், அந்த பொருட்களை சரியாக கொண்டுவந்து சேர்க்கவும் பொறியாளரின் திட்டமிடல் அவசியம்.

🏡 மிக பெரிய வணிக வளாகங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டடுவதற்கு கண்டிப்பாக பொறியாளர்கள் தேவை. ஏனெனில் இதனை கொஞ்சம்திறன் பட செய்ய வேண்டும்.

🏡 வீடு கட்டும் முன்பு உங்களுடைய பகுதியின் தட்ப வெட்ப சூழ்நிலை மண்ணின் தாங்கு திறன் இவை பற்றி நான்கு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் கட்டும் கட்டிடத்தை தாங்கும் அளவுக்கு தேவையான Concrete Reinforcement சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இதனை துல்லியமாக கணக்கிட்டு கொடுக்கு பொறியாளர்கள் தேவைப்படுவார்கள். 

🏡 ஏனெனில் இந்த Concrete Reinforcement என்பது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும், நீங்கள் பொறியாளர்கள் இல்லாத நபர்களை கொண்டு கட்டினால் 50 வருடம் இருக்க வேண்டிய கட்டிடம் 30 வருடத்திலேயே பழுதாக ஆரம்பித்து விடும்.

🏡 கட்டிடத்தின் பாதிப்பு என்பது உடனே நமக்கு தெரிய வராது. குறைந்தது 5 முதல் 10 வருடங்களில் இருந்து நீங்கள் பாதிப்பை உணர முடியும். ஆகவே இந்த மாதிரியான கட்டிடம் கட்டுவதில் சரியான பொறியாளர்களை தேர்தெடுத்து வீடு கட்ட வேண்டும்.

🏡 வீடு கட்டும் முன்பு architect ஒருவரை அழைத்து வீடு கட்ட போகும் இடம் மேலும் உங்களிடம் அதற்காக உள்ள பட்ஜெட் மேலும் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கூறினால் அவர் அதற்கு தகுந்தாற்போல் உங்களுக்கு வரைபடம் உருவாக்கி தருவார். ஒரு சில பொறியாளர்கள் அவர்களாகவே இந்த வரைபடத்தை வரைந்து கொடுப்பார்கள்.

🏡 இது உங்களுடைய வீடு எவ்வளவு பளுவை தாங்கும் அதற்கு எவ்வளவு கம்பி எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்ல கூடிய வரைபடம். இதை நீங்கள் ஒரு Structural Consultant மூலமாக பெற்று கொள்ளுங்கள்.

🏡 இந்த இரு வகையான வரைபடம் இல்லாமல் வரும் எந்த பொறியாளரையும் நீங்கள் உங்களுடைய வீட்டை கட்ட அனுமதிக்காதீர்கள். இந்த இரு வரைபடமும் மிகவும் முக்கியம்.

🏡 நமது பழங்கால முறை, அதாவது பெரிய வகை கற்களை கொண்டு அஸ்திவாரம் அமைத்து பின்பு அதன் மேல் சுவர் எழுப்பி இறுதியில் கூரையில் Concrete அமைப்பது. இவை இப்பொழுது பெரும்பாலும் கட்ட படுவதில்லை. ஆனால் இது தரமானது அல்ல என பலரும் கூறுவது உண்மையல்ல. நீங்கள் இந்த அமைப்பை பயன்படுத்தி 3 அடுக்கு மாடி வரை கட்டலாம். இது மாதிரியான கட்டிடத்திற்கு பெரிய வகையில் பொறியாளர்கள் தேவை இல்லை. உங்களுக்கு தெரிந்த கொத்தனாரை கொண்டே இது போன்ற வீட்டை கட்டி முடிக்கலாம்.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup : 🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup : 🇮🇳+91 8248479255

Tuesday, April 23, 2024

வீடு கட்டும் முறைகள் என்ன?

🏠 கடக்கால் வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏠 பில்லர் அமைத்து வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?
🏠 கூறை வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏠 ஓட்டு வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏠 மாடி வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏠 அடுக்குமாடி கட்ட தேவையான பொருட்கள் என்ன?

வீடு கட்டும் முறைகள் என்ன?

இரண்டு முறைகளில் வீடு கட்டலாம். வீடு எந்த அமைப்பில் கட்ட வேண்டும் என்று முதலில் தீர்மானிக்க வேண்டும்.

1) கடக்கால் முறை:

🏡 கடக்கால் எடுத்து வீடு கட்டுவது நமது பாரம் பரிய முறை. கட்டும் வீட்டின் நீளம் மற்றும் அகலம் எத்தனை அறைகள் அமைக்க இருக்கின்றமோ அனைத்து அறைகளின் நீளம் மற்றும் அகலத்திற்கும் கடக்கால் குழி எடுக்க வேண்டும்.
🏡 எடுக்கப்பட்ட கடக்கால் குழியை கற்களால் ஒரு அடி உயரம் முதலில் நிரப்பி அதன் மீது மண் கொட்டி நீர் பாய்ச்சும் போது மண் கற்களின் சந்துகளில் சென்று நிரம்பிவிடும். இப்படியாக ஒவ்வொரு அடியாக கற்கள் மற்றும் மண்ணால் நிரப்பி குழி முழுவதும் மூட வேண்டும்.

🏡 கற்களை இரண்டு மூன்று அடிகளுக்கு மொத்தமாக கொட்டி மண் மற்றும் தண்ணீர் கலவை விட்டால் மண் கற்களின் சந்துகளில் சென்று நிரம்பாது. பொதுவாக கட்டுமான ஆட்கள் இப்படிதான் செய்வார்கள். அதற்கு அனுமதிக்காதீர்கள். கட்டிடம் வலு இருக்காது. பேஸ்மெண்ட் வீக்காகி நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றத்தை தாக்கு பிடிக்காது. இதனை பேஸ்மெண்ட் போடுதல் என்றும் கூறுவார்கள்.

பேஸ்மெண்ட் அமைத்தல்

🏡 பேஸ்மெண்ட் இரண்டு முறைகளில் அமைக்கலாம். மேற் கூறிய படி கற்கள் மற்றும் தண்ணீர் கொண்டு நிரப்புதல் மற்றொன்று சிமெண்ட் மற்றும் ஜல்லிகற்கள் கலவையால் நிரப்புதல். இரண்டும் ஒரே அளவு தரத்தை தான் கொடுக்கின்றன. சிமெண்ட் முதலில் அதிக வலுவுடையதாக இருந்தாலும் சில சிமெண்டின் தரம் நாளடைவில் வலு குறைகிறது. கடலோர பகுதிகளில் சிமெண்ட் பேஸ்மெண்ட் அமைப்பு சிறப்பு உடையதாக இருக்கும். மேலும் இயற்கை சீற்றத்தை எளிதில் தாக்கு பிடிக்கும்.

கடக்கால் எடுத்து வீடு கட்டும் முறைக்கு தேவையான பொருட்கள்:

🏯 சதாரண கற்கள் (ரப்ஸ்டோன், மோடிகல், மோட்டா கற்கள் என்றும் கூறுவார்கள்)

🏯 கடக்கால் மூடுவதற்க்கு செம்மண்

🏯 கட்டுகள் (உளி கல், செவ்வக வடிவ கற்கள்)

🏯 மேடை மண் (கிராவல் மண்)

🏯 சிமெண்ட்

🏯 ஆற்று மணல் அல்லது எம் சாண்ட் (கற்களை தூளாக்கி எடுப்பது)

🏯 செங்கல்

🏯 பூசுவதற்கு மென்மையான மணல் அல்லது டி சாண்ட்

🏯 இரும்பு கம்பி

🏯 நிலவுகள்

🏯 ஜன்னல்

🏯 கதவு

🏯 டைல்ஸ்

🏯 ஜல்லி கற்கள் 1/4, 1/2, 3/4, 1.5

🏯 சிப்ஸ் ஜல்லி

🏯 காம்பவுண்ட் கட்ட ஹேலோ பிரிக்ஸ் கற்கள்

🏯 ஷெல்ஃப் (அலமாரி) அமைக்க கடப்பா கற்கள்
2) பில்லர் முறை:

பில்லர் அமைக்க தேவையானவை:

🏯 குழி எடுத்தல்

🏯 சிமெண்ட்

🏯 ஜல்லி கற்கள்

🏯 ஆற்று மணல்

🏯 தண்ணீர்

🏯 கட்டுமான கம்பிகள்

🏡 பில்லர் அமைக்க குழி எடுக்கும் போது பூமியின் அடிபரப்பில் கடினமான பாறைகள் அல்லது இறுக்கமான மண் (இறுகலான சட்டு மண்) பரப்பு கிடைக்கும் வரை குழி தோண்ட வேண்டியது அவசியமானது. அதன் பின் சிமெண்ட், ஜல்லி, மணல் மற்றும் கம்பிகளை கொண்டு குழியில் தூண்கள் போன்ற அமைப்பினை ஏற்படுத்தி கொண்டு வரவேண்டும். பூமின் மேற்பரப்பு வரும்போது வீடு கட்டுமான அகலத்திற்க்கு சுற்றிலும் காங்கிரீட் பெல்ட் அமைக்க வேண்டும். அதன் பின்னரே வீடு கட்டும் பணியை தொடங்க வேண்டும்.

பில்லர் அமைத்து வீடு கட்டும் முறைக்கு தேவையான பொருட்கள்:

🏯 மேடை மண் (கிராவல் மண்)

🏯 சிமெண்ட் ஆற்று மணல் அல்லது எம் சாண்ட் (கற்களை தூளாக்கி எடுப்பது)

🏯 செங்கல்

🏯 பூசுவதற்கு மென்மையான மணல் அல்லது டி சாண்ட்

🏯 இரும்பு கம்பி

🏯 நிலவுகள்

🏯 ஜன்னல்

🏯 கதவு

🏯 டைல்ஸ் அல்லது கிரானைட் கற்கள்

🏯 ஜல்லி கற்கள் 1/4, 1/2, 3/4, 1.5

🏯 சிப்ஸ் ஜல்லி

🏯 காம்பவுண்ட் கட்ட ஹேலோ பிரிக்ஸ் கற்கள்

🏯 ஷெல்ஃப் (அலமாரி) அமைக்க கடப்பா கற்கள்

🏯 மரப் பலகைகள் அல்லது பிளைவுட்ஸ்

🏯 பில்லர் குழி மூடுவதற்க்கு ரப்ஸ்டோன்

🏡 மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் பொதுவாக வீடு கட்ட தேவைபடுபவை, வீட்டின் அகலம் மற்றும் நீளத்தை பொருத்து அதன் தேவைகள் மாறுபடும்.

கூறை வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏡 கூறை வீடு கட்ட கடக்கால் அமைப்பு பேஸ்மெண்ட் போதுமானது. கூறை வீடு கட்ட மேற்கூறிய பொருட்களுடன் (கடக்கால் முறை) கீழ்காணும் பொருட்கள் தேவைப்படும்.

🏯 சட்டம்

🏯 விட்டம்

🏯 மரக் கைகள்

🏯 ரீப்பர்

🏯 பனை ஓலை அல்லது தென்னங்கீற்று

🏯 வைக்கோல்

🏯 கரும்பு சோவை (கரும்பு இலைகள்)

🏡 கரும்பு சோவையால் வேயப்பட்ட வீடு வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும் மலை காலங்களில் வெது வெதுப்பாகவும் இருக்கும். பருவ நிலை மற்றும் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தானே மாற்றி கொள்ளும் இயல்பு உடையதாக இருக்கின்றது. இது உடலுக்கு தேவையான வெப்பத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்கிறது. மிக சிறந்த வீடு. 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு அவசியம் தேவைப்படுகிறது. A/c மற்றும் மின் விசிறி தேவை இல்லை.

ஓட்டு வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏡 ஓட்டு வீடு நவீன கால வளர்ச்சியின் இரண்டாம் படி என்றே கூறலாம். இதற்கும் சாதாரண கடக்காலால் ஆன பேஸ்மெண்ட் போதுமானது. ஆனால், கூறை வீட்டை விட சற்று கூடுதல் செலவாகும்.

🏡 மேற்கூறிய பொருட்களுடன் (கடக்கால் முறை) கீழ்காணும் பொருட்கள் தேவைப்படும்.

🏯 ஓடு

🏯 மரம்

🏯 ரீப்பர்

🏯 பனைமரத்து கைகள்

🏯 சட்டம்

🏯 விட்டம்

🏡 ஓட்டு வீட்டினால் நன்மைகள் குறைவு. பனி மற்றும் வெய்யில் காலங்களில் அந்தந்த பருவ நிலை அப்படியே வீட்டின் உட் புறத்திலும் நிலவும், பனிகாலத்தில் குளிர்ச்சி தன்மையை ஓடு ஈர்த்து வைத்து பகல் மற்றும் இரவில் குளிர்ச்சியாகவே இருக்கும், வெய்யில் காலங்களில் ஓடு சூட்டினை ஈர்த்து வைத்து பகல் மற்றும் இரவில் தொடர்ந்து அதே வெப்ப நிலையை கொடுப்பதால் கடுமையாக இருக்கும். இது உடலுக்கு உகந்தது அல்ல.

மாடி வீடு அல்லது அடுக்கு மாடி வீடுகள் வீடு கட்டும்போது தேவையான பொருட்கள் என்ன?

🏡 மாடி வீட்டிற்கு தளம் அமைக்க, மேற்கூறிய பொருட்களின் (கடக்கால் அல்லது பில்லர் முறை) அளவு அதிகமாக தேவைப்படும்.

🏡 மாடி வீடு, அடுக்கு மாடி வீடு, தார்ஸ் வீடுகள் கட்ட அதிக பணம் தேவைபடுகிறது. இவைகளும் ஓட்டு வீட்டை போல வெப்பம் மற்றும் குளிர்ச்சியை அப்படியே வீட்டின் உட்புறம் கடத்துகிறது. காலத்திற்கு ஏற்றது போல் தன்னை மாற்றி கொள்ளும் தன்மை இல்லை. வீட்டின் சுவர்களை அகலமாக அமைத்தால் வெப்பம் மற்றும் குளிர்ச்சியை கட்டுபடுத்த முடியும். அதற்கு குறைந்தது ஒன்றை அடி (36 செ.மீ) அகலம் உடைய சுவர் அமைக்க வேண்டும்.

Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

Thursday, April 18, 2024

கட்டிட பொருட்கள் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்


சொந்த வீடு கட்ட வேண்டும் எனத் தீர்க்கமாக முடிவெடுத்த பிறகுதான் நமக்கு அதை எப்படி கட்டப் போகிறோம் என பல குழப்பங்கள் வரும். வீடு என்பது நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கப்போவது. அதற்கு உயிர் இல்லை என்றாலும் நமது மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் அதன் பங்கு முக்கியமானது. வீடு என்னும் நண்பன் ஒழுங்காக இருந்தால் தான் வாழ்க்கை என்னும் பாதையில் நம்மால் ஆற்றலுடன் வாழ்க்கையில் பயணிக்க முடியும். 
கட்டிடப் பொருட்கள் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவைகள் :

தண்ணீர் :

🏡 கட்டிடப் பணிகளுக்குத் தண்ணீரின் தரம் முக்கியமானது. உப்புச் சுவை உள்ள தண்ணீர் என்றால் அது கட்டிடத்தின் உறுதிக்குப் பங்கம் விளைவிக்கும். அதனால் கட்டிடப் பணிகளுக்கு நல்ல தண்ணீர் உபயோகிக்க வேண்டும். அதனால் முதலில் தண்ணீர் சம்மந்தமான தேவையை கவனிக்க வேண்டும். கட்டிடப் பணிகளுக்காக முதலில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லையெனில் வேறவொரு கிணறு அமைக்கும் முன்னர் ஏற்கனவே உள்ள தண்ணீரில்லாத ஆழ்துளைக் கிணற்றை விரைவாக மூடிவிட வேண்டும். இதன் மூலம் பின்னாளில் ஏற்படும் எதிர்பாராத விபத்துக்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

செங்கல் :

🏡 வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்குப் பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
சிமெண்ட் :

🏡 கட்டிடத்தின் உறுதிக்கான மற்றொரு விஷயங்களில் ஒன்று, சிமெண்ட். அந்த சிமெண்டின் தரத்தை அதன் நிறத்தை வைத்தே ஒரளவு தீர்மானித்துவிடலாம். லேசான பச்சை நிறத்தில் இருந்தால் அது நல்ல சிமெண்ட் என ஊகித்துக்கொள்ளலாம். அதுபோல சிமெண்ட் மூட்டைக்குள் கை விடும்போது குளுமையாக இருந்தால் அது சிறந்த தரம் என அறிந்துகொள்ளலாம்.

🏡 சிமெண்டின் தரத்தை அறிய மற்றொரு முறை, அதைத் தண்ணீருக்குள் இடும்போது அது மிதந்தால் தரம் சரியில்லை என அறிந்துகொள்ள முடியும். சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ. அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஓரளவு குறைவாக இருந்தால் சரி. 1 கிலோவுக்கும் அதிகமாகக் குறைந்திருந்தால் அதை வாங்கிய இடத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
மணல் :

🏡 இன்றைக்குத் தங்கத்தைப் போல விலை மதிப்பான பொருளாக மணல் மாறிவிட்டது. விலை மதிப்பு அதிகமாக அதிகமாக அதில் கலப்படம் வந்துவிடும் அல்லவா? ஆற்று மணலில் தூசியைக் கலக்கிறார்கள். சிலர் ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலக்கிறார்கள். அதனால் ஆற்று மணலை முறையாகப் பார்த்து வாங்க வேண்டும். கடல் மணலைக் கண்டுபிடிக்க மணலின் உப்புச் சுவையைப் பரிசோதித்தாலே போதும். கடல் மணலில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். மணலில் அதிகமாகக் குருணை இருந்தால் பயன்படுத்தத் தகுதியில்லாததாக இருக்கும். குருணை அதிகமாக உள்ள மணல் சிமெண்டுடன் கலக்காது.

கம்பிகள் :

🏡 இப்போதுள்ள நவீனத் தொழில்நுட்பத்தைத் துணிச்சலாகப் பயன்படுத்த வேண்டும். அதனால் நேரமும் கூலியும் மிச்சமாகும். உதாரணமாக ரெடிமேட் கட்டுமானக் கம்பிகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. கட்டிடத்தின் வரைபடத்திற்குத் தகுந்தாற்போல் அவர்களே கம்பியை வளைத்துக் கொண்டு வந்து இடத்திலேயே இறக்கிவிடுவார்கள். முன்புபோலக் கட்டுமான இடத்தில் தனியான இடத்தை நிர்மானித்துக் கம்பிகளை வளைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

🏡 அதுபோல சிமெண்ட் கலவையிலும் தேவையான அளவு ரெடி மிக்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொதுவானவை :

🏡 கட்டுமானத்திற்குப் பிரித்துப் பார்க்க முடியாத அளவில் உறுதியும் உருவமும் தருவது செங்கல். இதன் தரத்தை அறிய ஓர் எளிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. நாலைந்து செங்கற்களை எடுத்து நீரினுள் இட வேண்டும். 24 மணி நேரத்திற்குப் பிறகு அதை எடுத்து விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் அந்தச் செங்கற்கள் தரம் குறைவானவை என அறிந்துகொள்ளலாம்.
🏡 இப்போது பலவகையான மாற்றுச் செங்கற்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் விலையும் மிச்சமாகும், தரத்திலும் சிறந்தவையாக இருக்கும். தேவையைப் பொறுத்து, அதற்கு தகுந்த கற்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

🏡 சுற்றுச் சுவர்களுக்கு ஹாலோ செங்கல் மிகவும் உகந்தவையாக இருக்கும். இப்போது வீடு கட்டுவதற்கும் இவ்வகையான மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவது நல்லது எனப் பசுமைக் கட்டிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

🏡 பாரம்பரிய முறையிலான செங்கற்கள் தயாரிக்க ஆகும் ஆற்றலால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது மாற்றுச் செங்கற்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை. அதனால் கூடியவரை நாம் மாற்றுச் செங்கற்களைக் கட்டிடப் பணிகளுக்குப் பயன்படுத்துவோம்.

🏡 கட்டுமானப் பொருள்களைக் கையாளும்போது அவற்றில் சிறிதளவு வீணாகக்கூடும். அவை சிறிய அளவாக இருந்தால் சரி. அப்படியில்லாமல் அஜாக்கிரதையாகக் கட்டுமானப் பொருள்களை கையாண்டு அதன் மூலம் ஆகும் கட்டுமானச் சேதாரத்திற்கு நாம் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை. அதனால் பணிகள் நடக்கும் இடத்திலிருந்து சேதாரத்தைக் கண்காணிக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் சேதாரம் என ஒப்பந்தக்காரர்கள் கூறினால் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

🏡 கான்கிரீட்டுக்கு வலுச் சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைக் கம்பிகளைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். கம்பிகளில் உள்ள பிசிறுகளை நீக்கிவிட்டே பயன்படுத்த வேண்டும். துரு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கம்பியின் மீது எவ்விதமான கறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது அடையாளத்திற்காக கம்பிகள் மீது பெயிண்ட் அடித்திருக்கக்கூடும். அதுபோல எண்ணெய்க் கறை, சேறு இதுபோன்ற கறைகளையும் நீக்க வேண்டும். இம்மாதிரியான கறைகளுடன் கம்பியைக் கட்டிடப் பணிகளுக்கு உபயோகித்தால் கம்பி, சிமெண்டுடன் வலுவான பிணைப்பை உண்டாக்காமல் போய்விடும்.

🏡 மின்சார இணைப்பைப் பொறுத்தவரை தரமுள்ள வயர்களை வாங்குங்கள். விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அதிக ஆற்றல் கடத்தாமல் வீணாகும் வயர்களை வாங்காதீர்கள். அதனால் மின்சாரம் வீணாகி நாட்டுக்கும் வீட்டுக்கும் நஷ்டம் உண்டாகும்.

🏡 சுவிட்சுகளின் விஷயத்திலும் கவனம் தேவை. மலிவான வகை சுவிட்சுகள் விபத்தை உண்டாக்கக் கூடியவையாக இருக்கும். வீட்டுக்கு விளக்குகளை அமைக்கும்போது முன்கூட்டியே திட்டமிடுங்கள். அறைக்குத் தகுந்தவாறு வண்ண விளக்குகளை அமையுங்கள்.

🏡 வீட்டுக்கான கதவுகள், ஜன்னல்கள் செய்யும்போது வீண் கவுரவத்திற்காக எல்லாவற்றையும் மரத்தால் செய்ய வேண்டாம். முக்கியமான நுழைவு வாயிலை மட்டும் மரத்தைக் கொண்டு செய்யலாம். ஜன்னல்களையும் மரத்தால் செய்யலாம். ஆனால் கழிவறைக் கதவு போன்றவற்றிற்கு ரெடிமேட் பிளாஸ்டிக் கதவுகளைப் பயன்படுத்தினாலேயே போதுமானது. மரப் பொருள்களின் பயன்பாடு வீடு கட்டுவதில் அதிகம் செலவு வைக்கக்கூடியது. அதனால் அதில் கவனமாக இருங்கள். அழகும் பாதுகாப்பும்தான் முக்கியமே தவிர ஆடம்பரம் அல்ல.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

 #SreeKonguPromoters #RealEstateKovai #RKRealEstateKovai #Compacthouse #Budgethouse #Houses 
#1bhk #2BHK #3BHK #4BHKHouse 
#Housedesign #Landforsale #DreamHome #DreamHouse #Housebuying #HouseSelling #OldHouse #ResaleHouse #Coimbatore #2bhkapartment #3bhkapartment #Houseforsale #apartment #Flats  #Readytooccupy #Construction  #NewHouse


Monday, March 11, 2024

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் லாரி பேக்கர் தொழில்நுட்பம்

🏡 நம் வீடுகட்டுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் அதில் மிகவும் முக்கியமானவை கட்டிடம் கட்டும்போது அதற்கான தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு கட்டுவதன் மூலம் நாம் செலவினை குறைக்கலாம். அவ்வாறு கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறைகளில் சிலவற்றை பற்றி இங்கு காண்போம்.
அமைப்பு :

🏡 கட்டிடத்தின் அமைப்பும் கட்டுமான செலவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக 20 மீ^2 அளவுள்ள ஒரு கட்டிடத்தை 4 மீ அகலமும் 5 மீ நீளமுமாக சதுர வடிவில் அமைத்தால் கட்டுமான செலவு மிகவும் கூடும். ஏனென்றால் சுவரின் சுற்றளவு (Perimeter) 18 மீ வரும் இதையே செவ்வக வடிவிலோ, அரை வட்ட அல்லது வட்ட வடிவில் அமைத்தால் சுவரின் சுற்றளவு குறையும்.

🏡 தேவையான ஏரியாவும் நமக்கு கிடைக்கிறது, அதே சமயம் சுவரின் சுற்றளவு குறைவதால் செங்கல் கட்டும் கணிசமான அளவில் குறைகிறது. கீழ்காணும் அட்டவணையில் 20 மீ^2 பயன்பாட்டு ஏரியாவிற்கு பல அமைப்புகளில் (Shape) வெளிச்சுவர்களின் சுற்றளவு மீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. 
🏡 இதில் சதுரமான அமைப்பை விட செவ்வகமான மற்றும் வட்ட வடிவ அமைப்பே செலவை குறைக்கும் வழிமுறைகளில் சிறந்தது என அறியலாம். (இந்த அமைப்பில் செவ்வகத்தை விட சதுர அமைப்பே சுவரின் சுற்றளவு குறைவாக வருகிறது.)

🏡 வட்ட வடிவமும் செவ்வக அமைப்பும் ஒரே சுற்றளவுதான் என்றாலும் நம்முடைய தேவைகளை கருத்தில் கொண்டு அமைப்புகளை முடிவு செய்வது நலம். ஒரே கட்டிட ஏரியா அதன் அமைப்பின் மூலம் மனையில் அதிக அளவு காலியிடத்தை ஏற்படுத்துகிறது.

🏡 நமக்கு தேவையான இடமும் கிடைக்கும் அதே நேரத்தில் அதிக அளவு காலியிடங்களின் மூலம் வீட்டிற்கு கிடைக்கும் காற்றோட்டமும் அதிகரிக்கும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு வீட்டினுள் கிடைக்கும் காற்றோட்டம் முக்கிய பங்காக அமைகிறது.
செங்கல் சுவர் :

🏡 செங்கல் சுவர்களை பூசாமல் விடுவதன் மூலம் கணிசமான அளவு செலவை குறைக்கலாம். செங்கல் சுவர்களுக்கு அது போன்ற பூச்சானது தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது.

🏡 அவ்வாறு சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு.

🏡 செங்கல் கட்டும்போது வழக்கமான "இங்கிலீஸ் பாண்ட் (Engilish Bond)" க்கு பதிலாக "ரேட் டிராப் பாண்ட் (Rat trap Bond)" உபயோகித்தால் செலவும் குறையும், அதே நேரத்தில் சுவரில் கேவிட்டி அமைப்பும் இருப்பதால் எந்த விதமான தட்பவெப்ப நிலைக்கும் வீட்டினுள் இதமான அமைப்பை ஏற்படுத்துகிறது.

ரேட் டிராப் பாண்ட் (Rat trap Bond) :

🏡 சுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது. அது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன.

🏡 லாரி பேக்கர் கட்டிய உயர்தர விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிலையங்கள் போன்றவை இயற்கை சூழலுடன் இணைந்து ஆடம்பரம் இல்லாத அழகுடன் திகழ்பவை. மருத்துவர்கள் லாரிபேக்கர் பாணி கட்டிடங்கள் நோயாளிகளுக்கு ஆறுதலானவையாக இருப்பதாக கூறிகிறார்கள்.
🏡 குளிரூட்டும் வசதிக்காக லாரி பேக்கர் உருவாக்கிய உத்தியும் அபாரமானது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்கி அதனை சுற்றி சுட்ட செங்கலால் ஆன சுவரை அமைத்து விடுவார். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியை செய்யும்.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

Monday, June 5, 2023

தவணை முறையில் வீட்டு மனை வாங்கும்போது

🏡 கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்து மொத்தத் தொகையாக கொடுத்து நிலமோ, வீடோ வாங்கலாம் என நினைப்பவர்கள் குறைவு. ஏனெனில் ஏதாவதொரு வழியில் சிறுகச் சிறுக சேர்க்கின்ற பணம் செலவாகிக் கொண்டேயிருக்கும். அதனால் தவணை முறையில் நிலத்தையோ, வீட்டையோ வாங்க நினைப்பவர்களே அதிகம். தவணை முறையில் வீடு வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை :

🏡 தவணைமுறையில் மனை வாங்கும்போது முதலில் இடத்தை நேரில் சென்று கண்டீப்பாக பார்வையிட வேண்டும்.

🏡 இடத்திற்கான பத்திரத்தை வைத்து மட்டும் முடிவு செய்துவிடாமல், தாய்ப்பத்திரத்தையும் பார்க்க வேண்டும்.

🏡 தாய்ப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாரிசுகள் அனைவரும் கையொப்பமிட்டுள்ளார்களா என்பதைக் கவனிக்கவேண்டும்.
🏡 பட்டா, வில்லங்கச் சான்றிதழ், வரி ரசீதுகள் இவற்றையும் சரிபார்க்க வேண்டும்.

🏡 குறிப்பிட்ட மனை அல்லது நிலத்தின் பத்திரம் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறதா? பத்திரங்களில் உள்ள நில அளவுகள் சரியாக இருக்கின்றனவா? அந்தப் பகுதியின் (ஊராட்சி / நகராட்சி / பேரூராட்சி/ மாநகராட்சி) அனுமதி பெறப்பட்டிருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
🏡 விளம்பரங்களை அப்படியே நம்பிவிடாமல் மேற்கூறப்பட்டுள்ள அனைத்தையும் அரசு ஆவணங்கள் மூலம் சரிபார்த்துக் கொண்டால் ஏமாறாமல் இருக்கலாம்.

🏡 பத்திரப்பதிவு இலவசம், சலுகை விலை, சிறப்புப் பரிசு, இலவச சுற்றுலா போன்ற விளம்பர வார்த்தைகளை நம்பி நிலம்/வீடு இவற்றை வாங்கக் கூடாது. அந்த பகுதியின் விலை நிலவரம், உள்கட்டமைப்பு வசதிகள் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

🏡 முதலில் ஒரு தெளிவான ஒப்பந்தத்தை 20 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதி அதை பதிவு செய்து கொள்வது அவசியம்.
🏡 வாங்குகிற இடம் முன்னர் விவசாய நிலமாக இருந்திருந்தால் அதில் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

🏡 புறம்போக்கு, கண்மாய், குளம், பிறருக்குச் சொந்தமான நிலங்கள் இவற்றையும் கூட விற்பனை செய்து ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். ஏமாறாமல் இருக்க ஒப்பந்தம் போட்டுக் கொள்வதும், ஆவணங்களை சரிபார்ப்பதும் மிக அவசியம்.

🏡 முதலீடு நோக்கத்திலோ அல்லது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டோ வீட்டுமனை வாங்குவதாக இருந்தால் அந்த இடத்தின் அருகில் தற்போதைய வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதையும், குறிப்பிட்ட சில ஆண்டு இடைவெளியில் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதையும் விரைவில் அந்த இடம் வளர்ச்சி அடையுமா? போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒப்பந்தம் செய்யும்போது :

🏡 ஒப்பந்தத்தில் விலை எவ்வளவு? மாதத் தவணை செலுத்த வேண்டியது எவ்வளவு? எத்தனை மாதங்கள் செலுத்த வேண்டும்? இவற்றைக் குறிப்பிட வேண்டும்.

🏡 மனை எண், மனையின் பரப்பளவு எவ்வளவு என்பதைக் குறிப்பிட வேண்டும்.
🏡 ஒருவேளை கிரையம் செய்யத் தாமதமானால் அத்தனை நாட்களுக்குண்டான வட்டியைத் தரவேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

🏡 ஒருவேளை இரண்டு வருடம் தவணை செலுத்தி அது முடியும் தருவாயில் அந்த இடத்தின் விலை கூடியிருந்தால் அதிகப் பணம் செலுத்தக் கட்டாயப்படுத்தலாம். இதனையும் ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.

பணம் செலுத்தும் போது :

🏡 தவணை முறையில் பணம் செலுத்தும்போது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பிடித்தம் செய்துகொள்ளுமாறு இ.எம்.ஐ வசதியைத் தேர்ந்தெடுக்கவும். இதனால் குறிப்பிட்ட நாளில் பணம் செலுத்தப்படுவதோடு, பணம் யாருக்கு செலுத்தப்படுகிறது என்ற விபரங்களையும் வங்கிக் கணக்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மொத்தமாகப் பணம் செலுத்தும் பட்சத்திலும்கூட காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ செலுத்தவும். அதன் ரசீதுகளையும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

வீடு வாங்கும்போது தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் :

🏡 வீடு வாங்கும்போதும் நிலம் வாங்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அத்துடன் கூடுதலாக சில விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

🏡 புரமோட்டர் அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரின் பின்புலத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.

ஆவணங்களை சரிபார்ப்பது எப்படி?

🏡 பவர் ஆஃப் அட்டானி கொடுக்கப்பட்டிருக்கிறதா? இடையில் இரத்து செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை பவர் ஆஃப் அட்டானி கொடுத்தவரை சந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

🏡 பதிவு அலுவலகத்திற்கு சென்று பட்டா, சிட்டா, புல வரைபடம், பதிவேடு ஆகியவற்றை சரிபார்த்து கொள்ள வேண்டும். இந்த ஆவணங்களின் ஒளி நகல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

🏡 விற்பவர் அந்த நிலத்தின் உரிமையாளரா? சொந்தமாக விற்கிறாரா? அல்லது விற்பனை உரிமை பெற்றவரா? விற்பனை உரிமை பெற்றதின் ஒப்பந்தம் ஆகியவற்றை அறிந்து கொள்வது கட்டாயம்.

தவணை முறையில் வீட்டுமனை வாங்குவோருக்கான எச்சரிக்கை :

🏡 பெரும்பாலும், ஐந்து ஏக்கரில் பிளாட் போடுவதாக அறிவித்தால், இரண்டு ஏக்கர் மட்டுமே, கிரையம் செலுத்தி வாங்கிவிட்டு, மீத தொகையை, அட்வான்ஸ் போட்டு வைத்து கொள்வார்கள், நம்மிடம் தவணை முறையில் விற்பவர்கள். நம்மிடம், மாதம் மாதம் தொகை வாங்கியே, நிலத்தின் உரிமையாளருக்கு செலுத்துகிறார்கள். இது தவிர, ஏஜென்டு மூலம் பணம் கட்டும்போது எச்சரிக்கையாக இருக்காவிட்டால், அவர், தவணை scheme போடுபவரிடம், நம் பணத்தை ஒப்படைக்கிறாரா ? என்று சரிபார்த்து கொள்வது நல்லது.

🏡 தவணை முறையில் வீட்டு மனை எனும் பெயரில் ஒரே நிலத்தையே இரண்டு பேருக்கு அல்லது பலருக்கு விற்கிற மோசடிகளும் நடக்கின்றன. தாய்ப்பத்திரம், பத்திரம், பட்டா எல்லாம் சரியாக இருக்கும். தவணை முடிந்த பிறகுதானே பத்திரப் பதிவு செய்து கொடுக்கப்படும். 

🏡 அப்போது இன்னொருவரும் அந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடுவார். இதுபோன்ற நேரங்களில் ஆரம்பத்தில் செய்து கொண்ட ஒப்பந்தம் உங்களுக்குக் கைகொடுக்கும். இதன்மூலம் ஒருவருக்கு மனையைக் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கட்டியபணத்தைத் தருவதாக சொல்லிவிடுவார்கள். 

🏡 இதனால் இரண்டு மூன்று வருடம் பணம் கட்டி காத்திருந்த கனவு கலைந்துபோவதும் உண்டு. தவணை முறையில் வாங்குவதைவிட மொத்தத் தொகை செலுத்தி வாங்குவதே நல்லது. அதையும் வங்கிக் கணக்கின் மூலம் செலுத்துவது சிறந்தது அல்லது தவணை முறையில் ஆரம்பித்து, இடையில் காஷ் பிளாட் என்று போட்டால் அதை வாங்கி, மீத தவணையை மட்டும் உடனே கட்டி வாங்கி விடுங்கள்.

Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

 #SreeKonguPromoters #RealEstateKovai #RKRealEstateKovai #Compacthouse #Budgethouse #Houses 
#1bhk #2BHK #3BHK #4BHKHouse 
#Housedesign #Landforsale #DreamHome #DreamHouse #Housebuying #HouseSelling #OldHouse #ResaleHouse #Coimbatore #2bhkapartment #3bhkapartment #Houseforsale #apartment #Flats  #Readytooccupy #Construction  #NewHouse

Friday, April 28, 2023

டைல்ஸ், மார்பில்ஸ் கற்களை எப்படி தேர்ந்தெடுப்பது ?

🏡 கிரானைட், மார்பில்ஸ் என்று எத்தனையோ வகை தரைகள் வந்துவிட்டபோதும், இன்றும் பலரின் தேர்வு டைல்ஸாகவே இருக்கிறது. வீட்டுக்கான கட்டுமானத்துக்கு டைல்ஸ் வகைகளை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியகள்.
🏡 டைல்ஸை பொருத்தவரை செராமிக் (Ceramic), பாலியஸ்டர் விட்ரோலைட் (Polyester Vitrolite), கிளாஸ்ட் விட்ரோலைட்(Glazed Vitrolite) என மூன்று வகைதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, நீரை உறிஞ்சும் தன்மையைப் பொறுத்து, இந்த மூன்று வகை டைல்ஸின் தரம், உழைக்கும் தன்மை, ஆயுட்காலம் ஆகியவை வகைப்படுத்தப்படுகின்றன. 

🏡 25 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் செராமிக் வகை டைல்ஸ், வீட்டின் உள்ளே சுவர்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய டைல்ஸ் அதிக கீறல்களுக்கு (scratch) உட்படும் தன்மை கொண்டிருப்பதால், தரைகளுக்குப் பயன்படுத்த உகந்ததல்ல.
🏡 பாலியஸ்டர் விட்ரோலைட் வகை டைல்ஸ், நீரை உறிஞ்சும் தன்மை குறைவாகக் கொண்டிருப்பதால் இவை வீட்டின் தரைகளுக்குப் பயன்படுத்த உகந்தவையாக இருக்கின்றன. அதிக கடினத்தன்மையுடன், அதிக வெப்பநிலையில் பதிக்கப்படுவதால் இவை நீண்ட ஆயுள் கொடுக்கும். 

🏡 கிளாஸ்ட் விட்ரோலைட் டைல்ஸ் வகைகள், பாலியஸ்டர் வகையை விட அதிக டிசைன், கலர், லுக், கிராக் ஆகாத தன்மையில் கிடைக்கும். நீடித்த ஆயுள் கொடுக்கும் இந்த வகை டைல்ஸின் விலையும் அதிகம்.

🏡 பாலியஸ்டர் விட்ரோலைட் மற்றும் கிளாஸ்ட் விட்ரோலைட் வகை டைல்ஸ் கிச்சன், வரவேற்பறைகளில் பயன்படுத்த பொருத்தமானதாக இருக்கும். மேலும் கிச்சன் மற்றும் டைனிங் தேவைகளுக்காக, செராமிக் ஆன்டி ஸ்கிட் டைல்ஸ் தனியாக விற்கப்படுகின்றன. 
அளவுகள் :

🏡 வீட்டின் வடிவமைப்பு, தேவை, செலவு போன்ற தேவைகளுக்கு ஏற்ப டைல்ஸ் வகைகளை அமைத்துக் கொள்ளலாம். குறிப்பாக வீட்டின் கிச்சன்களுக்கு இன்ச் அளவுகளில் இருந்து அடி அளவு வரையிலான டைல்ஸை பயன்படுத்துகிறார்கள். 

🏡 வீட்டின் வரவேற்பறை மற்றும் படுக்கை அறையில் பொதுவாக அடி அளவுகளில்தான் டைல்ஸ் பயன்படுத்தப்படும். பெரும்பாலானோர், வரவேற்பறை மற்றும் பெட்ரூமுக்கு 2*2 என்ற அளவு டைல்ஸ்தான் பயன்படுத்துகிறார்கள். வீட்டு சுவருக்கு இணையான நிறத்தில் டைல்ஸை அமைத்தால் நல்ல லுக் கிடைக்கும். 

விலை நிலவரம் (சதுர அடியில்) :

🏡 செராமிக் - ரூ.25 - இருந்து கிடைக்கும்.

🏡 பாலியஸ்டர் விட்ரோலைட் - ரூ.40 – 50 - இருந்து கிடைக்கும்.

🏡 கிளாஸ்ட் விட்ரோலைட் - ரூ.70-100 - இருந்து கிடைக்கும்.

ஆயுட்காலம் :

🏡 செராமிக் - 15 ஆண்டுகள் வரை.

🏡 பாலியஸ்டர் விட்ரோலைட் - 25 ஆண்டுகள் வரை.

🏡 கிளாஸ்ட் விட்ரோலைட் - 25 முதல் 30 ஆண்டுகள் வரை.

🏡 வீட்டைக் கட்டும்போதே அந்தப் பகுதிக்கு எந்த மாதிரியான டைல்ஸ்களைத் தேர்வு செய்வது நல்லது. இது வீட்டின் அழகை மட்டுமின்றி, அதில் வசிக்க உள்ள குடும்பத்திற்கான வசதியையும் அதிகரிக்கும்.

🏡 பொதுவாக வரவேற்பறையில் பயன்படுத்துவதற்கு அதிக ஸ்திரத்தன்மையும், நீடித்த ஆயுளும் கொண்ட டைல்ஸ் ரகங்களைத் தேர்வு செய்வதே நல்லது. குறிப்பாகப் போர்சிலின் (Porcelain) ரக டைல்ஸ் மிகச் சரியான தேர்வாக இருக்கும்.

🏡 போர்சிலின் ரகத்துக்கும் செராமிக் டைல்ஸ் ரகத்துக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், இவை இரண்டும் ஒன்றுதான் எனப் பலரும் தவறாக நினைக்கிறார்கள். 

🏡 போர்சிலின் ரக டைல்ஸ், செராமிக்கைவிட விலை அதிகமானது. தரத்திலும், செராமிக்கை விட சிறந்தது. தண்ணீரைக் குறைவாக உறிஞ்சும் திறன்கொண்டது என்பதால், அதில் நடப்பவர்கள் எளிதில் வழுக்கி விழ மாட்டார்கள். எனவே, குளியலறைக்கும் இந்த வகை டைல்ஸ்களைப் பயன்படுத்தலாம்.

கிளாஸ் டைல்ஸ் :

🏡 இந்த வகை டைல்ஸ் ஈரத்தை உறிஞ்சாது. எனவே இதையும் குளியலறைகளில் பயன்படுத்தலாம். சுத்தப்படுத்துவதும் எளிது. பலரும் இதனை சமையலறையை அலங்கரிக்கவும் பயன்படுத்துகின்றனர். கிளாஸ் டைல்ஸில் வாடிக்கையாளர் விரும்பும் வண்ணத்தில் ஓவியங்கள் அல்லது உருவங்களைச் சுலபமாக உருவாக்கலாம். எனவே, சமையலறை மற்றும் குளியலறையை அலங்கரிக்க விரும்புபவர்கள் கிளாஸ் டைல்ஸைத் தேர்ந்தெடுக்கலாம்.

செராமிக் :

🏡 செராமிக் ரக டைல்ஸ் விலை குறைவானது. வீட்டின் அழகை மெருகேற்றவும் செய்யும். ஆனால், போர்சிலின் டைல்ஸ் அளவுக்கு ஈரத்தை உறிஞ்சாது. இதைச் சமையலறை, குளியலறையில் பயன்படுத்த முடியும். பூஜை அறையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் பயன்படுத்தலாம். குறைவான விலை என்பதால், மலிவு விலை வீடுகள், பட்ஜெட் வீடுகள் கட்டுபவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

நேச்சுரல் ஸ்டோன் டைல்ஸ் :

🏡 இந்த வகை ரகம் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால், நீடித்து உழைக்கக் கூடியது. வீட்டுக்குள் மட்டுமின்றி, வெளிப்புறப் பகுதிகளிலும், வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டிய நடைபாதை, தோட்டத்துக்கான வழித்தடம் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். 

🏡 நடுத்தர விலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த நேச்சுரல் ஸ்டோன் டைல்ஸ் அதிக வெப்பம் அல்லது பனிப் பொழிவைத் தாங்கக்கூடியது. எனவே இதன் ஆயுள் காலம் மற்ற ரக டைல்ஸ்களைவிட அதிகம். 

🏡 ஆனால், இயற்கையான முறையில் உருவாக்கப்படுவதால், இந்த ரக டைல்ஸ்களில் உருவம் அல்லது நிற ஒற்றுமை பெரும்பாலும் இருக்காது. இந்த டைல்ஸைச் சொர சொரப்பான தன்மை உடையதாகவும் மாற்ற முடியும். குளியலறைக்குப் பயன்படுத்தும்போது சொரசொரப்பான நேச்சுரல் ஸ்டோன் டைல்ஸைப் பயன்படுத்துவது சிறந்தது.

மொசைக் :

🏡 மொசைக் டைல்ஸ் வகைகள் பண்டைய காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ரகம். வீட்டுக்குள்ளே இயற்கைக் காட்சிகள் அல்லது ஓவியங்களை மாட்டி வைப்பதற்குப் பதிலாக, சுவரில் பதிக்கும் கற்கள் மூலமாகவே அதனை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டதுதான் மொசைக் டைல்ஸ். 

🏡 தற்போது இதன் தயாரிப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இந்த வகை டைல்ஸ்கள் வழுக்கும் தன்மை உடையவை. எனவே பூஜை அறையில் கடவுள் படங்களை ஓவியம் போல் வடிவமைக்கவும், சமையலறையில் இயற்கை காட்சிகளை உருவாக்கவும் இந்த மொசைக் டைல்ஸைப் பயன்படுத்தலாம்.

🏡 தற்போது மொசைக் டைல்ஸில் போட்டோ பிரிண்டட் டிஜிட்டல் டைல்ஸும் வந்து விட்டது. ஒரு புகைப்படத்தைப் பிரிண்ட் செய்தால் எப்படித் துல்லியமாகக் கிடைக்குமோ அதே போல், உங்கள் வீட்டுச் சுவரிலும் அதன் உருவத்தைப் பதியலாம். குழந்தைகளுக்கான அறையில் போட்டோ பிரிண்டட் டிஜிட்டல் டைல்ஸ் மூலம் அவர்களின் புகைப்படங்களைச் சுவராகவே உருவாக்கி விடலாம்.

ஸ்டெய்ன் ஃப்ரீ டைல் :

🏡 வீட்டின் சமையலறைக்குப் பயன்படுத்த உகந்த டைல்ஸ் இது. காபி கொட்டினாலும், எண்ணெய் சிந்தினாலும் இந்த வகை டைல்ஸ்களை எளிதாகச் சுத்தப்படுத்திவிடலாம். 

🏡 இதைத் தவிர கீரல்களை தவிர்க்கும் ஸ்கிராப் ஃப்ரீ டைல்ஸ் ரகங்களும் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. வரவேற்பறை அல்லது வீட்டின் ஹாலில் அதிக எடையுள்ள சோபா போன்ற பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்த்தும்போது டைல்ஸ்களில் கீறல் விழுவதைத் தவிர்க்க இதைப் பயன்படுத்தலாம்.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex  and Glow Sign Boards, LED Board, Vinyl Printing,  Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai