Thursday, April 25, 2024

வீடு கட்ட கட்டிட பொறியாளர் (சிவில் இஞ்சினியர்) அனுமதி அவசியமா?

🏡 ஒரு அனுபவம் உள்ள பொறியாளரை ஒரு வீடு, வணிகக்கடை, தொழிற்சாலை கட்டிடம் கட்ட அணுகினால், கட்டிட வரைபடம் உங்கள் விருப்பம், தற்போதைய மற்றும் பிற்காலத் தேவையை கருத்தில் கொண்டு இன்றைய நவீன காலத்திற்கும் அரசு விதிகளுக்கும், நமது கலாச்சாரமும் வாஸ்து வடிவமைப்பும் பொருந்தும் வண்ணம் உங்கள் மனையின் நீள அகலம் ஆகியவை மற்றும் அந்தப்பகுதி நில அமைப்பு மற்றும் பிற்கால வளர்ச்சியையும் அடங்கும் வடிவத்தில் வரைபடம் தயாரித்துக் கொடுப்பார். 
🏡 வீடு கட்டுவதற்கான திட்டம் மற்றும் வடிவமைப்பு, கண்காணிப்பு, தரக் கட்டுப்பாடு, திட்ட அனுமதியின்படி கட்டுமானம் நிறைவு பெற்றிருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை பதிவு பெற்ற என்ஜினீயர்கள் தான் செய்ய வேண்டும். மேலும், 12 மீட்டர் உயரத்துக்குள் அமைந்த கட்டிடங்களுக்கு பதிவு பெற்ற கட்டிடக் கலை நிபுணர் (Registered Architect) அல்லது பதிவுபெற்ற பொறியாளர் (Registered Engineer) அனுமதி அவசியம்.

🏡 12 மீட்டருக்கு மேல் 18 மீட்டர் உயரத்துக்குள் அமைந்த கட்டுமானங்களை அமைக்க பதிவு பெற்ற டெவலப்பரின் அனுமதி வேண்டும். மேலும், ஸ்டக்சுரல் என்ஜினீயர், கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினீயர், ஜியோ டெக்னிக்கல் என்ஜினீயர் ஆகியோர்களது அனுமதியும் அவசியம்.
🏡 ஒரு கட்டிடத்தில் Structural Design செய்து வலிமை, பாதுகாப்பு மற்றும் செலவு குறைவான வடிவமைப்பில் கொடுப்பது ஒரு பொறியாளர் பணியாகும். எவ்வளவு அனுபவம் இருந்தாலும்கூட பொறியாளர் வாய்மொழியில் எவ்வளவு கான்கிரிட் மற்றும் கம்பியின் தேவை எவ்வளவு என்று சொல்ல கூடாது. கட்டிட வரைபடம் அதன் பயன்பாடு, அங்குள்ள மண்ணின் தரம் அனைத்தையும் கருத்தில்கொண்டு வடிவமைப்பு கணக்கிடு செய்து Structural வரைபடம் கொடுக்க வேண்டும்.

🏡 இன்று சந்தையில் ஒரே தேவைக்குப் பல நிறுவனங்களைச் சார்ந்த பொருட்கள் கிடைக்கின்றன. நம்முடைய தேவை என்ன, எப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களை அவை பூர்த்திசெய்ய வேண்டும், நம்முடைய பொருளாதாரச் சூழல் என்ன, தேவையான தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளை எந்தப் பொருள் நிறைவேற்றுகிறது என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பிறகுதான் நாம் அந்தப் பொருளை வாங்க வேண்டும். இந்தச் சூழலில் பொறியாளர் ஒருவரின் தேவை அவசியமானது.

🏡 ஒரு கட்டிடத்தை கட்டிமுடிக்க எவ்வளவு ஆட்கள், கட்டுமான பொருட்கள், உபகரணங்கள் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கீடு செய்து திட்டத்தின் மொத்தசெலவு தொகை எவ்வளவு வரும் என்றும், இந்த கட்டிடத்தை கட்டிமுடிக்க எவ்வளவு நாட்கள் தேவை எப்பொழுது எவ்வளவு என்ன பொருட்கள் மற்றும் ஆட்கள் தேவை என்பதை எல்லாம் கணக்கீடு செய்வதில் பொறியாளரின் பங்கு மிகவும் அவசியமாகும்.

🏡 கட்டிடவேலை தொடங்கவும், தொடங்கியபின் வேலையை வழிநடத்தவும், வரைபடத்தில் உள்ளதை திட்டத்தின் செலவு தொகையில் மாற்றம் இல்லாமல் அந்த கட்டிடத்தின் கட்டுமான வேலையை பூர்த்திசெய்யவும், வேலைகளுக்கு இடையில் ஏற்படும் சிறுசிறு மாறுதல்கள் மற்றும் இடர்ப்பாடுகளை சரிசெய்தல், தரமான பொருட்களை தேவையான அளவு வாங்கவும், அந்த பொருட்களை சரியாக கொண்டுவந்து சேர்க்கவும் பொறியாளரின் திட்டமிடல் அவசியம்.

🏡 மிக பெரிய வணிக வளாகங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டடுவதற்கு கண்டிப்பாக பொறியாளர்கள் தேவை. ஏனெனில் இதனை கொஞ்சம்திறன் பட செய்ய வேண்டும்.

🏡 வீடு கட்டும் முன்பு உங்களுடைய பகுதியின் தட்ப வெட்ப சூழ்நிலை மண்ணின் தாங்கு திறன் இவை பற்றி நான்கு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் கட்டும் கட்டிடத்தை தாங்கும் அளவுக்கு தேவையான Concrete Reinforcement சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இதனை துல்லியமாக கணக்கிட்டு கொடுக்கு பொறியாளர்கள் தேவைப்படுவார்கள். 

🏡 ஏனெனில் இந்த Concrete Reinforcement என்பது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும், நீங்கள் பொறியாளர்கள் இல்லாத நபர்களை கொண்டு கட்டினால் 50 வருடம் இருக்க வேண்டிய கட்டிடம் 30 வருடத்திலேயே பழுதாக ஆரம்பித்து விடும்.

🏡 கட்டிடத்தின் பாதிப்பு என்பது உடனே நமக்கு தெரிய வராது. குறைந்தது 5 முதல் 10 வருடங்களில் இருந்து நீங்கள் பாதிப்பை உணர முடியும். ஆகவே இந்த மாதிரியான கட்டிடம் கட்டுவதில் சரியான பொறியாளர்களை தேர்தெடுத்து வீடு கட்ட வேண்டும்.

🏡 வீடு கட்டும் முன்பு architect ஒருவரை அழைத்து வீடு கட்ட போகும் இடம் மேலும் உங்களிடம் அதற்காக உள்ள பட்ஜெட் மேலும் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கூறினால் அவர் அதற்கு தகுந்தாற்போல் உங்களுக்கு வரைபடம் உருவாக்கி தருவார். ஒரு சில பொறியாளர்கள் அவர்களாகவே இந்த வரைபடத்தை வரைந்து கொடுப்பார்கள்.

🏡 இது உங்களுடைய வீடு எவ்வளவு பளுவை தாங்கும் அதற்கு எவ்வளவு கம்பி எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்ல கூடிய வரைபடம். இதை நீங்கள் ஒரு Structural Consultant மூலமாக பெற்று கொள்ளுங்கள்.

🏡 இந்த இரு வகையான வரைபடம் இல்லாமல் வரும் எந்த பொறியாளரையும் நீங்கள் உங்களுடைய வீட்டை கட்ட அனுமதிக்காதீர்கள். இந்த இரு வரைபடமும் மிகவும் முக்கியம்.

🏡 நமது பழங்கால முறை, அதாவது பெரிய வகை கற்களை கொண்டு அஸ்திவாரம் அமைத்து பின்பு அதன் மேல் சுவர் எழுப்பி இறுதியில் கூரையில் Concrete அமைப்பது. இவை இப்பொழுது பெரும்பாலும் கட்ட படுவதில்லை. ஆனால் இது தரமானது அல்ல என பலரும் கூறுவது உண்மையல்ல. நீங்கள் இந்த அமைப்பை பயன்படுத்தி 3 அடுக்கு மாடி வரை கட்டலாம். இது மாதிரியான கட்டிடத்திற்கு பெரிய வகையில் பொறியாளர்கள் தேவை இல்லை. உங்களுக்கு தெரிந்த கொத்தனாரை கொண்டே இது போன்ற வீட்டை கட்டி முடிக்கலாம்.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup : 🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup : 🇮🇳+91 8248479255

Tuesday, April 23, 2024

வீடு கட்டும் முறைகள் என்ன?

🏠 கடக்கால் வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏠 பில்லர் அமைத்து வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?
🏠 கூறை வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏠 ஓட்டு வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏠 மாடி வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏠 அடுக்குமாடி கட்ட தேவையான பொருட்கள் என்ன?

வீடு கட்டும் முறைகள் என்ன?

இரண்டு முறைகளில் வீடு கட்டலாம். வீடு எந்த அமைப்பில் கட்ட வேண்டும் என்று முதலில் தீர்மானிக்க வேண்டும்.

1) கடக்கால் முறை:

🏡 கடக்கால் எடுத்து வீடு கட்டுவது நமது பாரம் பரிய முறை. கட்டும் வீட்டின் நீளம் மற்றும் அகலம் எத்தனை அறைகள் அமைக்க இருக்கின்றமோ அனைத்து அறைகளின் நீளம் மற்றும் அகலத்திற்கும் கடக்கால் குழி எடுக்க வேண்டும்.
🏡 எடுக்கப்பட்ட கடக்கால் குழியை கற்களால் ஒரு அடி உயரம் முதலில் நிரப்பி அதன் மீது மண் கொட்டி நீர் பாய்ச்சும் போது மண் கற்களின் சந்துகளில் சென்று நிரம்பிவிடும். இப்படியாக ஒவ்வொரு அடியாக கற்கள் மற்றும் மண்ணால் நிரப்பி குழி முழுவதும் மூட வேண்டும்.

🏡 கற்களை இரண்டு மூன்று அடிகளுக்கு மொத்தமாக கொட்டி மண் மற்றும் தண்ணீர் கலவை விட்டால் மண் கற்களின் சந்துகளில் சென்று நிரம்பாது. பொதுவாக கட்டுமான ஆட்கள் இப்படிதான் செய்வார்கள். அதற்கு அனுமதிக்காதீர்கள். கட்டிடம் வலு இருக்காது. பேஸ்மெண்ட் வீக்காகி நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றத்தை தாக்கு பிடிக்காது. இதனை பேஸ்மெண்ட் போடுதல் என்றும் கூறுவார்கள்.

பேஸ்மெண்ட் அமைத்தல்

🏡 பேஸ்மெண்ட் இரண்டு முறைகளில் அமைக்கலாம். மேற் கூறிய படி கற்கள் மற்றும் தண்ணீர் கொண்டு நிரப்புதல் மற்றொன்று சிமெண்ட் மற்றும் ஜல்லிகற்கள் கலவையால் நிரப்புதல். இரண்டும் ஒரே அளவு தரத்தை தான் கொடுக்கின்றன. சிமெண்ட் முதலில் அதிக வலுவுடையதாக இருந்தாலும் சில சிமெண்டின் தரம் நாளடைவில் வலு குறைகிறது. கடலோர பகுதிகளில் சிமெண்ட் பேஸ்மெண்ட் அமைப்பு சிறப்பு உடையதாக இருக்கும். மேலும் இயற்கை சீற்றத்தை எளிதில் தாக்கு பிடிக்கும்.

கடக்கால் எடுத்து வீடு கட்டும் முறைக்கு தேவையான பொருட்கள்:

🏯 சதாரண கற்கள் (ரப்ஸ்டோன், மோடிகல், மோட்டா கற்கள் என்றும் கூறுவார்கள்)

🏯 கடக்கால் மூடுவதற்க்கு செம்மண்

🏯 கட்டுகள் (உளி கல், செவ்வக வடிவ கற்கள்)

🏯 மேடை மண் (கிராவல் மண்)

🏯 சிமெண்ட்

🏯 ஆற்று மணல் அல்லது எம் சாண்ட் (கற்களை தூளாக்கி எடுப்பது)

🏯 செங்கல்

🏯 பூசுவதற்கு மென்மையான மணல் அல்லது டி சாண்ட்

🏯 இரும்பு கம்பி

🏯 நிலவுகள்

🏯 ஜன்னல்

🏯 கதவு

🏯 டைல்ஸ்

🏯 ஜல்லி கற்கள் 1/4, 1/2, 3/4, 1.5

🏯 சிப்ஸ் ஜல்லி

🏯 காம்பவுண்ட் கட்ட ஹேலோ பிரிக்ஸ் கற்கள்

🏯 ஷெல்ஃப் (அலமாரி) அமைக்க கடப்பா கற்கள்
2) பில்லர் முறை:

பில்லர் அமைக்க தேவையானவை:

🏯 குழி எடுத்தல்

🏯 சிமெண்ட்

🏯 ஜல்லி கற்கள்

🏯 ஆற்று மணல்

🏯 தண்ணீர்

🏯 கட்டுமான கம்பிகள்

🏡 பில்லர் அமைக்க குழி எடுக்கும் போது பூமியின் அடிபரப்பில் கடினமான பாறைகள் அல்லது இறுக்கமான மண் (இறுகலான சட்டு மண்) பரப்பு கிடைக்கும் வரை குழி தோண்ட வேண்டியது அவசியமானது. அதன் பின் சிமெண்ட், ஜல்லி, மணல் மற்றும் கம்பிகளை கொண்டு குழியில் தூண்கள் போன்ற அமைப்பினை ஏற்படுத்தி கொண்டு வரவேண்டும். பூமின் மேற்பரப்பு வரும்போது வீடு கட்டுமான அகலத்திற்க்கு சுற்றிலும் காங்கிரீட் பெல்ட் அமைக்க வேண்டும். அதன் பின்னரே வீடு கட்டும் பணியை தொடங்க வேண்டும்.

பில்லர் அமைத்து வீடு கட்டும் முறைக்கு தேவையான பொருட்கள்:

🏯 மேடை மண் (கிராவல் மண்)

🏯 சிமெண்ட் ஆற்று மணல் அல்லது எம் சாண்ட் (கற்களை தூளாக்கி எடுப்பது)

🏯 செங்கல்

🏯 பூசுவதற்கு மென்மையான மணல் அல்லது டி சாண்ட்

🏯 இரும்பு கம்பி

🏯 நிலவுகள்

🏯 ஜன்னல்

🏯 கதவு

🏯 டைல்ஸ் அல்லது கிரானைட் கற்கள்

🏯 ஜல்லி கற்கள் 1/4, 1/2, 3/4, 1.5

🏯 சிப்ஸ் ஜல்லி

🏯 காம்பவுண்ட் கட்ட ஹேலோ பிரிக்ஸ் கற்கள்

🏯 ஷெல்ஃப் (அலமாரி) அமைக்க கடப்பா கற்கள்

🏯 மரப் பலகைகள் அல்லது பிளைவுட்ஸ்

🏯 பில்லர் குழி மூடுவதற்க்கு ரப்ஸ்டோன்

🏡 மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் பொதுவாக வீடு கட்ட தேவைபடுபவை, வீட்டின் அகலம் மற்றும் நீளத்தை பொருத்து அதன் தேவைகள் மாறுபடும்.

கூறை வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏡 கூறை வீடு கட்ட கடக்கால் அமைப்பு பேஸ்மெண்ட் போதுமானது. கூறை வீடு கட்ட மேற்கூறிய பொருட்களுடன் (கடக்கால் முறை) கீழ்காணும் பொருட்கள் தேவைப்படும்.

🏯 சட்டம்

🏯 விட்டம்

🏯 மரக் கைகள்

🏯 ரீப்பர்

🏯 பனை ஓலை அல்லது தென்னங்கீற்று

🏯 வைக்கோல்

🏯 கரும்பு சோவை (கரும்பு இலைகள்)

🏡 கரும்பு சோவையால் வேயப்பட்ட வீடு வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும் மலை காலங்களில் வெது வெதுப்பாகவும் இருக்கும். பருவ நிலை மற்றும் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தானே மாற்றி கொள்ளும் இயல்பு உடையதாக இருக்கின்றது. இது உடலுக்கு தேவையான வெப்பத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்கிறது. மிக சிறந்த வீடு. 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு அவசியம் தேவைப்படுகிறது. A/c மற்றும் மின் விசிறி தேவை இல்லை.

ஓட்டு வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன?

🏡 ஓட்டு வீடு நவீன கால வளர்ச்சியின் இரண்டாம் படி என்றே கூறலாம். இதற்கும் சாதாரண கடக்காலால் ஆன பேஸ்மெண்ட் போதுமானது. ஆனால், கூறை வீட்டை விட சற்று கூடுதல் செலவாகும்.

🏡 மேற்கூறிய பொருட்களுடன் (கடக்கால் முறை) கீழ்காணும் பொருட்கள் தேவைப்படும்.

🏯 ஓடு

🏯 மரம்

🏯 ரீப்பர்

🏯 பனைமரத்து கைகள்

🏯 சட்டம்

🏯 விட்டம்

🏡 ஓட்டு வீட்டினால் நன்மைகள் குறைவு. பனி மற்றும் வெய்யில் காலங்களில் அந்தந்த பருவ நிலை அப்படியே வீட்டின் உட் புறத்திலும் நிலவும், பனிகாலத்தில் குளிர்ச்சி தன்மையை ஓடு ஈர்த்து வைத்து பகல் மற்றும் இரவில் குளிர்ச்சியாகவே இருக்கும், வெய்யில் காலங்களில் ஓடு சூட்டினை ஈர்த்து வைத்து பகல் மற்றும் இரவில் தொடர்ந்து அதே வெப்ப நிலையை கொடுப்பதால் கடுமையாக இருக்கும். இது உடலுக்கு உகந்தது அல்ல.

மாடி வீடு அல்லது அடுக்கு மாடி வீடுகள் வீடு கட்டும்போது தேவையான பொருட்கள் என்ன?

🏡 மாடி வீட்டிற்கு தளம் அமைக்க, மேற்கூறிய பொருட்களின் (கடக்கால் அல்லது பில்லர் முறை) அளவு அதிகமாக தேவைப்படும்.

🏡 மாடி வீடு, அடுக்கு மாடி வீடு, தார்ஸ் வீடுகள் கட்ட அதிக பணம் தேவைபடுகிறது. இவைகளும் ஓட்டு வீட்டை போல வெப்பம் மற்றும் குளிர்ச்சியை அப்படியே வீட்டின் உட்புறம் கடத்துகிறது. காலத்திற்கு ஏற்றது போல் தன்னை மாற்றி கொள்ளும் தன்மை இல்லை. வீட்டின் சுவர்களை அகலமாக அமைத்தால் வெப்பம் மற்றும் குளிர்ச்சியை கட்டுபடுத்த முடியும். அதற்கு குறைந்தது ஒன்றை அடி (36 செ.மீ) அகலம் உடைய சுவர் அமைக்க வேண்டும்.

Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

Thursday, April 18, 2024

கட்டிட பொருட்கள் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்


சொந்த வீடு கட்ட வேண்டும் எனத் தீர்க்கமாக முடிவெடுத்த பிறகுதான் நமக்கு அதை எப்படி கட்டப் போகிறோம் என பல குழப்பங்கள் வரும். வீடு என்பது நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கப்போவது. அதற்கு உயிர் இல்லை என்றாலும் நமது மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் அதன் பங்கு முக்கியமானது. வீடு என்னும் நண்பன் ஒழுங்காக இருந்தால் தான் வாழ்க்கை என்னும் பாதையில் நம்மால் ஆற்றலுடன் வாழ்க்கையில் பயணிக்க முடியும். 
கட்டிடப் பொருட்கள் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவைகள் :

தண்ணீர் :

🏡 கட்டிடப் பணிகளுக்குத் தண்ணீரின் தரம் முக்கியமானது. உப்புச் சுவை உள்ள தண்ணீர் என்றால் அது கட்டிடத்தின் உறுதிக்குப் பங்கம் விளைவிக்கும். அதனால் கட்டிடப் பணிகளுக்கு நல்ல தண்ணீர் உபயோகிக்க வேண்டும். அதனால் முதலில் தண்ணீர் சம்மந்தமான தேவையை கவனிக்க வேண்டும். கட்டிடப் பணிகளுக்காக முதலில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லையெனில் வேறவொரு கிணறு அமைக்கும் முன்னர் ஏற்கனவே உள்ள தண்ணீரில்லாத ஆழ்துளைக் கிணற்றை விரைவாக மூடிவிட வேண்டும். இதன் மூலம் பின்னாளில் ஏற்படும் எதிர்பாராத விபத்துக்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

செங்கல் :

🏡 வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்குப் பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
சிமெண்ட் :

🏡 கட்டிடத்தின் உறுதிக்கான மற்றொரு விஷயங்களில் ஒன்று, சிமெண்ட். அந்த சிமெண்டின் தரத்தை அதன் நிறத்தை வைத்தே ஒரளவு தீர்மானித்துவிடலாம். லேசான பச்சை நிறத்தில் இருந்தால் அது நல்ல சிமெண்ட் என ஊகித்துக்கொள்ளலாம். அதுபோல சிமெண்ட் மூட்டைக்குள் கை விடும்போது குளுமையாக இருந்தால் அது சிறந்த தரம் என அறிந்துகொள்ளலாம்.

🏡 சிமெண்டின் தரத்தை அறிய மற்றொரு முறை, அதைத் தண்ணீருக்குள் இடும்போது அது மிதந்தால் தரம் சரியில்லை என அறிந்துகொள்ள முடியும். சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ. அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஓரளவு குறைவாக இருந்தால் சரி. 1 கிலோவுக்கும் அதிகமாகக் குறைந்திருந்தால் அதை வாங்கிய இடத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
மணல் :

🏡 இன்றைக்குத் தங்கத்தைப் போல விலை மதிப்பான பொருளாக மணல் மாறிவிட்டது. விலை மதிப்பு அதிகமாக அதிகமாக அதில் கலப்படம் வந்துவிடும் அல்லவா? ஆற்று மணலில் தூசியைக் கலக்கிறார்கள். சிலர் ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலக்கிறார்கள். அதனால் ஆற்று மணலை முறையாகப் பார்த்து வாங்க வேண்டும். கடல் மணலைக் கண்டுபிடிக்க மணலின் உப்புச் சுவையைப் பரிசோதித்தாலே போதும். கடல் மணலில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். மணலில் அதிகமாகக் குருணை இருந்தால் பயன்படுத்தத் தகுதியில்லாததாக இருக்கும். குருணை அதிகமாக உள்ள மணல் சிமெண்டுடன் கலக்காது.

கம்பிகள் :

🏡 இப்போதுள்ள நவீனத் தொழில்நுட்பத்தைத் துணிச்சலாகப் பயன்படுத்த வேண்டும். அதனால் நேரமும் கூலியும் மிச்சமாகும். உதாரணமாக ரெடிமேட் கட்டுமானக் கம்பிகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. கட்டிடத்தின் வரைபடத்திற்குத் தகுந்தாற்போல் அவர்களே கம்பியை வளைத்துக் கொண்டு வந்து இடத்திலேயே இறக்கிவிடுவார்கள். முன்புபோலக் கட்டுமான இடத்தில் தனியான இடத்தை நிர்மானித்துக் கம்பிகளை வளைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

🏡 அதுபோல சிமெண்ட் கலவையிலும் தேவையான அளவு ரெடி மிக்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொதுவானவை :

🏡 கட்டுமானத்திற்குப் பிரித்துப் பார்க்க முடியாத அளவில் உறுதியும் உருவமும் தருவது செங்கல். இதன் தரத்தை அறிய ஓர் எளிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. நாலைந்து செங்கற்களை எடுத்து நீரினுள் இட வேண்டும். 24 மணி நேரத்திற்குப் பிறகு அதை எடுத்து விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் அந்தச் செங்கற்கள் தரம் குறைவானவை என அறிந்துகொள்ளலாம்.
🏡 இப்போது பலவகையான மாற்றுச் செங்கற்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் விலையும் மிச்சமாகும், தரத்திலும் சிறந்தவையாக இருக்கும். தேவையைப் பொறுத்து, அதற்கு தகுந்த கற்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

🏡 சுற்றுச் சுவர்களுக்கு ஹாலோ செங்கல் மிகவும் உகந்தவையாக இருக்கும். இப்போது வீடு கட்டுவதற்கும் இவ்வகையான மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவது நல்லது எனப் பசுமைக் கட்டிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

🏡 பாரம்பரிய முறையிலான செங்கற்கள் தயாரிக்க ஆகும் ஆற்றலால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது மாற்றுச் செங்கற்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை. அதனால் கூடியவரை நாம் மாற்றுச் செங்கற்களைக் கட்டிடப் பணிகளுக்குப் பயன்படுத்துவோம்.

🏡 கட்டுமானப் பொருள்களைக் கையாளும்போது அவற்றில் சிறிதளவு வீணாகக்கூடும். அவை சிறிய அளவாக இருந்தால் சரி. அப்படியில்லாமல் அஜாக்கிரதையாகக் கட்டுமானப் பொருள்களை கையாண்டு அதன் மூலம் ஆகும் கட்டுமானச் சேதாரத்திற்கு நாம் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை. அதனால் பணிகள் நடக்கும் இடத்திலிருந்து சேதாரத்தைக் கண்காணிக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் சேதாரம் என ஒப்பந்தக்காரர்கள் கூறினால் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

🏡 கான்கிரீட்டுக்கு வலுச் சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைக் கம்பிகளைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். கம்பிகளில் உள்ள பிசிறுகளை நீக்கிவிட்டே பயன்படுத்த வேண்டும். துரு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கம்பியின் மீது எவ்விதமான கறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது அடையாளத்திற்காக கம்பிகள் மீது பெயிண்ட் அடித்திருக்கக்கூடும். அதுபோல எண்ணெய்க் கறை, சேறு இதுபோன்ற கறைகளையும் நீக்க வேண்டும். இம்மாதிரியான கறைகளுடன் கம்பியைக் கட்டிடப் பணிகளுக்கு உபயோகித்தால் கம்பி, சிமெண்டுடன் வலுவான பிணைப்பை உண்டாக்காமல் போய்விடும்.

🏡 மின்சார இணைப்பைப் பொறுத்தவரை தரமுள்ள வயர்களை வாங்குங்கள். விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அதிக ஆற்றல் கடத்தாமல் வீணாகும் வயர்களை வாங்காதீர்கள். அதனால் மின்சாரம் வீணாகி நாட்டுக்கும் வீட்டுக்கும் நஷ்டம் உண்டாகும்.

🏡 சுவிட்சுகளின் விஷயத்திலும் கவனம் தேவை. மலிவான வகை சுவிட்சுகள் விபத்தை உண்டாக்கக் கூடியவையாக இருக்கும். வீட்டுக்கு விளக்குகளை அமைக்கும்போது முன்கூட்டியே திட்டமிடுங்கள். அறைக்குத் தகுந்தவாறு வண்ண விளக்குகளை அமையுங்கள்.

🏡 வீட்டுக்கான கதவுகள், ஜன்னல்கள் செய்யும்போது வீண் கவுரவத்திற்காக எல்லாவற்றையும் மரத்தால் செய்ய வேண்டாம். முக்கியமான நுழைவு வாயிலை மட்டும் மரத்தைக் கொண்டு செய்யலாம். ஜன்னல்களையும் மரத்தால் செய்யலாம். ஆனால் கழிவறைக் கதவு போன்றவற்றிற்கு ரெடிமேட் பிளாஸ்டிக் கதவுகளைப் பயன்படுத்தினாலேயே போதுமானது. மரப் பொருள்களின் பயன்பாடு வீடு கட்டுவதில் அதிகம் செலவு வைக்கக்கூடியது. அதனால் அதில் கவனமாக இருங்கள். அழகும் பாதுகாப்பும்தான் முக்கியமே தவிர ஆடம்பரம் அல்ல.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

 #SreeKonguPromoters #RealEstateKovai #RKRealEstateKovai #Compacthouse #Budgethouse #Houses 
#1bhk #2BHK #3BHK #4BHKHouse 
#Housedesign #Landforsale #DreamHome #DreamHouse #Housebuying #HouseSelling #OldHouse #ResaleHouse #Coimbatore #2bhkapartment #3bhkapartment #Houseforsale #apartment #Flats  #Readytooccupy #Construction  #NewHouse