வீட்டில் என்ன அறைகள் தேவை? எப்படி அமைக்க வேண்டும்?
வீட்டிற்கு தேவையான அறைகள்:
🏰 படுக்கை அறை
🏰 சமையல் அறை
🏰 வரவேற்பு அறை
🏰 பூஜை அறை
🏰 குளியல் அறை
🏰 உணவு உண்ணும் அறை
🏰 வாகனம் நிறுத்தும்
🏰 அறை படிக்கும் அறை
🏰 விருந்தினர் தங்கும் அறை
🏰 சேமிப்பு அறை
🏰 மோட்டார் அறை
படுக்கை அறை
🏡 வீடு கட்டும்பொழுது அறைகளை அமைக்க முன்னரே திட்டமிட வேண்டும். ஏனெனில் அறைகளை வாஸ்து பார்த்து அமைக்க வேண்டும்.
🏡 படுக்கையறை தென்மேற்கு திசையில் இருத்தல் வேண்டும். தென்மேற்கு திசையில் படுக்கையறை இருந்தால் வீட்டு உரிமையாளருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வளத்தையும் தருகிறது மற்றும் நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது. வீட்டின் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் படுக்கையறைகளைத் தவிர்க்கவும். குறிப்பாக தென்கிழக்கு திசையில் இருந்தால், இது ஜோடிகளுக்கு இடையே சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
🏡 வடகிழக்கு திசையில் படுக்கையறை இருந்தால் உடல்நல பிரச்சினை ஏற்படும். வீட்டின் கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் குழந்தைகள் படுக்கையறை இருந்தால் மிகவும் சிறந்தாக அமையும்.
சமையல் அறை
🏡 ஒரு சமையலறையானது குறைந்தபட்சம் 8-க்கு 10 அடி என்ற கணக்கிலாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் ஓரளவு இடம் பெரியதாக இருக்கும் போது சமையல் பொருட்களையும் மளிகைப் பொருட்களையும் அலமாரி அமைத்து வைக்க முடியும்.
🏡 சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டியானது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் அமைப்பது நல்லது. ஏனெனில் சிமெண்ட் அல்லது கற்களால் அமைக்கப்படும் தொட்டியைவிடத் தண்ணீரைச் சுலபமாக வெளியேற்ற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தொட்டி சிறப்பானது ஆகும்.
🏡 சமையலறை மேடையின் உயரம் 34 அங்குலம் இருப்பது நல்லது. இது கேஸ் சிலிண்டரை உள்ளே வைப்பதற்கு ஏதுவாக இருக்கும். சமையலறை என்றால், நிச்சயம் வெப்பம் இருக்கவே செய்யும். அதற்காக மின் விசிறிகளைச் சமையலறையில் வைப்பது நல்லதல்ல. எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு சமையலறையில் குறைந்தபட்சம் 5 மின் இணைப்பு பாய்ண்டுகளை வைப்பது புத்திசாலித்தனம்.
🏡 சமையலறை என்றால், புகைபோக்கி நிச்சயம் இருக்க வேண்டும். பழைய வீடுகளில் இது நிச்சயம் இருக்கலாம். ஆனால், இப்போது கட்டப்படும் வீடுகளில் புகைபோக்கிகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. குறிப்பாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புகைபோக்கிகளை அமைப்பதும் கடினமானது. புகைபோக்கிகளுக்கு மாற்றாக, சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன்களை பயன்படுத்தலாம்.
🏡 தற்போது சமையலறைகளில் சிம்னி வைப்பதைச் சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது ஒரு சிறந்த முறையும்கூட. சிம்னி உபயோகிக்கும்போது அது கார நெடிகளையும் எண்ணெய்ப் பிசுக்குகளையும் சேமித்து வைத்துக்கொள்ளும். அதை அடிக்கடி நாம் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இயந்திரம் கெட்டு விடும்.
🏡 சமையலறைக்குப் பயன்படுத்தும் சிம்னி ஹாப் எனப்படும் அடுப்பு தரமாக இருப்பது அவசியம்.
🏡 சமையலறை மேடைக்கு மேல் பளிங்குக் கற்களைப் பயன்படுத்துவது நல்லது. மேடைக்கு மேல் 2 அடி உயரத்துக்கு டைல்ஸ் பயன்படுத்தலாம்.
🏡 சமையலறையில் முக்கியமான பகுதி அலமாரி. உணவு பொருட்களை இங்கு வைத்துப் பெண்கள் பாதுகாப்பார்கள். உணவுப் பொருட்கள் உள்ள இடம் என்பதால் இங்குப் பூச்சிகள் வரவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் அலமாரி விரைவில் பூச்சிகளால் துளைகள் இடப்பட்டுப் பாதிப்புக்குள்ளாகும். எனவே, அதன் உள் மற்றும் வெளிப்புறங்களை லேமினேட் செய்வது நல்லது.
🏡 அலமாரிகளுக்கு வர்ணம் பூசுவதன் மூலம் பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே கூடுமானவரை வர்ணம் உபயோகிப்பதைத் தவிர்த்து லேமினேட் செய்வது சிறந்தது.
🏡 மாடுலர் கிச்சன்களில் பிளைவுட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் நீர் உறிஞ்சா பிளைவுட் பயன்படுத்துவது நல்லது.
வரவேற்பு அறை
🏡 ஒட்டுமொத்தக் கட்டிடப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கோ அல்லது நான்கில் ஒரு பங்கோ உங்கள் வரவேற்பறை அமைந்தால் சிறப்பாக இருக்கும்.
🏡 தெருவைப் பார்த்தபடியோ காம்பவுண்ட் வாசலுக்கு நேராகவோ வரவேற்பறையை அமைக்க வேண்டாம். குறைந்தபட்சம் நான்கடி உயர ஜன்னல்களை அறையில் இருக்க வேண்டும். வீட்டுக்குள் இயற்கை வெளிச்சம் வருவது மின் சிக்கனத்துக்கும் நல்லது. சூரிய வெளிச்சம் நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்க் கிருமிகளைக் கொன்று விடும். அதனால் உடலுக்கும் ஆரோக்கியம். ஜன்னல்கள் எதிர் எதிர் திசையில் இருப்பது அமைப்பாக இருக்கும்.
🏡 வரவேற்பறையை வடிவமைக்கும் முன் அறையில் அறைக்கலன்களை எங்கு, எப்படி வைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். வரவேற்பறையில் ஒரு புத்தக அலமாரி ஒன்றை நிறுவுவதாக இருந்தால் அறை கட்டப்படுவதற்கு முன்பே முடிவெடுத்துவிடுங்கள். அதற்கேற்ப வரவேற்பறையை அழகாகக் கட்டலாம்.
🏡 வரவேற்பறையின் உள்ளே மாடிப்படிகளை அமைப்பது முன்பைவிட இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. படிக்கட்டுகளை அமைப்பதில் இரு வகைகள் உண்டு. அதாவது வெளிப்புறமாக அமைக்கும் படிக்கட்டுகள். மற்றொன்று உட்புறமாக அமைக்கும் படிக்கட்டுகள். இவற்றுள் உட்புறப் படிக்கட்டுகள் பெரும்பாலும் வரவேற்பறையிலேயே அமையும்.
பூஜை அறை
🏡 பூஜை அறைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் மிதமானதாக இருப்பது நல்லது. அழுத்தமான பளீரென்ற வண்ணங்களைத் தவிர்த்து விடுங்கள். பூஜை செய்யும்போது மனம் அமைதியாக இருப்பதே நல்லது. அதற்கு மிதமான வண்ணம்தான் ஏற்றது. வெள்ளை, வெளிர் நீலம், க்ரீம் போன்ற வண்ணங்கள் பயன்படுத்துங்கள்.
🏡 மின்சார சர விளக்குகளைப் பூஜை அறையில் மாட்டும்போது அவை ஆடம்பரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டாம். சிலரது வீட்டில் சாமிப் படங்களுக்கும், உருவங்களுக்கும் பூ வைப்பார்கள். ஆனால் அவற்றைச் சுலபத்தில் நீக்க மாட்டார்கள். வாடிய பூ தொடர்ந்து சில நாட்களுக்குக் காட்சியளிக்கும். இது தவறு. நிர்மால்யம் எனப்படும் இந்த வாடிய மலர்களை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும். முடிந்தவரை பூஜை அறை என்பது கழிப்பறையிலிருந்து தள்ளி இருக்க வேண்டும். அப்போதுதான் விரும்பத்தகாத நாற்றங்கள் பூஜையின்போது உங்கள் கவனம் சிதறாமல் இருக்கும்.
🏡 உடைந்த மற்றும் கீறல் விழுந்த கடவுள் உருவங்களை நீக்கிவிடலாம். இப்போதெல்லாம் நடமாடும் பூஜை அறைகள் வந்து விட்டன. இது நடுத்தர மக்களுக்குப் பலவித வசதிகளைக் கொடுக்கிறது. வசதியான இடத்தில் வைத்து பூஜை செய்ய முடிகிறது. வேறு வீட்டுக்கு மாறும்போதும் இதைச் சுலபமாக எடுத்துச் செல்ல முடிகிறது.எனவே இதை பற்றியும் சிறுது யோசிக்கலாம்.
குளியல் அறை
🏡 நாம் நம் வீட்டை வடிவமைக்கும்போது குறைந்தபட்சம் 30 முதல் 50 சதுர அடி அளவிலாவது குளியலறையை அமைப்பது நல்லது. அப்போதுதான் நீங்கள் ஈரமான பகுதி (WET AREA), ஈரமற்ற பகுதி (DRY AREA) என்று எளிதாகப் பிரிக்க இயலும். மேலும் சிலர் குளிக்கும் இடத்தில் பயன்படுத்தும் நீர் செல்லத் தனி வழியும் மீதிப் பாகத்துக்கு நீர் செல்லத் தனி வழியும் அமைக்கப்பட வேண்டும்.
🏡 குளியலறையைப் பொறுத்தவரை காற்று வெளிச்சம் வர ஒரே வழி வெண்டிலேட்டர் (VENTILATOR) அமைப்புகள்தான். எனவே இங்கு கட்டாயமாகக் காற்றை வெளித்தள்ளும் மின்விசிறி (EXHAUST FAN) அமைக்கப்படுவது மிகவும் அவசியமாகிறது.
🏡 வெண்டிலேட்டர்கள் இரண்டு அடி உயரத்துக்கு மிகாமல் அமைக்கப்படுவது நல்லது. அகலம் இரண்டு அடி முதல் நான்கு அடிவரை அறையின் அளவைப் பொறுத்து நாம் அமைத்துக் கொள்ளலாம்.
🏡 வெண்டிலேட்டரில் பொருத்தப்படும் கண்ணாடிகள் சொரசொரப்பான தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும். மேலும் அவை குளியலறையின் மேற்பகுதியைப் பார்ப்பது போன்று அமைக்கப்பட வேண்டும்.
உணவு உண்ணும் அறை
🏡 பொதுவாக வீடு கட்டும் போது உணவு உண்ணும் அறையை (டைனிங் ரூம்) சமையலறை அருகிலேயே வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த வகையில் தென் கிழக்கு பகுதியில் சமையலறை வரும்போது சமையலறைக்கு மேற்கு புறமாகவோ அல்லது வடக்கு புறமாகவோ உணவு உண்ணும் அறையை அமைப்பது மிக சிறப்பாக இருக்கும். இந்த டைனிங் அறையை பொருத்தவரை நீங்கள் சமையலறையிலிருந்து போய்வர ஏதுவாகவும், ஹால்லில் இருந்தும் போய் வருவதற்கு ஏதுவாகவும் வாசல் அமைப்பது மேலும் சிறப்பாகும்.
🏡 உங்களது வீட்டில் சமையலறை வடமேற்கு பகுதியில் ஒரு வேலை இருந்தால் அந்த சமையலறைக்கு தெற்கு புறமாகவோ அல்லது கிழக்கு பகுதியிலோ உணவு உண்ணும் அறையை அமைத்துக் கொள்வது நன்மை அளிக்கும். வடமேற்கு சமையலறை வரும்போது, வடகிழக்கில் டைனிங் வர வாய்ப்புள்ளது. அதுபோல வரும் பட்சத்தில் வடகிழக்கு அறையை உணவு உண்ணும் அறையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் வடகிழக்கு நன்றாக திறப்பு இருக்க வேண்டும் என்பதை மறந்துவிட கூடாது. உங்களுடைய மொத்த வீட்டில் தென்மேற்கில் டைனிங் வரும்போது அதை தவிர்ப்பது மேலும் நன்மை அளிக்கும்.
வாகனம் நிறுத்தும் அறை
🏡 பொதுவாக, நாம் அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு செல்ல வாகனங்களை பயன்படுத்துகின்றோம். நம் வீட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும்.
🏡 உங்கள் இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் எந்த பகுதியையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது.
🏡 உங்கள் இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ Cantilever முறையில் தூண் (Pillar) இல்லாமல் அமைக்க வேண்டும்.
🏡 உங்கள் இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் அடித்தளத்தில் (Basement) கார் நிறுத்துவதற்காக கண்டிப்பாக இடம் அமைக்கக்கூடாது.
🏡 உங்கள் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையில் அமைக்கலாம். வாஸ்துபடி அதுவே சிறந்த திசையாகும். உங்கள் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக்கூடாது.
🏡 உங்கள் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தில் கட்டப்படும் தாய் சுவரையும், மதில் சுவரையும் தொடாமல் தனியாக அமைக்க வேண்டும்.
🏡 உங்கள் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) - மேல்கூரை (Roof) சமமாக அல்லது தெற்கு / மேற்கு உயர்த்தியும் வடக்கு / கிழக்கு தாழ்த்தியும் அமைக்க வேண்டும்.
குறிப்பு
🏡 வீட்டில் வாகனம் நிறுத்துவதற்கு தனி ஷெட் அமைத்தால் அதை வடமேற்கு அல்லது தென் கிழக்குத் திசையில் கட்ட வேண்டும். வடகிழக்கில் அதிக பாரத்தை ஏற்றக் கூடாது என்பதால் அங்கு மட்டும் கார் ஷெட்டை அமைக்கக் கூடாது.
படிக்கும் அறை
🏡 நம் வீட்டில் படிக்கும் அறை அல்லது நூலகத்தை மேற்குதிசையில் அமைப்பது சிறந்தது. அந்த அறையில் வாஸ்துப் படி கிழக்கு நோக்கியப்படி நாற்காலியைப் போட்டு படிக்க வேண்டும். மற்றும் வடக்கு நோக்கியும் நாற்காலியைப் போட்டு படிக்கலாம். ஆனால் தெற்குச் சுவருக்கு ஒட்டினாற் போல நாற்காலியை போட வேண்டும். ஏனெனில் வஸ்துபடி அதுவே சிறந்த முறையாகும்.
🏡 மேலும், மேற்குத் திசைக்கு அடுத்தபடியாக வடகிழக்கு, கிழக்கு, வடமேற்கு திசையில் படிக்கும் அறையாக அமைக்கலாம். பின்பு, புத்தக அலமாரிகள் மேற்கு அல்லது தெற்கு சுவருக்கு அருகில் இருக்க வேண்டும். இந்த அறைக்கு சுண்ணாம்பு அடிக்க விரும்பினால் அதில் இளமஞ்சள், இளம்பச்சை, மஞ்சள் ஆகிய நிறத்தில் ஏதாவது ஒரு வண்ணத்தை கலந்து அடிக்க வேண்டும்.
🏡 குறிப்பாக, வெளிச்சமும், காற்றும் வாஸ்துவிற்கு இரு கண்கள் போன்றது ஆகும். ஆகையால் குழந்தைகள் படிக்கும் அறையில் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும்படி ஜன்னல்கள் அமைக்கவேண்டும்.
குறிப்பு
🏡 ஒரு வீட்டின் படிப்பறையை வாஸ்துப்படி அமைத்தால் மாணவர்களுக்கு சிறப்பாக ஞானம் கிடைக்கும். வீட்டில் படிப்பறையானது தென்மேற்கு அறைக்கு வடக்கில் இருக்க வேண்டும்.
விருந்தினர் தங்கும் அறை
🏡 ஒருவர் மற்றொருவரின் தன்மையை எவ்வாறு மதிப்பிடுவார் என்றால் ஒருவர் மற்றொருவரை எவ்வாறு உபசரிக்கிறார் என்பதை வைத்து தான். எனவே, வாஸ்துப்படி விருந்தினர் அறையை ஒருபோதும் தென்மேற்கில் அமைக்கக் கூடாது. தென்மேற்கு அறை அந்த வீட்டின் எஜமானன் பயன்படுத்துவதற்கு மட்டுமே ஆகும்.
🏡 வீட்டில் வரவேற்பறை அமைக்க சிறந்த இடம் வடமேற்குப் பகுதி. தென்கிழக்கு மற்றும் வடகிழக்கிலும் விருந்தினர் அறை அமைக்கலாம். வீட்டில் விருந்தினர் அறை அமைக்கும் பொழுது மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு சரியான விருந்தினர் அறை அமைத்து நம் உறவுகளுக்கு பலம் சேர்ப்போம்.
சேமிப்பு அறை
🏡 நம் வீட்டில் பொருட்கள் வைப்பதற்கென்று தனி அறை (Store Room) அமைப்பது அவசியமாகும். எனவே, பொருட்கள் வைப்பதற்காக அமைக்கப்படும் அறையை மிகுந்த கவனத்துடன் சரியான முறையில் அமைக்க வேண்டும். வாஸ்து அடிப்படையில் அதை எவ்வாறு அமைக்கலாம் எனப் பார்ப்போம்.
🏡 உங்கள் வீட்டில் அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.
🏡 உங்கள் வீட்டில் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அமைக்க வேண்டும். மேலும், வடமேற்கு பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அமைக்க வேண்டும்.
🏡 உங்கள் வீட்டில் எந்த ஒரு மூலையிலும் அதன் மேல் தளத்தைத் தாழ்வாக (Low Roof) அமைத்து, அந்த இடத்தை பொருட்கள் வைக்கும் அறையாக அமைக்கக் கூடாது.
🏡 உங்கள் வீட்டிலோ அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது.