Wednesday, March 22, 2023

சி.எம்.டி.ஏ. என்றால் என்ன ?


சி.எம்.டி.ஏ. என்றால் என்ன ?

🏡 (CMDA) Chennai Metropolitan Development Authority சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சுருக்கமாக சி.எம்.டி.ஏ. எனப்படுகிறது.

🏡 சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான லே-அவுட் மற்றும் கட்டிட அனுமதியைச் சி.எம்.டி.ஏ. வழங்கி வருகிறது.

🏡 மனை லே-அவுட் மற்றும் கட்டிட அனுமதியைப் பொறுத்தவரை, சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் இருந்தால் எந்த அளவாக இருந்தாலும் சி.எம்.டி.ஏ.-வின் அனுமதி பெறுவது அவசியம்.

🏡 சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் நகராட்சிகள் வந்தால், அவற்றின் மூலம் சி.எம்.டி.ஏ. அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.🏡 அதாவது ஒரு லே-அவுட் அல்லது கட்டிடம் சி.எம்.டி.ஏ. ஒப்புதல் பெற்றதாக இருந்தாலும், சி.எம்.டி.ஏ.-வின் கட்டிட திட்டப்படி கட்டப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே வாங்க வேண்டும்.

🏡 சென்னைப் பெரு நகர நில வகைப்பாடு சி.எம்.டி.ஏ. ஆனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

🏡 இதன் மூலம் தங்கள் பகுதியில் உள்ள நிலம் எந்த வகைப்பாட்டில் பிரிக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தைப் பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும். மேலும் புதியதாக வீடு அல்லது மனை வாங்க நினைப்பவர்கள் குறிப்பிட்ட இடத்தில் என்னென்ன நில வகைகள், நீர் நிலைப் பகுதிகள் உள்ளன என்பதை அறிந்து, அதற்கேற்ப முடிவு செய்து வாங்கிக்கொள்ளவும் முடியும்.

🏡 இந்தத் தரவுகளை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் விபரங்களுக்கு http://www.cmdachennai.gov.in/maps.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com

வீட்டு மனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை


வீட்டு மனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

சொந்தமாக ஒரு நிலம் வாங்கி அதில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாகும். அந்தகனவை செயல்படுத்தும் போது எந்த எந்த விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும் என்பதை பற்றி காண்போம்.

வீடு கட்டுவதற்கு முன் நாம் முதலில் செய்யும் செலவு வீட்டு மனை வாங்குவது.

வீட்டு மனை வாங்கும் முன் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் :

🏡 நாம் வாங்கும் நிலம் நல்ல சுற்று சூழல் மற்றும் சாலை வசதியுடன் இருக்கிறதா என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

🏡 இபி ஒயர் நிலத்திற்கு மேலே செல்கிறதா என பார்க்க வேண்டும்.

🏡 நிலத்தின் உரிமையாளர் யார் ? அவர் தான் நமக்கு நிலத்தை விற்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அந்த உரிமையாளருக்கு நிலத்தை விற்பதற்கான முழு உரிமையும் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னறே நிலத்தை வாங்கும் முடிவு எடுக்க வேண்டும்.

🏡 30 வருடங்களுக்கு உண்டான வில்லங்க சான்றுதலை சரிபார்ப்பது அவசியம்.

🏡 வில்லங்கம் என்பது சொத்து யாரிடமிருந்து யாருக்கு மாறியது என்பதை தெளிவாக விளக்கும்.

🏡 மூலப்பத்திரம் ஒரிஜினல் சரிபார்ப்பதின் மூலமே அந்த சொத்தில் எதாவது வில்லங்கம் உள்ளதா என்பதை சரிபார்க்க முடியும்.

🏡 அந்த மனையில் வீடு கட்டுவதற்கு தகுந்த இடம் எனில், அதற்கான ஒப்புதல் வாங்கப்பட்டதா? CMDA அல்லது DTCP அங்கிகாரம் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

🏡 மேலும் நாம் வாங்கும் உரிமையாளரின் பெயரில் நிலத்திற்கான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

🏡 நாம் வாங்க கூடிய இடத்தின் மதிப்பு என்ன என்பதை விசாரித்து அதன் அடிப்படையில் 7 சதவிகித ஷ்டாம் பேப்பர் வாங்க வேண்டும்.

🏡 அந்த நிலத்திற்கு முன்பணம் கொடுத்தால், அதற்குண்டான ஒப்பந்த தாளை வாங்கிக் கொள்ள வேண்டும், (நான் இவருக்கு தான் நிலத்தை விற்கிறேன், நான் இவரிடமிருந்து தான் நிலத்தை வாங்கிக் கொள்கிறேன் என சாட்சியுடன் கையொப்பம் பெற்றுக் கொள்வது சிறந்தது.)

🏡 பட்டா, சிட்டா, வில்லங்கம் என அனைத்தையும் சரிப்பார்த்து கொள்வது மிக அவசியம்.

🏡 ஒரு நிலத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) சரியாக உள்ளதா என கவனத்தில் கொள்ள வேண்டும்.

🏡 பொதுவாக நாம் நிலம் வாங்கும் போது என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ்நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விபரங்கள் தெரிவதில்லை. அதை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

🏡 நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விபரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com

Call/Whatsup : 🇮🇳+91 8248479255

 #SreeKonguPromoters 

வீடுகட்டும் முன்..டி.டி.பி.சி (DTCP) ஒப்புதல் வாங்குவதற்கான வழிமுறைகள்



டி.டி.பி.சி (DTCP) ஒப்புதல் வாங்குவதற்கான வழிமுறைகள்

டி.டி.பி.சி (DTCP) :

🏡 டி.டி.சி.பி. (DTCP) ஒப்புதல் என்றால் குறிப்பிட்ட லே-அவுட்டில் பூங்கா, சமூக நலக்கூடம், பள்ளிக்கூடம், கடைகள் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்க வேண்டும். அது தொடர்பான இடத்தை உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

🏡 நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல் (Conversion), அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் (Directorate of Town and Country Planning – DTCP) அனுமதி தேவைப்படுகிறது.

🏡 சி.எம்.டி.ஏ. எல்லையைத் தாண்டிய மனைகளுக்கு டி.டி.சி.பி. அப்ரூவல் வழங்கப்படுகிறது.

🏡 லே-அவுட் மொத்த இடம் ஐந்து ஏக்கருக்குள் (2,17,800 சதுர அடி) இருந்தால், மாவட்டங்களில் செயல்படும் டி.டி.சி.பி. பிராந்திய அலுவலகங்களில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

🏡 லே-அவுட் ஐந்து ஏக்கருக்கு மேல் இருக்கும் பட்சத்தில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரு அலுவலகங்களுக்கும் விண்ணப்பம் செய்வதிலோ அல்லது விதிமுறைகளிலோ பெரிய வித்தியாசம் இல்லை.

வழிமுறைகள் :

🏡 உங்கள் வீட்டு மனைக்கு உண்டான வில்லங்கச் சான்றிதழ், பட்டா நகல், உங்கள் பெயரிலான தாய்ப்பத்திரம் நகல், நீங்கள் வாங்கிய மனைக்கு உண்டான வரைபட அங்கீகார நகல், சிட்டா, அடங்கல் நகல்கள், புகைப்படம் வைத்து நகர ஊரமைப்பு இயக்ககத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு கட்டணம் உண்டு. 

🏡 முறையாக விண்ணப்பித்த பிறகு குறிப்பிட்ட நாட்களுக்குள் நீங்கள் மனைக்கு டி.டி.சி.பி. கேட்டு விண்ணப்பிப்பதற்கான பதில், வீடு கட்டுவதற்கான திட்ட வரைபடத்தை மொத்தமாக வைத்து அங்கீகாரம் கேட்பது நல்லது. தனித்தனியாக அங்கீகாரம் வாங்க ஆகும் அலைச்சலைத் தவிர்க்கலாம்.

🏡 பொதுவாக இவை விலை குறைவாக இருப்பதால் பலரும் பஞ்சாயத்து அனுமதி பெற்ற வீட்டுமனைகளை வாங்கி விடுகின்றனர். ஒவ்வொரு மனைகளுக்கும் டி.டி.சி.பி அங்கீகாரம் உள்ள மனைகளுக்கு நம்பகத்தன்மை அதிகம் என்பதால் டி.டி.சி.பி. அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கினால் அதற்காக நாம் தான் அலைய வேண்டியிருக்கும். மேலும் பணமும் கூடுதலாகச் செலவாக வாய்ப்புண்டு.

🏡 எனவே வாங்கும் போதே டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற மனைகளா என்பதைப் பார்த்து வாங்கவும். மனை விற்பவர்கள் உங்களிடம் காட்டும் திட்ட வரைபடத்தில் அங்கீகார எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்ணை வைத்து மனையின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

🏡 டி.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது. எனவே டி.டி.சி.பி. ஒப்புதலின் முக்கியத்துவம் இங்கு அதிகரிக்கிறது. அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டி.டி.சி.பி. அனுமதியே மிக மிக முக்கியமானது. ஒப்புதல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம் எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின் டி.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை. இதை தவிர, லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டி.டி.சி.பி. தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

🏡 இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று அவர்களிடம் நமது லே-அவுட் திட்டத்தை சமர்பிக்க வேண்டும். அவர்கள் அதை சரிபார்த்துவிட்டு, மாவட்ட டி.டி.சி.பி. அலுவலகத்துக்கு அந்த திட்டத்தை அனுப்பி வைப்பார்கள். டி.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானை பல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அதற்கு அனுமதி கொடுப்பார்கள். சில சமயங்களில் அவர்களே ஒரு திட்டத்தை தயாரித்துக் கொடுக்கலாம்.

🏡 அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்து இருப்பார்கள். அதைத்தான் லே-அவுட் புரமோட்டர்கள் அல்லது உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும். பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், அதில் வேறு எந்த மாற்றமும் செய்யக் கூடாது. அந்த திட்டத்தில் உள்ள படியே பிளாட்களை விற்கவே விளம்பரம் செய்யவோ வேண்டும்.

🏡 24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப் பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6 சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியை தனியாக வாங்கவோ அதில் கட்டடம் கட்டவோ பஞ்சாயத்து அனுமதி தேவைப்படும். அந்த 24 செண்ட் அளவுக்கு மேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் ஒப்புதல் மட்டுமல்லாது, வேறு எந்தவிதமான திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது. அவை அனைத்துமே டி.டி.சி.பி. உடைய கட்டுப்பாட்டின் கீழ் வரும். எனவே, பஞ்சாயத்து அனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப் பகுதியை வாங்குவது நல்ல விஷயம் அல்ல.

🏡 விவசாய நிலத்தை மட்டுமல்லாது, உற்பத்தி / தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றவும் டி.டி.சி.பி. அனுமதி தேவை. சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்ற திட்டமிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan), நிலப்பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டி.டி.சி.பி. அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர, குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தை எந்த விஷயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

🏡 டி.டி.சி.பி. அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட நிலத்தை ஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத்தைப் பற்றிய தகவல்களையும், அதற்கு ஆட்சேபணைகளையும் கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள். எந்த ஆட்சேபணையும் வரவில்லை என்றால், உடனடியாக Zone Conversion-னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.

🏡 நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள் அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங்களாகக் கருதப்படுகின்றன. இதில் கட்டப்படுகின்ற கட்டிடத்தின் அருகே உள்ள சாலையின் அகலம், நிலத்தின் அகலம், ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின் அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.

🏡 இவற்றில் ஏதேனும் ஒன்று சரியாக வரவில்லை என்றாலும் அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்படாது. சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ள சாலையின் அகலம் குறைந்த பட்சம் 80 அடியும், கட்டிடம் கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்க வேண்டும். இதில் சிறிது குறைந்தாலும் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படும்.

Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com

Call/Whatsup :   🇮🇳+91 8248479255

 #SreeKonguPromoters #RealEstateKovai #RKRealEstateKovai

Wednesday, January 11, 2023

Beautiful 2BHK house for sale in pannimadai Coimbatore

கோவை  பன்னிமடை அழகிய 2bhk தனிவீடு விற்பனைக்கு Beautiful 2BHK house for sale in pannimadai Coimbatore

https://youtu.be/TkEZrR7MkjI

Friday, December 16, 2022

Sreekongupromoterskovai

Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers &
Real Dealer in Real Estate Business
(House,land buying & selling) in Coimbatore,
Tamilnadu, India. 🙏🎉

Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. Our service charge is Rs.400 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.