Wednesday, April 12, 2023

வீடு கட்டும் முன்பு செய்ய வேண்டிய பரிசோதனைகள்

வீடு கட்டும் முன்பு செய்ய வேண்டிய பரிசோதனைகள்
செய்ய வேண்டிய பரிசோதனைகள் :

🏡 மண் பரிசோதனை

🏡 நீர் பரிசோதனை

மண் பரிசோதனை :

🏡 வீடு கட்டும் முன்பு மண் மற்றும் நீர் பரிசோதனை செய்வது அவசியம். பரிசோதனை செய்யாமல் விட்டுவிட்டால், எவ்வளவு தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டினாலும் வீடு விரைவிலேயே சேதம் அடையக்கூடும்.

🏡 மண் பரிசோதனை மண்ணின் தன்மையை பகுத்தாய்கிறது. இதில் ஏதாவது மாற்றம் இருந்தால், வீட்டின் கட்டுமான முறையில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். மண் பரிசோதனையின் அடிப்படையில் தான் பொறியாளர்கள் கட்டிடத்தின் அடித்தளம், அமைப்பை இறுதி செய்வார்கள்.
🏡 வீடு கட்டப்போகும் இடம் களிமண் தரையாக இருந்தால் அது ஈரப்பதத்துக்கு ஏற்ப சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்கும். இதுபோன்ற நிலத்தில் எப்படி கட்டுமானத்தை எழுப்ப வேண்டுமோ அதன்படி பொறியாளர்கள் அமைப்பார்கள். 

🏡 எனவே வீடு கட்டுவதற்கு முன்பாகவே மண் பரிசோதனை செய்வது அவசியம். இப்போது எல்லா இடங்களிலும் மண் பரிசோதனை நிலையங்கள் இருப்பதால் சுலபமாக பரிசோதனை செய்துவிடலாம். மண் பரிசோதனை அறிக்கையின் நகலையும் வாங்கி வைப்பது மிகவும் நல்லது. 

🏡 மண் மற்றும் நீரின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை கண்ணால் மட்டுமே பார்த்து முடிவு செய்துவிட முடியாது. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டும் வீட்டுக்குக் குறைந்த செலவில் இவை இரண்டையும் பரிசோதிப்பது நம் வீட்டுக்கு நல்லது.

🏡 வீடு கட்டப் பொறியாளரையோ, மேஸ்திரிகளையோ அணுகும்போதே மண், நீர் பரிசோதனை பற்றி பேசுவது மிகவும் நல்லது. அடுக்குமாடி வீடு வாங்கப் போகிறீர்கள் என்றால், மண் மற்றும் நீர் பரிசோதனை செய்யப்பட்டதா, அப்படிச் செய்திருந்தால், அதன் நகலை கேட்டு வாங்கி சரிபார்த்துக் கொள்ளுங்கள். 
🏡 கடந்த சில பத்தாண்டுகளாக மழை வெள்ளம், புயல் என அடிக்கடி இயற்கைச் சீற்றத்துக்கு ஆளாகிவருகிறோம். பூகம்பத்தாலும் பாதிப்புகள் நடப்பதைப் பார்க்கிறோம். சில தவறான கட்டுமானத்தாலும் விபத்துகள் நடக்கின்றன. இந்த இடத்தில்தான் நம் வீட்டின் கட்டுமானம் குறித்துக் கவனம் கொள்ள வேண்டும். வீட்டுக்கு அவசியமானது அடித்தளக் கட்டுமானம்.

🏡 எவ்வளவுதான் பார்த்துப் பார்த்துக் கட்டினாலும் அந்தக் கட்டுமானம் உறுதியாக நிற்பதற்கு அடித்தளக் கட்டுமானம் வலுவாக இருப்பது அவசியம். அப்படியான வலுவான கட்டுமானம் அமைக்கச் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
🏡 முதலில் நாம் கட்டும் வீடு பல ஆண்டுகளுக்கு நிலைக்க வேண்டும் என்று நினைப்போம். அதற்கு வலுவான அஸ்திவாரம் அவசியம். மொத்தக் கட்டிடத்தையும் தாங்கி நிற்பது அஸ்திவாரம்தான். எனவே, அஸ்திவாரம் வலுவானதாக மட்டுமல்ல, மிகவும் ஆழமாகவும் அமைக்கப்பட வேண்டும்.

🏡 எந்தப் பகுதியில் வீடு கட்டுகிறோமோ அந்தப் பகுதியின் மண்ணின் தன்மையைப் பற்றி ஆராய வேண்டும். ஒவ்வொரு மண்ணின் தன்மையும் ஒவ்வொரு விதமாகக் கட்டிடத்தைத் தாங்கும் தன்மை கொண்டது. எனவே, மண்ணின் தாங்கு திறனைப் பொறுத்தே கட்டிடத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். மண்ணின் தாங்கு திறனில் குறைபாடு இருந்தால் கட்டிடத்தில் சிக்கல் வந்துவிடும்.

🏡 நீங்கள் வீடு கட்டவிருக்கும் நிலத்தில் மண் பரிசோதனை செய்வது அவசியமானது. அந்த மண் பரிசோதனை அடிப்படையில்தான் அடித்தளக் கட்டுமானம் அமைக்க வேண்டும். சில அடுக்குமாடிக் கட்டிடம் விழுந்து விபத்துக்குள்ளாவது மண் பரிசோதனை அடிப்படையில் கட்டாதது தான் காரணம் .

🏡 மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் தாங்கு தன்மையைக் கண்டறிய முடியும். அதற்கு ஏற்றாற்போல வலுவான தாங்கும் தூண்களையும், அஸ்திவாரத்தை அமைக்க முடியும் என்பதால், மண் பரிசோதனையில் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். மழை, வெள்ளம், நிலநடுக்கம் என எந்த இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டாலும், அதைத் தாங்கும் வகையில் அஸ்திவாரம் இருக்க வேண்டும். அதற்கு மண்ணின் தன்மையை ஆராய வேண்டும்.
🏡 கட்டுமானம் நடைபெறும் இடத்தில் உள்ள மண் எந்த வகையானது, அது அஸ்திவாரத்துக்கு உறுதுணையாக இருக்குமா என்பதையெல்லாம் உறுதி செய்ய வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் வீடு கட்டுபவர்கள் கட்டாயம் மண் பரிசோதனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

🏡 தனி வீட்டைவிட அதிக வீடுகள் கட்டப்படும் என்பதால் மண்ணின் தாங்கும் திறன் எவ்வளவு, அடுக்குமாடி அமைந்துள்ள இடத்தின் மண் தன்மை எப்படி உள்ளது, அஸ்திவாரம் எவ்வளவு ஆழத்தில் போடப்பட்டுள்ளது என்பதில் கவனம் தேவை.

🏡 மண் எவ்வளவு எடையைத் தாங்கும் என்பதை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்ப கட்டிடத்தின் உயரத்தை எழுப்ப வேண்டும். அப்படி பரிசோதிக்காமல் கட்டிடத்தை கட்டினால் இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். 

🏡 மண் பரிசோதனை என்றால் மனையில் உள்ள மண்ணை எடுத்துக் கொடுப்பது அல்ல. மனையில் சில மீட்டருக்குத் துளையிட வேண்டும். ஒரு இடத்தில் மட்டுமல்லாமல் மனையின் பல இடங்களில் மண்ணை எடுத்துப் பரிசோதிப்பது மிக அவசியம். பல இடங்களில் மண்ணை எடுப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. மனையின் மேல் மட்டத்தில் ஒருவகை மண் இருக்கும். உள்ளே வேறு வகை மண் இருக்கலாம். 

🏡 தற்போது இருக்கும் பல மனைகளும் பள்ளமான இடத்திலேயே உள்ளன. அந்த இடத்தை விற்பவர்கள் பள்ளமான மனையில் மண்ணை நிரப்பி மேடாக்குகிறார்கள். இதுபோன்ற மனையில் கூடுதல் கவனம் தேவை. வெவ்வேறு மண் கலந்திருப்பதால் அதன் மண்ணின் தாங்கு திறன் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

🏡 இதுபோன்ற மனையில் ஆழமாகப் பள்ளம் தோண்டி மண்ணை எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவதே நல்லது. சென்னையில் வெள்ளம் சூழ்ந்த இடங்கள் எல்லாமே ஏரிக்கு அருகேயோ, நீர் நிலைகளுக்கு அருகேயோ இருந்தவைதான்.

🏡 ஏற்கெனவே நீர் நிலைப் பகுதிகளாக இருந்திருந்தால் மண் பரிசோதனை செய்து மண்ணின் தாங்கு திறனை மதிப்பிட வேண்டும். இங்கே மிக ஆழமான அஸ்திவாரத்தை அமைத்தே வீடு கட்ட வேண்டும். 

🏡 அதுமட்டும்மின்றி, இப்போது விளை நிலங்களில்கூட கட்டுமானங்கள் நடைபெறுகின்றன. விவசாய மண் எந்த ரகத்தைச் சேர்ந்தது என்பதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அங்கே கட்டிடம் கட்டும் அளவுக்கு மண்ணின் தன்மை உள்ளதா என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

🏡 ஏனெனில் கட்டிடம் கட்டும் இடம் விவசாய நிலமாக இருந்து குடியிருப்பு இடமாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம். அத்தகைய இடத்தில் இருக்கும் மண் எந்த வகையை சார்ந்தது என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். 

🏡 அந்த மண் ரகம் கட்டிடம் கட்டுவதற்கு தகுதி வாய்ந்ததா? என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். அந்த மண் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். விவசாயத்துக்கு தக்கபடி ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டதாக இருந்தால் மழைக்காலங்களில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே மண்ணின் தன்மையை அறிந்து கொள்ள கட்டாயம் மண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

🏡 விவசாய நிலங்களில் உள்ள மண் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையைச் சோதிக்கப் பார்க்க தவற வேண்டாம். ஒரு வேளை ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் தன்மை இருந்தால் மழைக் காலங்களிலோ, வெள்ளக் காலத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் சூழந்தாலோ பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோன்ற மண்ணில் தாங்கு திறனைவிட மிக வலுவான அஸ்திவாரம் அமைப்பதே நல்லது. ஏற்கெனவே வீடு கட்டி முடித்துவிட்டால் அஸ்திவாரத்தை வலுப்படுத்த வேண்டும்.

நீர் பரிசோதனை :

🏡 கிணற்று நீர் அல்லது போர்வெல் நீரை குடிநீராக பயன்படுத்தும்போது ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு மேலாக புளோரைடு இருப்பது அல்லது நைட்ரேட்டு போன்ற இரசாயனங்கள் கலந்திருக்க கூடாது. அவ்வாறு இருப்பின் நீரை குடிப்பவர் உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. 

🏡 மேல்நிலை தொட்டிகளில் காற்று, சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படியும் காரணத்தால், பாசிகள் உருவாகின்றன. அதனால், காற்று, சூரிய ஒளி ஆகியவை படியாதவாறு தொட்டிகளை மூடி வைக்கலாம். கிணறுகள் அல்லது நீர் தொட்டிகளில் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர் தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்த்து பாசிகள் படிவதை தடுக்க முடியும்.

🏡 நீரின் காரத்தன்மை அதிகமாக இருந்தாலும், இரும்பு போன்றவை கலந்திருந்தாலும் அந்த நீரை பயன்படுத்தும்போது உணவு மற்றும் ஆடைகளில் பழுப்பு நிறம் படிகிறது. அதனால், அத்தகைய இரசாயன பாதிப்புகளை அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும்.

🏡 அதுமட்டுமின்றி செப்டிக் டேங்க் மற்றும் போர்வெல் இடையே சுமார் 50 அடி இடைவெளி இருப்பது பாதுகாப்பானது.

🏡 தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள், கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்கும் நிலையில் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைப்பது நல்லது. 

🏡 போர்வெல் தண்ணீர் அல்லது கிணற்று நீரை பரிசோதித்து, அதிலுள்ள உப்புக்களின் வகைகளை அறிந்துகொண்டு புழங்குவதற்கு அல்லது குடிப்பதற்கு உகந்ததா? என்பது பற்றி தெரிந்து கொள்ள நீர், நில வேதியியல் பரிசோதனை கூடங்களை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அமைத்துள்ளது.

xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai

Tuesday, April 11, 2023

மாநகராட்சியில் வீட்டு மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகள்


 வீட்டு மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகள்

🏡 ஒரு காலத்தில் வீடு, நிலம் வாங்குவதும், விற்பனை செய்வதும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருந்தது. பாண்டு, பத்திரமில்லாமல் வாய் மொழியாகவே பல விபகாரங்கள் நடந்த காலமும் உண்டு. ஆனால் தற்போது ஒருவர் பெயரில் உள்ள அசையா சொத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் மோசடி அதிகரித்துள்ளது. ஒருவர் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து, கைக்கு எட்டிய விலையில் வீட்டுமனை வாங்கி பதிவு செய்வார். பொருளாதார சூழ்நிலையால் சில காலம் கட்டிடம் கட்டாமல் இருப்பார்.
🏡 இதை பயன்படுத்தி சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து தங்கள் பெயரில் எழுதிக் கொள்ளும் சமூக கொடுமைகள் நடந்த வண்ணமுள்ளது. 

🏡 இந்த மோசடிகளை தவிர்க்க நிலம் பதிவு தொடர்பாக பல நவீன வசதிகள் அரசாங்கத்தால் உருவாகி இருந்தாலும், இடைத்தரகர்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவோர் முன் எதுவும் நடப்பதில்லை. இத்தகைய மோசடி கும்பல்களில் இருந்து தப்பிக்க சில வழிகாட்டுதல்கள்.
🏡 அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் பிள்ளைகளின் படிப்புக்கு வசதியாக பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அல்லது நர்சிங் ஹோம், போலீஸ் நிலையம் உள்பட முக்கிய வசதிகள் உள்ள பகுதியில், குறிப்பாக சுத்தமான குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ள இடத்தில் வீட்டுமனை, வீடு, அபார்ட்மெண்ட் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும். இடைதரகர்களை நம்பி செல்ல வேண்டாம்.

🏡 நீங்கள் வீட்டுமனை வாங்க தீர்மானித்துள்ள லேஅவுட் மாநகர பகுதியாக இருக்கும் பட்சத்தில் பெருநகர் வளர்ச்சி குழுமம், நகரசபைகளாக இருக்கும் பட்சத்தில் நகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் முறைப்படி பதிவு செய்து, அனுமதி வழங்கப்பட்டுள்ள லேஅவுட் தானா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

🏡 குறிப்பாக வீடு அல்லது மனை வாங்கும் இடம், ஏற்கனவே அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட அல்லது கையகப்படுத்துவதற்காக ஏற்பாட்டில் உள்ள நிலமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை வாங்கக் கூடாது.
🏡 நீங்கள் வாங்க தீர்மானித்துள்ள வீடு அல்லது வீட்டுமனை தொடர்பாக ஏதாவது வழக்கு போலீஸ் அல்லது நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளதா? என்பதை உறுதி செய்த பிறகே வாங்க வேண்டும்.

🏡 வாங்கும் நிலம் எவ்வளவு பரப்பளவில் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

🏡 தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள லே-அவுட்டாக இருக்கும் பட்சத்தில், அதை ஏற்படுத்தியுள்ளவர் முறைப்படி நகர வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி பெற்றுள்ளாரா? முறைப்படி பெற்றுள்ள ஆவணங்கள் அனைத்தும் சரியாகவுள்ளதா? நிலம் பதிவு செய்ததற்காக அரசாங்கத்திற்கு முறைப்படி செலுத்த வேண்டிய வரி, கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

🏡 நீங்கள் வாங்கும் அசையா சொத்துக்கு உண்மையான உரிமையாளர் யார்? அல்லது நிலத்திற்கான உரிமையை சட்டப்படி பெற்றுள்ள நபர் யார்? என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

ஆவண பத்திரங்கள் :

சொத்து மூல பத்திரம் (Parent Deed) :
🏡 ஒவ்வொரு சொத்துக்கும் மூல பத்திரம் மிகவும் அவசியமாகும். நீங்கள் வாங்கும் சொத்து பெரியளவில் இருந்தால், தற்போதைய உரிமையாளருக்கு அது எப்படி கிடைத்தது. அதை விற்பனை செய்தவர் அல்லது தானமாக வழங்கியவர், உயில் மூலம் எழுதி கொடுத்தவர் யார்? அவருக்கு அந்த அதிகாரம் வழங்கியது யார்? அவருக்கும், நிலத்தின் மூல உரிமையாளருக்கும் உள்ள இரத்த சம்பந்தமான உறவு முறை என்ன? அவர் தாய் வழி உறவினரா? அல்லது தந்தை வழி உறவினரா? என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு சொந்தமான நிலம் வேறு சாதியினருக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற சட்டம் உள்ளது. அப்படி அந்த வகுப்பினருக்கு சொந்தமான நிலம் வாங்கி லே-அவுட் போடப்பட்டுள்ளதா, என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.
🏡 நிலத்தின் உரிமையாளருக்கு நிலத்தின் உரிமை எப்படி வந்தது என்பதை உறுதி செய்யும் ஆவணங்களை பார்க்க வேண்டும் (கிரையம் எழுதி கொடுத்த பத்திரம், பரிசாக வழங்கி இருந்தால், அதற்கான ஆவணம், உயில் எழுதி கொடுக்கப்பட்டிருந்தால் அதன் அசல் பத்திரம் ஆகியவை சரியாகவுள்ளதா? என்பதை பார்க்க வேண்டும்.

காத்தா பத்திரம் (உரிமை பட்டா):

🏡 நிலம் யாருக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்து மாநகராட்சி, நகர சபை, பேரூராட்சி ஆகியவை வழங்கியுள்ள உரிமை பத்திரம் (அசல்) உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நில் என் காம்ப்ரன்ஸ் சர்ட்டிபிகேட்:

🏡 நிலத்திற்கான உரிமைப் பத்திரத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பெற்றாலும், அதன் பத்திர பதிவு முழுவதும் வருவாய் துறை அமைச்சகத்திடம் உள்ளது. நிலம் தொடர்பான முழு விபரங்களை வருவாய் துறை அல்லது அதன் கீழ் இயங்கி வரும் பதிவாளர் அலுவலகத்தில் பரிசீலனை செய்து, நிலம் உண்மையான உரிமையாளரின் பெயரில் உள்ளதா? என்பதை தீர்மானிக்க வேண்டும். பதிவாளர் அலுவலகத்தில் 12 முதல் 30 ஆண்டுகள் வரையிலான ஆவணங்கள் பெற முடியும். அதை முழுமையாக கேட்டு பெற்று பரிசீலித்து தீர்மானிக்க வேண்டும்.

🏡 சில இடங்களில் விவசாய நிலங்கள் வாங்கி லே-அவுட் அமைத்திருப்பார்கள். அப்படி அமைக்கப்பட்ட நிலத்தை கிரீன் பெல்ட் நிலத்தில் இருந்து குடியிருப்பு நிலமாக மாற்றியமைக்க முறைப்படி அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான சான்றிதழ் வழங்கியுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். சில ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் விவசாய நிலத்தை பரிமாற்றம் செய்யாமல் லே-அவுட் போட்டு விற்பனை செய்வார்கள். அது பிற்காலத்தில் பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன், வாங்கிய சொத்தை இழக்கும் நிலைக்கு கொண்டு போய்விடும்.

🏡 நிலத்திற்கு உண்டான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கான வரி கட்டண பில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

🏡 லே-அவுட் அமைப்பதற்கு வாங்கியுள்ள நிலத்தின் அளவு, அது தொடர்பாக நகர உள்ளாட்சி அமைப்பு கொடுத்துள்ள அனுமதி பத்திரம், வீடு கட்ட கொடுத்துள்ள தடையில்லா சான்றிதழ், குத்தகை உத்திரவாத பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.

🏡 சிலர் தங்களுக்கு சொந்தமான சொத்தை விற்பனை செய்து கொடுக்கும் அதிகாரத்தை தனி நபருக்கு வழங்குவார்கள். அப்படி வழங்க பவர் ஆப் அட்டார்னி எழுதி கொடுப்பார்கள். அதை வைத்து கொண்டு லே-அவுட் அமைப்பது அல்லது தனி நிலம் விற்பனை செய்வார்கள். அப்படி பவர் ஆப் அட்டார்னி பெற்றுள்ள நபர், உண்மையில் நில உரிமையாளரிடம் பிஓஏ எழுதி வாங்கியுள்ளாரா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai

2Bhk House for sale in Coimbatore

Saturday, April 8, 2023

மறுவிற்பனை பிளாட் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

🏡 வேறு ஒருவர் வாங்கி வைத்து இருந்த நிலம் விற்பனைக்கு வந்தால் அதை நீங்கள் வாங்க முற்பட்டால் இன்னும் சில விஷயங்களையும் துல்லியமாக ஆராய வேண்டும்.
🏡 அவர் ஏன் இந்த மனையை விற்கிறார்? அதாவது என்ன காரணத்திற்காக விற்கிறார் என்பதை கட்டாயம் விசாரிக்க வேண்டும். எதாவது பிரச்சனைகள் இருந்து நம்மிடம் அதை மறைத்து விற்பனை செய்கிறார்களா என்பது பற்றிய தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
🏡 வில்லங்கங்கள் ஏதும் உள்ளதா என்பதை நன்கு தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் .

🏡 வாரிசுதாரர்கள் அனைவரின் முன்னிலையில் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் முன்தொகை விபரங்களை தெரியபடுத்திட வேண்டும்.

🏡 பக்கத்து வீட்டுக்காரர்களின் எல்லை அளவுகளை அவர்களிடம் காட்டி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

🏡 ஒரு வேலை பொது சுவர்கள் ஏதும் இருப்பின் அதற்கான உடன்படிக்கை ஆவணங்களை கட்டாயம் கேட்டு வாங்க வேண்டும். அதை சம்பந்தப்பட்ட பக்கத்து வீட்டுக்காரரிடம் காட்டி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
🏡 குறைந்தது 30 வருடங்களுக்கான தாய் பாத்திரங்களை கட்டாயம் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

🏡 ஏற்கனவே வீடு இருந்து அதை வாடகைக்கோ அல்லது ஒத்திக்கோ வீட்டு உரிமையாளர் விட்டு இருந்தால் அவர்களிடம் பேசி அவர்கள் காலி செய்து கொடுக்க சம்மதப் பத்திரம் பெற வேண்டும்.

🏡 அதேபோல அந்த சொத்தின் மேல் அடமானத்தின் பேரில் கடன் வாங்கிக் கட்டி முடித்திருந்தாலோ அது சம்மந்தமான திரும்பப் பெற்ற அனைத்து ஆவனங்களையும் கேட்டுப் பெற்று சரி பார்த்துக் கொள்வதுடன் ஒரு வழக்கறிஞர் மூலமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தெளிவுபடுத்திக் கொள்வது மிக நன்று. 
🏡 மேலும் நிலத்தின் உரிமையாளர் சம்பந்தமான அத்துனை வாரிசுகளையும் அழைத்துப் பேசி வில்லங்கம் சம்பந்தமான ஒப்புதல் பெற வேண்டும். வாரிசுகள் மைனர்களாக இருப்பின் அவர்கள் மூலமாக பின்னாளில் எந்த வித வில்லங்கங்களும் வராமல் இருக்கத் தேவையான அனைத்து ஒப்புதல்களும் பெறவேண்டும்.
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai

Thursday, April 6, 2023

புறநகர்ப் பகுதியில் வீட்டுமனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

புறநகர்ப் பகுதியில் வீட்டுமனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

🏡 மனையை வாங்கத் திட்டமிடும்போது அடிப்படை வசதிகளான போக்குவரத்து, கல்வி, மருத்துவம் போன்ற முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் அந்த வீட்டு மனை இருக்க வேண்டும். வீட்டிற்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்பதில்லை, ஆனால் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இவை இருந்தால் நல்லது.

🏡 இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக வீட்டு உரிமையாளர்களால் துரத்தப்பட்டு வாடகைக்கு வீடு தேடித் தேடி ஓய்ந்துபோனவர்களுக்கு, நமக்கென்று ஒரு சொந்த வீடு இருந்தால் இப்படி நாம் பல வீடுகளை தேடி அலைய தேவையில்லை என்ற எண்ணம் தோன்றும். இந்த எண்ணத்தில் தவறில்லை. 
🏡 அதேசமயம் வீட்டுமனைத் தேடும் அவசரத்தில், யார் யாரையோ நம்பி புறநகர் பகுதிகளில் தவறான வீட்டுமனையைத் தேர்வு செய்து, பணத்தை வீணடித்துவிட்டோமோ என்று வருத்தப்படும் பலரையும் பார்க்க முடிகிறது.

🏡 வீட்டைக் கட்டிப்பார் என்பது மட்டுமல்ல, வீட்டுமனையை வாங்குவதும்கூட அத்தனை எளிதான விஷயமல்ல. நல்லதொரு மாதச் சம்பளத்தில் வேலைபார்க்கும் பலருக்கும் வீட்டுமனை வாங்குவதற்கான சேமிப்புக்குச் சிக்கலிருக்காது. 
🏡 ஆனால், அந்தச் சேமிப்பை சரியான வீட்டுமனையில் முதலீடு செய்வதில்தான் தவறிவிடுகிறார்கள். புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வீட்டுமனையைத் தேர்வு செய்ய, மழைக்காலத்தில் செல்வதுதான் சரியானதாக இருக்கும். 

🏡 அப்போதுதான் அந்த இடம் மழைநீரால் சூழப்படும் அளவுக்குத் தாழ்வான பகுதியா என அறிந்து கொள்ள முடியும். வீட்டுமனைக்குச் செல்லும் பாதை எந்த அளவுக்குத் தரமானதாக இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும். 

🏡 அதேபோல, ஏரிப் பகுதிகளையொட்டிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வீடு கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ அனுமதி கிடைப்பதில்லை. ஆனால், நீர்ப்பிடிப்புப் பகுதி என்பதை மறைத்து ஃபிளாட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி வீட்டுமனையைத் தேர்ந்தெடுப்பதில் எண்ணற்றச் சிக்கல்கள் உள்ளன.
🏡 மனையின் நீள, அகல அளவுகள் செவ்வகமாகவோ, சதுரமாகவோ இருப்பதுபோல் பார்த்து வாங்க வேண்டும். முக்கோணமாகவோ, ஏதேனும் ஒரு மூலை குறுகலாகவோ இருப்பதுபோல வாங்கினால், வீடு கட்டுவதும் சிக்கலாக இருக்கும். வாஸ்துவும் சரிப்பட்டு வராது.

🏡 மனையின் விலை நிர்ணயம் குறித்த சந்தை மதிப்பீட்டு அறிவு நமக்கு வேண்டும். அந்தப் பகுதியில் என்ன விலைக்கு மனைகள் விற்கப்படுகின்றன என்பதை விசாரித்து அறிய வேண்டும்.

🏡 அப்படியில்லாமல், குலுக்கல் முறையில் ஃப்ளாட் தருகிறார்கள், வீட்டுமனையோடு இலவசமாக பைக் தருகிறார்கள் என்பன போன்ற கவர்ச்சிகரமான வியாபார உத்திகளுக்குப் பலியாகக் கூடாது.

🏡 சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அங்கீகாரம் பெற்ற மனையா எனப் பார்த்து வாங்க வேண்டும். பஞ்சாயத்து ஒப்புதல் என்றால் வாங்கக் கூடாது. ஏனெனில், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவில் வரும். மேலும், அதில் வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்காது.
🏡 ஒரு மனையின் விலையானது அதை ஒட்டியுள்ள சாலையை வைத்துத்தான் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தச் சாலை அகலமானதாக இருக்கும்பட்சத்தில் விலை அதிகமாக இருந்தாலும் வாங்கலாம். 

🏡 மிகக் குறுகியதாக இருந்தால் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய அவசியமில்லை. மனைப்பகுதியில் நிலத்தடி நீர் எப்படியுள்ளது எனச் சோதித்துப்பார்க்க வேண்டும். உப்புத்தண்ணீராக இருந்தால் கட்டுமானத்துக்கோ, குடிக்கவோ, மற்ற பயன்பாட்டுக்கோ உதவாது என்பதால் அந்த வீட்டுமனையை வாங்குவது பயனற்றது.

🏡 மனையின் மூலப்பத்திரங்களை ஒன்றுக்கு இரண்டு வழக்குரைஞர்களிடம் கலந்தாலோசித்து அது குறித்த விசாரணைகளை முழுமையாக முடித்த பிறகு சரியாக இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.

🏡 அடுத்ததாக தாசில்தார் அல்லது வி.ஏ.ஓ-வை அணுகி, அந்த வீட்டுமனைக்கு பட்டா கிடைக்குமா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம்.
🏡 வீட்டுமனைக்கு சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி ப்ளான் ஒப்புதல் உள்ளதா என்பதை அரசாங்க இணையதளத்தில் காணலாம். அதில் காட்டப்பட்டுள்ள திட்டப்படி வீட்டுமனை அமைந்துள்ளதா என்பதையும், சர்வே எண் சரியா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 

🏡 அடுத்ததாக, வீட்டுமனையின் உரிமையாளர், சட்டப்படி சரியான நபர்தானா என்பதைப் பார்க்க வேண்டும். பவர் மட்டும் உள்ளவர் என்றால், அந்த பவர் ஆஃப் அட்டர்னி செல்லுபடியாகுமா என்பதையும் வழக்குரைஞர் மூலம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 

🏡 வீட்டுமனைக்கான பத்திரங்கள் அனைத்தும் சரியானவையே என்பதையும், அந்த இடத்தின் மீது வில்லங்கம் ஏதுமில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, வீட்டுமனையில் முதலீடு செய்வதில் மிகுந்த கவனத்தோடும் பொறுப்போடும் செயல்பட்டால், எதிர்காலத்தில் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் அந்த இடத்தில் வீடு கட்டிக் குடியேறலாம்.

🏡 வேறு யாருக்கேனும் விற்பதாக இருந்தாலும், நல்ல விலைக்கு விற்கலாம். மேற்கூறியவற்றை மனதில்கொண்டால், சரியான வீட்டுமனையைத் தேர்வுசெய்வது எளிது.

xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai

Wednesday, April 5, 2023

ACB Board with Acrilic Letters

🙏Sree Kongu Ads
Coimbatore
Flex & Glow Sign Boards, Vinyl Printing, L.E.D Boards, Sticker work, Multicolour and offset printing works, Designing.
We assure our best services at all times.
Regards.
R.Karthikeyan 
Call/Whatsup: 🇮🇳+91 8248479255
sreekongupromoterskovai@gmail.com

We r in social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
#SreeKonguAds #FlexBoard #GlowSignBoard #LED_Board #Advertising #FlexPrinting #CoimbatoreFlexPrint #Signboard #Vinyl_Printing #Vinyl_Stickers

வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி ?


வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி ?

🏡 சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், எப்படி கட்டுவது எவ்வளவு செலவாகும் என்பதை எல்லாம் தாண்டி வீடு கட்ட அங்கீகாரம், திட்டத்துக்கு ஒப்புதல் என நிறைய அனுமதி பெற வேண்டியிருக்கும். வீடு கட்ட அனுமதி வாங்க எங்கே, எப்படி அணுக வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

🏡 புதிதாக வீடு கட்ட வேண்டும் என்றாலும், ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டில் கூடுதலாகக் கட்டடங்களைக் கட்டுவதாக இருந்தாலும் அதற்குத் திட்ட அனுமதி பெற வேண்டும்? இந்த திட்ட அனுமதியை எங்கே வாங்குவது? 

🏡 இந்த அனுமதியைச் சென்னை நகர எல்லைக்குள் இருந்தால் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்திடமும் (சிஎம்டிஎ), சென்னை அல்லாத தமிழகத்தின் பிற பகுதிகள் என்றால் நகரத் திட்ட இயக்ககம் (டிடிசிபி) அமைப்புகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.
அனுமதி பெறுவதில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்:

🏡 வீடு அல்லது வர்த்தக் கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும் திட்ட வரைபடம் தேவை. இதனை லே-அவுட் என்று சொல்வார்கள். இந்த லே-அவுட் சி.எம்.டி.ஏ. அல்லது டிடிசிபியால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். வீடு கட்ட விண்ணப்பிக்கும் போது வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைப்படி லே-அவுட் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் நேரில் வந்து மனையை ஆய்வு செய்வார்கள்.

🏡 இந்தத் திட்ட வரைபடமானது முழுமையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் தான் திட்ட அனுமதி கிடைக்கும். அப்படி இல்லை என்றால் அந்தத் திட்ட வரைபடத்துக்கான அனுமதியை சிஎம்டிஏ அல்லது டிடிசிபி வழங்காது. 

🏡 சென்னையில் வீடு அல்லது கட்டடம் கட்ட வேண்டும் என்றால் சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ. அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு மட்டுமே திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும்.

🏡 மற்ற பகுதிகள் என்றால் டிடிசிபியின் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். டிடிசிபி அலுவலகம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்பட்டுவருகின்றன.
யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம் :

🏡 நிலம் அல்லது மனையின் உரிமையாளர் அல்லது குத்தகைதாரர் ஆகியோர் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியைக் கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம், அதற்கென வரையறுக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் அனுமதி கோரும் இந்த விண்ணப்பப் படிவங்கள் ஏ, பி, சி என மூன்று வகைகளில் இருக்கும்.

விண்ணப்பப் படிவங்களின் வகைகள் :

🏡 ஏ விண்ணப்பப் படிவம்

🏡 பி விண்ணப்பப் படிவம்

🏡 சி விண்ணப்பப் படிவம்

ஏ விண்ணப்பப் படிவம் :

🏡 விண்ணப்பம் ஏ என்பது வீடு கட்டும் மனைப்பிரிவுக்கான விண்ணப்பம். இந்த விண்ணப்பத்தை வழங்கும்போது மனைக்குரிய எல்லா ஆவணங்களையும் இணைக்க வேண்டும். மனையை வாங்கும்போதே சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அமைப்பின் அங்கீகார வீட்டு மனையாக இருந்தால் பெரும்பாலும் எந்த சிக்கலும் வராது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

பி விண்ணப்பப் படிவம் :

🏡 விண்ணப்பம் பி என்பது கட்டிடம் கட்டுவதற்கும், ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களுடன் சேர்த்து புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு உரியது. வீட்டை விரிவாக்கம் செய்வதாக இருந்தால் இந்த விண்ணப்பத்தை வழங்க வேண்டும். கட்டிடத்தின் திட்ட வரைபடத்தை இணைக்க வேண்டும். வீட்டைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் விபரங்கள் ஆகியவற்றையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும்.

சி விண்ணப்பப் படிவம் :

🏡 விண்ணப்பம் சி என்பது மிகப் பெரிய அளவில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தொகுப்புக் கட்டிடங்களுக்கு உரியது. இந்த விண்ணப்பம் சிறப்பு அந்தஸ்து உள்ளது என்பதால், இந்த வகை கட்டடங்களுக்கு சிஎம்டிஏ அமைப்பின் உறுப்பினர் செயலரின் அங்கீகாரம் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் கட்டுநர்கள் இந்த விண்ணப்பத்தைத்தான் வழங்குவார்கள்.

🏡 இந்த விண்ணப்பங்களை வழங்கினால் மட்டும் போதாது. திட்ட அனுமதி மற்றும் விண்ணப்பத்தோடு உறுதி மொழிப் படிவத்தையும் கண்டிப்பாக இணைக்கச் சொல்வார்கள். உறுதிமொழி அளிப்பதற்கான மாதிரி படிவமும் சிஎம்டிஏ அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது. 

🏡 அதாவது பல உறுதிமொழிகள் அதில் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக அனுமதியை மீறிக் கட்டடம் கட்டினால் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டு கையொப்பம் கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பங்கள் சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் கிடைக்கும். தற்போது இந்தப் படிவங்களை சிஎம்டிஏ மற்றும் டிடிசிபியின் இணையதளங்களிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் வந்துவிட்டது.

🏡 வீடு கட்டுவதற்கு அனுமதி கோரி பெரும்பாலும் விண்ணப்பம் பி-யே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்ணப்பத்துடன் உரிமையாளர் கையொப்பம், குத்தகைதாரரின் கையொப்பம், அங்கீகாரம் பெற்ற நில அளவையர் கையொப்பம், வீட்டைக் கட்டும் பொறியாளரின் கையெழுத்து, கட்டடம் கட்டுவதற்கான திட்ட வரைபடம் ஆகியவற்றைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

🏡 தரைத்தளத்துடன் மூன்று மாடிச் சிறப்புக் கட்டிடம், நான்கு அடுக்குக்கு மேல் உள்ள கட்டிடங்கள் என்றால் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். 

🏡 அதுமட்டுமின்றி கட்டிடங்கள் கட்டுவதற்கு சிடிஎம்ஏ அல்லது டிடிசிபியின் அனுமதி வாங்குவதோடு வேலை முடிந்துவிடாது. கட்டுமானப் பணி நடைபெற்றுகொண்டிருக்கும்போது ஒவ்வொரு நிலையிலும் விதிமுறைப்படி வீடு ஒழுங்காகக் கட்டப்படுகிறதா எனக் கண்காணிப்பார்கள். விதிமுறையை மீறாமல் வீட்டைக் கட்டுவது வீட்டு உரிமையாளரின் பொறுப்பும் கூடும்.

xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai