🏡 மனையை வாங்கத் திட்டமிடும்போது அடிப்படை வசதிகளான போக்குவரத்து, கல்வி, மருத்துவம் போன்ற முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் அந்த வீட்டு மனை இருக்க வேண்டும். வீட்டிற்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்பதில்லை, ஆனால் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இவை இருந்தால் நல்லது.
🏡 இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக வீட்டு உரிமையாளர்களால் துரத்தப்பட்டு வாடகைக்கு வீடு தேடித் தேடி ஓய்ந்துபோனவர்களுக்கு, நமக்கென்று ஒரு சொந்த வீடு இருந்தால் இப்படி நாம் பல வீடுகளை தேடி அலைய தேவையில்லை என்ற எண்ணம் தோன்றும். இந்த எண்ணத்தில் தவறில்லை.
🏡 அதேசமயம் வீட்டுமனைத் தேடும் அவசரத்தில், யார் யாரையோ நம்பி புறநகர் பகுதிகளில் தவறான வீட்டுமனையைத் தேர்வு செய்து, பணத்தை வீணடித்துவிட்டோமோ என்று வருத்தப்படும் பலரையும் பார்க்க முடிகிறது.
🏡 வீட்டைக் கட்டிப்பார் என்பது மட்டுமல்ல, வீட்டுமனையை வாங்குவதும்கூட அத்தனை எளிதான விஷயமல்ல. நல்லதொரு மாதச் சம்பளத்தில் வேலைபார்க்கும் பலருக்கும் வீட்டுமனை வாங்குவதற்கான சேமிப்புக்குச் சிக்கலிருக்காது.
🏡 ஆனால், அந்தச் சேமிப்பை சரியான வீட்டுமனையில் முதலீடு செய்வதில்தான் தவறிவிடுகிறார்கள். புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வீட்டுமனையைத் தேர்வு செய்ய, மழைக்காலத்தில் செல்வதுதான் சரியானதாக இருக்கும்.
🏡 அப்போதுதான் அந்த இடம் மழைநீரால் சூழப்படும் அளவுக்குத் தாழ்வான பகுதியா என அறிந்து கொள்ள முடியும். வீட்டுமனைக்குச் செல்லும் பாதை எந்த அளவுக்குத் தரமானதாக இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
🏡 அதேபோல, ஏரிப் பகுதிகளையொட்டிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வீடு கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ அனுமதி கிடைப்பதில்லை. ஆனால், நீர்ப்பிடிப்புப் பகுதி என்பதை மறைத்து ஃபிளாட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி வீட்டுமனையைத் தேர்ந்தெடுப்பதில் எண்ணற்றச் சிக்கல்கள் உள்ளன.
🏡 மனையின் நீள, அகல அளவுகள் செவ்வகமாகவோ, சதுரமாகவோ இருப்பதுபோல் பார்த்து வாங்க வேண்டும். முக்கோணமாகவோ, ஏதேனும் ஒரு மூலை குறுகலாகவோ இருப்பதுபோல வாங்கினால், வீடு கட்டுவதும் சிக்கலாக இருக்கும். வாஸ்துவும் சரிப்பட்டு வராது.
🏡 மனையின் விலை நிர்ணயம் குறித்த சந்தை மதிப்பீட்டு அறிவு நமக்கு வேண்டும். அந்தப் பகுதியில் என்ன விலைக்கு மனைகள் விற்கப்படுகின்றன என்பதை விசாரித்து அறிய வேண்டும்.
🏡 அப்படியில்லாமல், குலுக்கல் முறையில் ஃப்ளாட் தருகிறார்கள், வீட்டுமனையோடு இலவசமாக பைக் தருகிறார்கள் என்பன போன்ற கவர்ச்சிகரமான வியாபார உத்திகளுக்குப் பலியாகக் கூடாது.
🏡 சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அங்கீகாரம் பெற்ற மனையா எனப் பார்த்து வாங்க வேண்டும். பஞ்சாயத்து ஒப்புதல் என்றால் வாங்கக் கூடாது. ஏனெனில், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவில் வரும். மேலும், அதில் வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்காது.
🏡 ஒரு மனையின் விலையானது அதை ஒட்டியுள்ள சாலையை வைத்துத்தான் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தச் சாலை அகலமானதாக இருக்கும்பட்சத்தில் விலை அதிகமாக இருந்தாலும் வாங்கலாம்.
🏡 மிகக் குறுகியதாக இருந்தால் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய அவசியமில்லை. மனைப்பகுதியில் நிலத்தடி நீர் எப்படியுள்ளது எனச் சோதித்துப்பார்க்க வேண்டும். உப்புத்தண்ணீராக இருந்தால் கட்டுமானத்துக்கோ, குடிக்கவோ, மற்ற பயன்பாட்டுக்கோ உதவாது என்பதால் அந்த வீட்டுமனையை வாங்குவது பயனற்றது.
🏡 மனையின் மூலப்பத்திரங்களை ஒன்றுக்கு இரண்டு வழக்குரைஞர்களிடம் கலந்தாலோசித்து அது குறித்த விசாரணைகளை முழுமையாக முடித்த பிறகு சரியாக இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.
🏡 அடுத்ததாக தாசில்தார் அல்லது வி.ஏ.ஓ-வை அணுகி, அந்த வீட்டுமனைக்கு பட்டா கிடைக்குமா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம்.
🏡 வீட்டுமனைக்கு சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி ப்ளான் ஒப்புதல் உள்ளதா என்பதை அரசாங்க இணையதளத்தில் காணலாம். அதில் காட்டப்பட்டுள்ள திட்டப்படி வீட்டுமனை அமைந்துள்ளதா என்பதையும், சர்வே எண் சரியா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
🏡 அடுத்ததாக, வீட்டுமனையின் உரிமையாளர், சட்டப்படி சரியான நபர்தானா என்பதைப் பார்க்க வேண்டும். பவர் மட்டும் உள்ளவர் என்றால், அந்த பவர் ஆஃப் அட்டர்னி செல்லுபடியாகுமா என்பதையும் வழக்குரைஞர் மூலம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
🏡 வீட்டுமனைக்கான பத்திரங்கள் அனைத்தும் சரியானவையே என்பதையும், அந்த இடத்தின் மீது வில்லங்கம் ஏதுமில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, வீட்டுமனையில் முதலீடு செய்வதில் மிகுந்த கவனத்தோடும் பொறுப்போடும் செயல்பட்டால், எதிர்காலத்தில் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் அந்த இடத்தில் வீடு கட்டிக் குடியேறலாம்.
🏡 வேறு யாருக்கேனும் விற்பதாக இருந்தாலும், நல்ல விலைக்கு விற்கலாம். மேற்கூறியவற்றை மனதில்கொண்டால், சரியான வீட்டுமனையைத் தேர்வுசெய்வது எளிது.
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB
Blog :
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook :
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram :
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
No comments:
Post a Comment