Thursday, March 30, 2023

மனை உரிமையாளர் - கட்டுனர் இடையேயான ஒப்பந்தம்

மனை உரிமையாளர் - கட்டுனர் இடையேயான ஒப்பந்தம்

🏡 கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னால், கட்டுனர் அல்லது கட்டிட காண்ட்ராக்டருடன் அதற்கான ஒப்பந்தம் நாம் செய்து கொள்வது முக்கியம்.

🏡 கட்டிட ஒப்பந்தங்கள் பலவகையாக உள்ளன. கட்டிட ஒப்பந்தங்களுக்கிடையே அவற்றின் தன்மை மற்றும் அளவு என்பனவற்றில் பெருமளவுக்கு வேறுபாடுகள் காணப்பட்டாலும், எல்லா ஒப்பந்தங்களிலும் சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி காண்போம்.
ஒப்பந்தத்தில் இடம் பெறுபவை :

🏡 மொத்த பட்ஜெட் எவ்வளவு,

🏡 கட்டிடத்தை கட்டுவதற்கான கால வரையறை எவ்வளவு நாட்கள் ஆகும், 

🏡 கட்டுமான மூலப்பொருட்கள் எவ்வளவு ஆகும்.

🏡 அதற்குண்டான செலவுகள் எவ்வளவு ஆகும்.

🏡 ஒவ்வொருவருடையதும் பங்கு, கடமை என்ன என்பனவற்றைத் தெளிவாக வரையறுத்தல்.

🏡 வேலையைத் தொடங்குவதற்கும் அதனை முடிப்பதற்குமான ஒத்துக்கொள்ளப்பட்ட கால அளவு எவ்வளவு.

🏡 கட்டிடத்தை குறிக்கப்பட்ட குறிப்பிட்ட வேலைபாடுகளுடன் அமைக்க குறிப்பிட்ட தொகையொன்றுக்குக் கட்ட ஒப்புக்கொள்ளும் தனிப்பட்டவர் அல்லது நிறுவனம் ஒன்றுக்கும் இடையிலான உடன்படிக்கை என்பது போன்ற சகல விபரங்களுடன் கூடிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுவது முறையாகும்.

🏡 கட்டிட ஒப்பந்தத்திற்கான பலவித ஒப்பந்த வடிவங்கள் உள்ளன. அவற்றுள் ஜேசிடி (JCT) எனப்படும் கூட்டு ஒப்பந்தங்கள் நியாயசபையின் (Joint Contracts Tribunal.) ஒப்பந்த வடிவம், FIDIC ஒப்பந்த வடிவம் என்பன அனைத்துலக அளவில் கைக்கொள்ளப்படுபவை ஆகும்.

🏡 தீர்மானிக்கப்பட்ட கால வரையறைக்குள், கட்டுமான பணிகள் முடிவடையவில்லை என்றால் அதற்காக காண்ட்ராக்டர் அல்லது கட்டுனருடைய பொறுப்புகள் மற்றும் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் இரு தரப்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் 'அக்ரிமெண்டில்' விளக்கமாக குறிப்பிடும் பட்சத்தில் பல சிக்கல்களை சுலபமாக எதிர்கொள்ள முடியும்.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex  and Glow Sign Boards, LED Board, Vinyl Printing,  Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

Wednesday, March 29, 2023

வீட்டு மனைக்கான பத்திர பதிவு நடைமுறைகள், பத்திரப்பதிவு செய்வது எப்படி?

வீட்டு மனைக்கான பத்திர பதிவு நடைமுறைகள்

பத்திரப்பதிவு செய்வது எப்படி?

🏡 ஒரு நிலத்தை ஒருவரிடமிருந்து வாங்கும்போது பத்திரப்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. பத்திரம் என்பது ஒரு சொத்தானது ஒருவருக்கு சொந்தம் என்று சொல்லக்கூடிய அடிப்படை ஆவணமே. பத்திரப்பதிவை வைத்தே பட்டா மாறுதல் செய்ய முடியும். எனவே சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய அடிப்படை ஆவணமாக பத்திரத்தைப் பதிவு செய்வது எப்படி? பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
பத்திரப்பதிவின் அவசியம் :

🏡 பத்திரபதிவின் நேக்கம் ஒரு நிலத்தை ஒருவர் மற்றொருவரிடமிருந்து பணம் கொடுத்து பெற்றுக் கொண்டார் என்பதற்கான அடிப்படை ஆதாரம் ஆகும். 

🏡 ஆனால் பத்திர பதிவு முடிந்து பட்டா மாறுதல் செய்து கொள்ளும் போதே பத்திர பதிவு முழுமையாகும்.

🏡 சொத்தின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பத்திர பதிவின் போது இணைக்க வேண்டிய ஆவணங்கள் :

🏡 விற்பவர், வாங்குபவர் இருவரின் முகவரிச் சான்று

🏡 விற்பவர்,வாங்குபவர் இருவரின் அடையாளச் சான்று

🏡 விற்பவர், வாங்குபவர் இருவரும் இரு தரப்பினரின் சாட்சியை அழைத்து வர வேண்டும்.

🏡 விற்பவர், வாங்குபவர்களின் சமீபத்தில் எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும்.

🏡 பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான ஆவணங்களின் ஒரிஜினல்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.

முத்திரைத்தாளில் என்னென்ன குறிப்பிடப்பட வேண்டும் :
🏡 முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தப்பட்ட விபரங்கள் அனைத்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

🏡 சொத்தை வாங்குபவர் பெயர், சொத்தை விற்பவரி பெயர், சொத்தை விற்பவரின் தந்தையார் பெயர், முகவரி, சொத்தை விற்பனை செய்ய அவருக்குண்டான அதிகாரம்,விற்க சம்மதித்த விபரம், சொத்து விற்பனைக்கு பரிமாரி கொண்ட தொகை, சாட்சிகளின் பெயர்கள், அவர்களின் முகவரி, வாங்குகிற இடத்தின் அளவு அது இருக்கும் திசை, அதை சுற்றியுள்ள அடையாளங்கள் போன்றவை தெளிவாக குறிப்பிட பட்டிருக்க வேண்டும்.

பத்திர பதிவின் கட்டணம் :

🏡 பத்திரப்பதிவின் போது சொத்தின் மதிப்பு, அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு, இரண்டையும் ஒப்பிட்டு வாங்கும் சொத்து மதிப்பிற்கேற்ப முத்திரைத்தாள் பயன்படுத்த பட வேண்டும்.

🏡 சொத்து மதிப்பில் இருந்து எட்டு சதவீதத்தை முத்திரைத்தாள் கட்டணமாக செலுத்த வேண்டும்.

🏡 சொத்து வாங்குவதாகவும், விற்பதாகவும் சிலர் ஒப்பந்தம் செய்து கொள்வதுண்டு. ஒப்பந்தம் செய்ய 20 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணமும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய 50 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணமும் செலுத்த வேண்டும்.

🏡 சொத்தின் உரிமையாளர் பல்வேறு காரணங்களால் தனது சொத்துக்களின் மீதான உரிமையை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ, பராமரிப்பதற்கோ பவர் ஆஃப் அட்டர்னியாக ஒருவரை நியமிப்பதுண்டு. இத்தகைய அதிகாரம் வழங்கினால் இதற்கான முத்திரைத்தாள் கட்டணமாக அசையா சொத்துக்கு 100 ரூபாயும், பதிவுக்கட்டணம் பத்தாயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். 
பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை :

🏡 ஒருவர், தான் வாங்குகிற இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகே இடத்தின் விலையைப் பேசி முடிவு செய்ய வேண்டும். அதையும் வழிகாட்டி மதிப்பின்படியே பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.

🏡 எந்தப் பகுதியில் இடம் அமைந்துள்ளதோ அந்த எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று, அந்த இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதைத் தெரிந்துகொண்டு அந்த மதிப்புக்கேற்ப முத்திரைத்தாள் வாங்கப்பட வேண்டும்.

🏡 பின்னர் பத்திரப்பதிவு அலுவலரிடம் சென்று, பத்திரப்பதிவுக்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். பத்திரத்தில் சேர்க்கப்பட வேண்டிய விவரங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? ஏதேனும் விடுபட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

🏡 முதலிலேயே முத்திரைத்தாளில் எழுதிவிடாமல் ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்து, விவரங்கள் ஏதேனும் சேர்க்கவோ, நீக்கவோ வேண்டுமெனில் அதனைத் திருத்தம் செய்துகொண்டு இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்து எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் முத்திரைத்தாளில் எழுதப்பட வேண்டும்.

🏡 முன்தொகை போக, மீதமுள்ள தொகையை பத்திரப்பதிவு செய்யும் நாளில் கொடுக்க வேண்டும். பத்திரப்பதிவு செய்யுமுன் மொத்தப் பணத்தையும் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

🏡 பத்திரப்பதிவு செய்யும் சிலமணி நேரத்திற்கு முன்பாகவே சொத்தை வாங்குபவர், விற்பவர், சாட்சிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று விட வேண்டும்.

🏡 பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதைக் கேட்டு வாங்க வேண்டும். பின்னர் அந்த ரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து, பத்திரத்தை வாங்கிவிட வேண்டும். அதை வாங்குவதற்கு தாமதம் செய்யக்கூடாது. அதுபோல் பத்திரம் வாங்கியதும் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பித்து விட வேண்டும்.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex  and Glow Sign Boards, LED Board, Vinyl Printing,  Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

Tuesday, March 28, 2023

12yrs Old 2Bhk House FOR Resale in KNG Pudur Coimbatore

🌟🇮🇳கோவை  தடாகம் ரோடு அருகில் KNGபுதூரில் 12 வருட இரண்டு பெட்ரூம் வீடு மறுவிற்பனைக்கு 
👉 _NEAR St.,Paul's School & College

👉 *2 BHK*

👉 *1.75 CENT*

👉 *1050 SQFT*
🪄 _HALL (16*10)_
🪄 _2 BEDROOM'S GROUND + 1st FLOOR_
🪄 _2 BEDROOM'S (10*10) (With Attached Bathrooms)
🪄 _KITCHEN (10*6)_
       _Parking : 10*8
👉 *East FACING SITE*
*EAST FACING DOOR*

👉 *Price: 45 Lakhs
--------------------------------
Sree Kongu Promoters  
R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
_______________________________
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex  and Glow Sign Boards, LED Board, Vinyl Printing,  Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
We do video posting for sellers property land, Plot, House, vacant land, agriculture land,  &etc..kindly contact us any relevant requirements..
தமிழ்நாடு எங்கும் வீடுகள் விற்பனைக்கு உள்ளவர்கள் வீடியோ மார்க்கெட்டிங் செய்ய எங்கள் சேனலை தொடர்பு கொள்ளவும்
-------------------------------------
எங்கள் சேனலில் வரும்  வீடியோவில் பார்க்கும் இடத்தை /வீட்டை வாங்க நீங்கள் விருப்பப்பட்டால் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் வீடியோவில் காணும் ஏதேனும் இடங்களை/வீடுகளை வாங்க நேரிட்டால் வில்லங்க விவகாரங்களை நீங்கள்தான் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் .

#SreeKonguPromoters #RealEstateCoimbatore #RKRealEstateKovai #Compacthouse #Budgethouse #Houses 
#1bhk #2BHK #3BHK #4BHK 
#Housedesign #Landforsale #DreamHome #DreamHouse #Housebuying #HouseSelling #OldHouse #ResaleHouse #Coimbatore #2bhkapartment #3bhkapartment #Houseforsale #apartment #Flats  #Readytooccupy #Construction  #NewHouse

Monday, March 27, 2023

பஞ்சாயத்து மனைக்கான அங்கீகாரம் பெறுவது எப்படி?

🏡 நீங்கள் நகரத்தை ஒட்டிய புறநகர்ப் பகுதியிலோ (அல்லது) கிராமத்தை ஒட்டிய பகுதியிலோ மனை வாங்க விரும்புகிறீர்களா?ஆம் என்றால், குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மனைக்கான அங்கீகாரத்தில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அங்கீகாரம் இல்லாத மனையை வாங்கினால் பின்னர் அஞ்சும் நிலை ஏற்படலாம்.

🏡 நகரங்களில் இன்று காலி மனைகளைக் காண்பதே பெரிதாகிவிட்டது. வீட்டுத் தேவை அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் நகரங்களுக்குள் வீட்டு மனை கிடைப்பதும் குதிரைக் கொம்பாகிவிட்டது. 

🏡 எனவே நகரத்தை ஒட்டிய புறநகர்ப் பகுதிகள் (அல்லது) கிராமங்களில்தான் மனைகளைத் தேடி மக்கள் செல்கிறார்கள். ஆனால், பல மனைகளை முறையாக அரசின் அனுமதி பெறாமல் விற்கப்பட்டு விடுவதால், மனை வாங்கியவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

🏡 தமிழகத்தில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) ஆகிய இரண்டு அமைப்புகள் மட்டுமே வீட்டு மனை லே-அவுட்களுக்கு (Layout) அனுமதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.
🏡 பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு எந்த லே-அவுட்டுக்கும் (Layout) நேரடியாக அனுமதி வழங்கும் அதிகாரம் இல்லை. இந்த விபரம் பலருக்கும் இன்னும் சரியாகத் தெரிவதில்லை. குறைந்த விலையில் கிடைக்கிறது என்று நினைத்துக்கொண்டு பஞ்சாயத்து அங்கீகார மனையை வாங்கிவிடுகிறார்கள்.

🏡 இப்படி வாங்கிய மனையில் வீடு கட்ட அனுமதிக்கும்போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சி.எம்.டி.ஏ. (CMDA), டி.டி.சி.பி. (DTCP) அங்கீகாரம் இல்லாமல் எந்தக் கட்டிட அனுமதியும் வழங்குவதில்லை மற்றும் வங்கிகளும் வீட்டுக் கடன் கொடுப்பதில்லை. எனவே மனையை வாங்கி வைத்துவிட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள் உள்ளன.

🏡 இதுபற்றி அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் சிக்கல் இல்லாத மனைகளை வாங்கிவிடலாம். அரசு சொல்லும் வழிமுறைகள் என்ன என்பதை கீழே காண்போம்.
🏡 மனைகளைப் பிரித்து லே-அவுட் (Layout) போட்டு விற்பனை செய்யும் புரோமோட்டர்கள் (Promoters), பிரதான சாலைக்குக் குறைந்தபட்சம் 30 அடி அகலம், குறுக்குச் சாலை என்றால் குறைந்தபட்சம் 21 அடி அகலத்தில் அமைக்க வேண்டும்.

🏡 வீட்டு மனைகளில் தெருக்களின் சாலை வசதி, வடிகால் வசதி, தெரு விளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். புரோமோட்டர்கள் (Promoters) இதை அமைக்காமல் இருந்தால், இவற்றை அமைக்கச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இதற்கான அபிவிருத்திக் கட்டணத்தை மனை விற்பனை செய்பவர்களைச் செலுத்த சொல்வது வழக்கம்.

🏡 மொத்த மனைப் பிரிவில் 10 சதவீத நிலத்தை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிக்கு புரோமோட்டர் (Promoters) தான பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுக்க வேண்டும். இதன் பிறகு இந்த 10 சதவீத பகுதிக்கும் புரோமோட்டருக்கும் (Promoters) தொடர்பு இல்லை என்றாகிவிடும்.
🏡 சம்பந்தப்பட்ட வீட்டு மனை பிரிவு எதிர்காலத்தில் வளர்ச்சி அடையலாம் அல்லவா? அப்போது அந்தப் பகுதியில் அரசின் சார்பில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், நியாய விலை கடை மற்றும் அரசு துறையின் கீழ் வரும் இதர கட்டிடங்கள் கட்ட இந்த 10 சதவீத இடத்தை ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளும்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் :

🏡 தமிழகத்தில் சுமார் 27,000 அங்கீகாரமில்லாத லே-அவுட்டுகளில் சுமார் 13.5 லட்சம் மனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20.10.16-க்கு முன் மனையை பதிவு செய்திருந்தால் மனைகளின் உரிமையாளர்கள், அதனை இப்போது யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். 

🏡 இந்த மனைகளை வாங்குபவர்களும் யாருக்கு வேண்டுமானலும் விற்பனை செய்யலாம். ஆனால் பிற்காலத்தில் வீடு கட்டும்போது, ஒப்புதல் மனை என்கிற அங்கீகாரம் தேவைப்படும். 

🏡 அப்போது, மனையின் உரிமையாளர் அல்லது லே-அவுட் போட்டிருப்பவர், தங்களுடைய மனையை முறைப்படுத்தக்கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கு அந்த லே-அவுட்டின் உரிமையாளர், 20.10.16-க்கு முன் ஒரு மனையையாவது பதிவு செய்து தந்திருக்க வேண்டும்.

🏡 அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க அந்த மனையானது அனைவருக்கும் உரிமையுள்ள பொதுச் சாலையில் அமையப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்தி, பொதுச் சாலையிலிருந்து மனையை இணைக்கும் வழிப்பாதையைப் பயன்படுத்த மனை உரிமையாளருக்கு உரிமை இருந்தால் போதும் என இப்போது மாற்றப்பட்டுள்ளது.
🏡 அங்கீகாரம் பெறாத லே-அவுட்டுகளில், ஏற்கெனவே 20.10.16 தேதிக்குள் பத்திரப்பதிவு செய்தது, அந்த லே-அவுட்டில் மூன்றில் இரண்டு பங்காக இருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் விதிமுறை வகுக்கப்பட்டது. அது 20.10.16-க்குள் ஒரு லே-அவுட்டில் ஒரே ஒரு மனை கிரயம் செய்யப்பட்டிருந்தால் கூட முழுமையாக அந்த மனைப் பிரிவையே டி.டி.சி.பி மூலம் முறைப்படுத்தலாம் என விதிமுறை மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், திறந்தவெளி ஒதுக்கீட்டுக் கட்டணம் நீக்கப்பட்டு உள்ளது.

அதிகக் கட்டணங்கள் :

🏡 தற்போதைய நிலையில், மேம்பாட்டுக் கட்டணம் (Development charge), ஒழுங்கு முறைக் கட்டணம் (Regularisation Charge) மற்றும் சீராய்வுக் கட்டணம் (Scrutiny Fees) ஆகிய மூன்று கட்டணங்களைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

மேம்பாட்டுக் கட்டணம் :

🏡 மேம்பாட்டுக் கட்டணம், மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து ஒரு சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.500-ம், சிறப்பு மற்றும் தேர்வுநிலை மாநகராட்சி எனில் ரூ.250, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.150, நகர பஞ்சாயத்து எனில் ரூ.75, கிராமப் பஞ்சாயத்து எனில் ரூ.25 வசூலிக்கப்படுகிறது.

🏡 இப்படி வசூலிக்கப்படும் மேம்பாட்டுக் கட்டணம் அந்த உள்ளாட்சி அமைப்புகளின் தனிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு குடிநீர், சாலை, தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்க செலவிடப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறைக் கட்டணம் :

🏡 இக்கட்டணமும் மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து, சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.100, சிறப்பு மாநகராட்சி எனில் ரூ.60, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.60, நகரப் பஞ்சாயத்து எனில் ரூ.30, கிராமப் பஞ்சாயத்து எனில் ரூ.30 கட்ட வேண்டும்.

சீராய்வுக் கட்டணம் :

சீராய்வுக் கட்டணமாக மனை ஒன்றுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். ஒருவர் ஒரு லே-அவுட்டில் மூன்று சென்ட் வீதம் 10 மனைகள் என மொத்தம் 30 சென்ட் வாங்கியிருந்தால், அவர் சீராய்வுக் கட்டணமாக மட்டுமே ரூ.5,000 செலுத்த வேண்டும்.

மாநகராட்சி பகுதியில் ஒருவர் 1,200 சதுர அடி மனையை டி.டி.சி.பி ஒப்புதல் மனையாக மாற்ற ரூ.67,700 கட்டணமாக செலுத்த வேண்டிவரும். இதுவே கிராமப் பஞ்சாயத்து என்றால் ரூ.6,500 கட்ட வேண்டும். இதுதவிர, அதிகாரிகளை மனை இருக்கும் இடத்துக்கு அழைத்துவரும் செலவுகளும் இருக்கின்றன.
விண்ணப்பிக்கும் முறை :

🏡 மனைக்கான அங்கீகாரத்தைக் கோரும் விண்ணப்பத்தினை www.tnlayoutreg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாகப் படிவம்-1-யைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது சீராய்வுக் கட்டணமாக ரூ.500 இணையம் மூலம் செலுத்த வேண்டும். இப்படி விண்ணப்பித்தபின், நாம் விண்ணப்பித்ததற்கான பதிவுச்சீட்டு சான்று இணையத்தில் வழங்கப்படும். அப்பதிவுச் சீட்டினைப் பெற்று, அதிலிருந்து 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் பின்வரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

🏡 விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள கிரயப் பத்திரம், விண்ணப்பதாரரின் பெயரில் பெறப்பட்ட பட்டா அல்லது முந்தைய உரிமையாளரின் பெயரில் பெறப்பட்ட பட்டா. விண்ணப்பம் செய்யப்படும் நாளன்று, ஒரு வார காலத்திற்கு முன்பு வரை உள்ள நிலை தொடர்பாக சார்பதிவாளரிடமிருந்து பெறப்பட்ட வில்லங்கச் சான்று.

🏡 மனையானது விவசாய பகுதிக்குள் அமைந்திருந்தால், சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நீர்வழிப் போக்குவரத்து, வெள்ளம் போன்ற பாதிப்பு குறித்து சான்று பெறப்பட வேண்டும்.

🏡 மனைப் பிரிவைச் சுற்றி பொது உபயோகச் சாலையை இணைக்கும் மற்றும் சுற்றியுள்ள அபிவிருத்திகள் குறிப்பிட்டு, சுற்றுச்சார்பு வரைபடம் (Topo Sketch) இணைக்கப்பட வேண்டும்.

🏡 லே-அவுட்டின் (Layout) வரைபடம், எல்லை அளவுகள் குறிப்பிடப்பட்டு மனையின் உட்பிரிவு காட்டப்பட்டு மனையைச் சுற்றியுள்ள சாலையின் அளவுகள் குறிப்பிடப்பட்டு, உரிமம் பெற்ற சர்வேயர் கையொப்பமிட்டு வழங்கும் இட அமைப்பு வரைபடம் (FMB – Field Measurement Book) இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

🏡 நமது லே-அவுட் அரசின் விதிகளுக்கு உட்பட்டு சரியாக இருந்தால், முறைப்படுத்தும் அதிகாரி அதற்கான ஒப்புதலை வழங்கி, பிற கட்டணங்களைச் செலுத்துவதற்காக உத்தரவிடுவார். அதிலிருந்து 30 நாள்களுக்குள் அனைத்துக் கட்டணங்களையும் நாம் செலுத்தியபின், முறைப்படுத்திய தொடர்பான ஆணை வழங்கப்படும்.
🏡 மனைபிரிவு அமைவிடத்தை பற்றிய விவரங்களை எடுத்துகொண்டு டிடிசிபி அலுவலகம் சென்று டிடிசிபி அங்கீகாரம் மேற்படி இடத்திற்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்று டிடிசிபி அலுவலகத்திடம் தோராய கருத்துரை வாங்க வேண்டும்.

🏡 அதாவது மேற்படி இடம் டிடிசிபி அங்கீகாரம் தடை செய்யப்பட்ட பகுதியில் வருகிறதா? டிடிசிபியின் LPA லிமிட்டுகுள் வருகிறதா?அல்லது Regional எல்லைக்குள் வருகிறதா? போன்ற கருத்துரை வாங்க வேண்டும்.

🏡 தடை செய்யபட்ட பகுதிகள் என்பது மயானத்திற்கு மிக அருகில், நீர்நிலைக்கு மிக அருகில் உள்ள மலைபகுதிகள், குவாரிகள், விமானநிலையங்கள், இரயில்நிலையங்கள் அருகில், பறவைகள் சரணாலயம், ரிசர்வ் காடுகள் போன்று ஒவ்வொரு டிடிசிபி மண்டலத்திலும் ஒவ்வொரு விதமாக தடைசெய்யபட்ட பகுதிகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

🏡 அடுத்ததாக மனைபிரிவுக்கான இடம் பஞ்சாயத்து, வட்டார, மாவட்ட, மாநில,தேசிய சாலைகளுடன் ஒட்டி வருகிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு வந்தால் சிறப்பு, அவ்வாறு வரவில்லை எனில் அரசு சாலைக்கும் உருவாக்க இருக்கும் மனைபிரிவிற்கும் இடைப்பட்ட தூரத்திற்கு 30அடி சாலை நாமே உருவாக்க வேண்டும்.

🏡 ஏற்கனவே அரசு சாலை இருந்தால் அது வருவாய்துறை FMB யில் தனி உட்பிரிவு சர்வே எண் கொடுத்து புலப்படம் தனியாக வரைந்து காட்டப்பட்டு இருக்கும். அரசு சாலை இடத்துடன் ஒட்டி இல்லாத நிலையில் நாமே உருவாக்கும் சாலை உருவாகும் மனைபிரிவிற்கும், அங்கு இருக்கும் அரசு சாலைக்கும் இணைக்கப்படும் தூரத்தை FMB-யில் தனியாக உட்பிரிவு செய்து வரைபடம் FMB-யில் கட் செய்ய வேண்டும்.
🏡 அடுத்து மனைபிரிவு உருவாகும் இடத்தின் FMB மற்றும் அதனை சுற்றி இருக்கிற புலபடத்தின் FMB, டோபோ ஸ்கெட்ச், பட்டா, சிட்டா, அ-பதிவேடு அனைத்தும் VAO-வின் கையெழுத்து மற்றும் முத்திரையுடன் நகல்கள் பெறவேண்டும்.

🏡 அரசு வழக்கறிஞர் அல்லது அதற்கு இணையான வழக்கறிஞரிடம் மனைபிரிவு உருவாகும் இடத்தின் ஆவணங்களை கொடுத்து சட்ட கருத்துரை அவருடைய லெட்டர் பேடில் வாங்க வேண்டும்.

🏡 நல்ல சிவில் இன்ஜீனியரை வைத்து மனைபிரிவு FMB-க்களை கிளப் செய்து உத்தேச மனை பிரிவிற்கான வரைபடம் வரைந்து கொள்ளவும்.

🏡 VAO கையெழுத்திட்ட ஆவணங்கள் வழக்கறிஞர் கொடுத்த சட்டக்கருத்துரையுடன் கூடிய நிலத்தின் ஆவணங்கள் இன்ஜினியரால் வரையப்பட்ட உத்தேச வரைபடம் ஆகியவற்றை இணைத்து DTCP ஆபிஸ்க்கு டிடிசிபி அங்கீகாரம் வேண்டி ஒரு மனு எழுதி சமர்பிக்க வேண்டும்.

🏡 மனு செய்த பிறகு BDO-க்கும் மாவட்ட வேளாண்மை அலுவலகத்திற்கும் வட்டாட்சியருக்கும் தடையின்மை சான்று (NOC) கேட்டு டிடிசிபி அலுவலகம் forward செய்வார்கள். அதனுடைய நகல் தங்களுக்கு வரும், அதனை எடுத்துக்கொண்டு மேற்படி அலுவலகம் சென்று நாம் பின்தொடரல் செய்தல் வேண்டும்.

தாசில்தார் இடம் வாங்க வேண்டிய தடையின்மை சான்றுகள் (NOC):

🏡 நில உச்சவரம்பு இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).

🏡 நில ஆர்ஜிதம் இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).

🏡 இதில் புறம்போக்கு நிலம் ஏதும் இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).

🏡 இதில் வருவாய்துறை சிக்கல்கள் தடை ஆணைகள் ஏதும் இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).

🏡 மேற்படி சான்றுக்காக தாசில்தார், துணைதாசில்தார் (D.T) வருவாய் ஆய்வாளர் (RI), கிராம நிர்வாக அலுவலர் (VAO) என்று படிநிலையாக இறங்கி மீண்டும் VAO, RI, DT, தாசில்தார் என படிநிலையாக ஏறி NOC சான்று பெற வேண்டும்.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex and Glow Sign Boards, LED Board, Vinyl Printing, Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup : 🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai

Sunday, March 26, 2023

வாங்கிய வீட்டு மனைக்கான வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?

வாங்கிய வீட்டு மனைக்கான வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?

🏡 வில்லங்கச் சான்றிதழ் (Encumbarance Certificate - EC), ஒரு சொத்துக்கு யார் உரிமை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாகும். வில்லங்கச் சான்றிதழ் என்பது ஒரு சொத்து யாருடைய கைகளில் இருந்து எப்படி மாறி வந்துள்ளது, சொத்து உரிமை யாருக்கு மாற்றப்பட்டது போன்ற விபரங்களை அறிந்துகொள்ளும் ஆவணமாக உள்ளது. வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிட்ட சொத்தின் மீதான சட்டபூர்வமாக வில்லங்கங்கள் தெரியவரும். 

🏡 எனவே சொத்தினை வாங்குவதற்கு முன், அச்சொத்து குறித்த வில்லங்கச் சான்றிதழைப் பத்திரப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற்று, சொத்து குறித்தும், அதன் உண்மையான உரிமையாளர்களை குறித்தும் சரிபார்க்க வேண்டும்.

🏡 ஒரு சொத்தை வாங்க விரும்புபவர்கள், அந்தச் சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா? சொத்தை விற்பவர் பெயரில்தான் அந்தச் சொத்து உள்ளதா? என்பதை அறிவதற்காக சொத்து விபரத்தைத் தெரிவித்து வில்லங்கச் சான்றிதழை பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி பெற வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத் துறை இணையதளத்திலும் வில்லங்கச் சான்றிதழைப் பெறலாம்.

வில்லங்கச் சான்றிதழ் என்பது என்ன?

🏡 ஒருவர் தான் வாங்குகிற சொத்துக்களை உரிய முறையில் பதிவு செய்வது மிக அவசியம். ஆனால் பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாக பல சொத்துப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வில்லங்க சான்றிதழ் எனப்படும் EC (Encumbrance Certificate) மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விபரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

வில்லங்க சான்றிதழின் அவசியம் 

🏡 வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்குகிற போது அதற்கு சட்ட ரீதியான வழிமுறை என்ன என்பதை அறியாமல் கேள்விப்படும் விபரங்களைக் கொண்டும், தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் என்றும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். ஒருவேளை அந்த சொத்தானது சரியான முறையில் பதிவு செய்யப்படாத நிலையில் சொத்தினை வாங்குபவர்கள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகக் கூடும். சில சமயங்களில் சொத்துக்களை இழக்கும் நிலை கூட வரலாம். எனவே வாங்குகிற சொத்தில் வில்லங்கம் ஏதும் இருக்கிறதா? என்று பார்த்து வாங்கினால் எந்த வில்லங்கமும் வராது. அப்படியே வில்லங்கம் இருந்தால் அதை வாங்காமல் வில்லங்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வில்லங்க சான்றிதழில் என்னென்ன விபரங்கள் இருக்கும்?

🏡 சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விபரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், தொகுதி மற்றும் பக்க எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்.

🏡 மேற்கண்ட இவற்றின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது போன்ற முழு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். வில்லங்க சான்றிதழை வைத்தே தாய்பத்திரத்தில் இருந்து யாரிடம் நிலம் வாங்கப்படுகிறதோ அதுவரைக்கும் உள்ள அனைத்து பத்திரங்களையும் சரிபார்த்து கொள்ளலாம். 

🏡 அதுமட்டுமின்றி அந்த சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் பதிவு செய்யப்பட்ட அடமானத்தில் இருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

வில்லங்க சான்றிதழுக்கு எங்கே விண்ணப்பிப்பது?

🏡 எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கே வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் வில்லங்க சான்றிதழ் பெற முடியும்.

விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?

🏡 அந்தந்த ஏரியா பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இதற்கான விண்ணப்பம் கிடைக்கும்.

எப்படி விண்ணப்பிப்பது?

🏡 விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, சொத்து விபரம் மற்றும் கிரையப்பத்திர விபரம் முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் பெற முடியும்?

🏡 பொதுவாக முப்பது ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தான் வில்லங்கச் சான்றிதழ் கேட்கப்படுகின்றது. அவரவர் தேவையைப் பொறுத்து வருடங்கள் மாறுபடலாம்.

கட்டணம் எவ்வளவு?

🏡 பத்து வருடங்களுக்கு எனில் முதல் வருடத்திற்கு 15 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படும். இதனுடன் விண்ணப்பத்திற்கு 11 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆன்லைனில் வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

🏡 தற்போது பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணிணி மயமாக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 26 ஆண்டுகளுக்கு அதாவது 1987 ஆம் ஆண்டு முதல் சொத்துவிபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே 1987க்குப் பிறகான வில்லங்க சான்றிதழை பெறுவது எளிது. அதற்கு மேல் வேண்டுமெனில் தேடி கைப்பட எழுதித்தான் தருவார்கள்.

🏡 ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும். http://www.tnreginet.net/ என்ற இணையதளத்திற்கு சென்று அனைத்து விபரங்களையும் பதிவிட்டு EC பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் ஒரு ரூபாய் மட்டுமே ஆகும்.

வில்லங்க சான்றிதழில் தெரிந்து கொள்ள முடியாத சில தகவல்கள்:

🏡 சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் போட்டிருந்தாலோ, அடமானம் வைத்திருந்தாலோ இது குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது.

🏡 1.11.2009க்குப் பின்னர் சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு Power of attorney யாக யாரையாவது நியமித்திருந்தால் அதைத் தெரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அதற்கு முன் அதனை பதிவு செய்யும் முறையை அரசு அமல்படுத்தவில்லை. எனவே 1.11.2009க்கு முன் உள்ள Power of attorney குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது.

வில்லங்க சான்றிதழ் இணையத்தில் பெறும் முறை :

🏡 வீடு, நிலம் போன்ற சொத்துக்களை வாங்குவோர் அதன் முந்தைய உரிமையாளர்கள் பற்றி அறிந்துகொள்ளவும், சொத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா எனத் தெரிந்துகொள்ளவும் வில்லங்க சான்று பெறுவது வழக்கம்.

🏡 முதலில் Browser- ல் தமிழகப் பதிவுத்துறையின் tn.reginet.net என்ற இணையதள முகவரியை Search செய்ய வேண்டும். அந்த இணையதளத்தில் வில்லங்க சான்றை பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் தனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

🏡 வில்லங்க சான்றை பார்ப்பதற்கு, "To view encumbrance certificate" என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பார்க்க முடியும்.

🏡 வில்லங்க சான்றை பெற, "Apply Online" என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் படிவம் திறக்கப்படும். அதில் உங்கள் பெயர், தொலைபேசி எண், பதிவு மண்டலம், பதிவு மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம், சர்வே எண், தேதி மற்றும் மாதங்கள் உட்பட எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் தேவைப்படுகிறது என்ற விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 

🏡 பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள ஊர் ஆகிய தகவல்களை பதிவு செய்தும் வில்லங்க சான்று விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். அதே பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டு எண்ணை தருவதன் வாயிலாக 10 நிமிடங்களுக்குள் வில்லங்கச் சான்று விபரங்களை இணையத்தில் பார்க்க இயலும்.

🏡 அத்துடன் PDF வடிவத்திலும் வில்லங்கச் சான்று விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

🏡 தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையத்தின் மூலம் வில்லங்க சான்று விபரங்களை இலவசமாகப் பெறுவது சுலபமான ஒன்றாகிவிட்டது.

🏡 மேலும் விபரங்களறிய வாங்கவிருக்கும் சொத்து, எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் எல்லைக்குட்பட்டதோ அந்த சார்பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

🏡 மேலும் வில்லங்கச் சான்றிதழில் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தின் மூலம் வாங்கவிருக்கும் சொத்து, எந்த தேதியில் பதிவு செய்யப்பட்டது? யார் பெயரில் எந்தெந்த ஆண்டுகளில் இந்த சொத்து அனுபவத்தில் இருந்தது? யார் யாரிடம் கைமாறி வந்திருக்கிறது? உள்ளிட்ட விபரங்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex  and Glow Sign Boards, LED Board, Vinyl Printing,  Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

Saturday, March 25, 2023

Foam Letter Board

🙏Sree Kongu Ads
Coimbatore
Flex & Glow Sign Boards, Vinyl Printing, L.E.D Boards, Sticker work, Multicolour and offset printing works, Designing.
We assure our best services at all times.
Regards.
R.Karthikeyan 
Call/Whatsup: 🇮🇳+91 8248479255
sreekongupromoterskovai@gmail.com

We r in social media

#SreeKonguAds #FlexBoard #GlowSignBoard #LED_Board

பவர் மூலம் சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

பவர் மூலம் சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

🏡 சொத்து வாங்கும் போது பயன்படுத்தப்படும் ஆவணங்கள் வரிசையில் பவர் ஆப் அட்டர்னிக்கு (பொது அதிகார பத்திரம்) முக்கிய பங்கு இருக்கிறது.

🏡 ஒருவர் தனது சொத்தை விற்பனை செய்வதற்கு தனது சார்பில் ஒருவரை நியமித்து அவருக்கு அதிகாரம் வழங்குவது தான் பவர் ஆப் அட்டர்னி எனப்படுகிறது.

🏡 இந்த பவர் கொடுக்கும் அதிகாரத்திலும் சில வரைமுறைகள் இருக்கின்றன. அதிலும் சொத்தை விற்பனை செய்வதற்கு மட்டுமே பவர் எழுதிக்கொடுக்கப்படுவதில்லை.

பவர் அதிகாரம்

🏡 சொத்தை வாங்குவதற்கும், சொத்தை நிர்வகிப்பதற்கும் பவர் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும். முக்கியமாக சொத்தை விற்பதற்கு முந்தைய பரிவர்த்தனை நிலையான விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கலாம்.

🏡 அப்படி இருந்தால் அவரிடம் இருந்து சொத்தை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை, விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு மட்டுமே அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பவருக்கு நேரடியாக சொத்தை விற்பனை செய்யும் உரிமை கிடையாது.

🏡 அவரால் சொத்தை விற்பனை செய்வது குறித்து ஒப்பந்தம் மட்டுமே போட்டுக் கொடுக்க முடியும். சொத்தை பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக விற்பனை ஆவணம் எழுதித்தர முடியாது. அதை மீறி அவர் உண்மைகளை மறைத்து விற்பனை ஆவணம் எழுதித் தந்தாலும் அது செல்லாது. ஆகையால் சொத்தை விற்பனை செய்பவர் பவர் வைத்திருந்தால் அந்த சொத்தை வாங்குவதற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது.

🏡 பவர் பத்திரம் எழுதிக்கொடுப்பதில் பல வகைகள் உள்ளன. நிர்வகிக்க மட்டுமல்லாது அந்த நிலத்தின் விற்பனை உரிமையையும் ஒருவருக்கு எழுதிக் கொடுக்க முடியும். இந்த அடிப்படையில் தான் பவர் பத்திரம் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் இன்றைக்கு கட்டப்பட்டு விற்கப்படுகின்றன.

🏡 இம்மாதிரியான பவர் பத்திரம் மூலம் நிலம் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். விற்பனை அதிகாரம் சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்துப் பார்த்த பிறகு தான் வாங்க வேண்டும். 

🏡 எந்த வகை அதிகாரப் பத்திரமாக இருப்பினும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்பத்திரத்தில் அதிகாரம் கொடுப்பவரும் அதிகாரம் பெறுபவரும் கையொப்பமிட வேண்டும். இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் இந்தப் பத்திரம் இயற்றப்படும். இந்த நால்வரின் தங்கும் முகவரிக்கான சான்று சமர்ப்பிக்க வேண்டியதும் அவசியம். இவர்களின் புகைப்படமும் அந்தப் பத்திரத்தில் இடம் பெற வேண்டும்.

🏡 இதில் சரியாக இல்லை என்றாலும் நஷ்டம் அடையக் கூடும். பவர் பத்திரம் எழுதிக்கொடுத்த உரிமையாளரைச் சந்தித்து அந்த பவர் பத்திரம் குறித்து கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

🏡 பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிக்கொடுத்த பவர் பத்திரம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம். ஒருவேளை உரிமையாளர் இறந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 

🏡 அப்படி இருக்கும் பட்சத்தில் பவர் பத்திரம் செல்லாததாகிவிடும். உரிமையாளர் உயிரோடு இருக்கும் வரைதான் பவர் பத்திரம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

🏡 ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி என்பது ஒரே ஒரு வேலையை மட்டும் செய்வதற்காக கொடுக்கும் பவர் பத்திரம் ஆகும்.

🏡 ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வேலையை செய்வதற்கு கொடுக்கப்படும் பவர் பத்திரம் ஆகும்.

🏡 ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனுதாரர் தனக்கு பதிலாக வேறு ஒரு நபரை ஏஜென்ட்டாக நியமித்து பவர் கொடுப்பது . 

🏡 வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபர் தனக்கு பதிலாக சொத்தை வாங்குவதற்கு ஒரு ஏஜென்ட்டை நியமித்து பவர் கொடுப்பது போன்றவை ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி .

🏡 நீதிமன்றத்தில் வழக்கு போடுவதற்கு போடும் ஸ்பெசல் பவர் பத்திரம் என்பது ஒரே ஒரு வழக்குத்தான். ஆனால் அது தொடர்பாக பல வேலைகள் செய்ய வேண்டி இருந்தாலும் , அது ஒரு வேலையின் தொடர் வேலை என்பதால் அதுவும் ஒரு வேலை தான்.

🏡 ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி, உதாரணமாக சொத்தை நிர்வகிக்க வரி செலுத்தி வர, அடமானம் வைத்து கொள்ள , அடமான பத்திரம் எழுதிக் கொடுக்க வாடகை & லீசுக்கு விட, கட்டிடம் கட்ட , ஒப்புதல் வாங்க, வாடகை வசூல் செய்ய, வாடகைதாரரை காலி செய்ய, கோர்ட்டில் வழக்கு தொடர வக்கீல் நியமிக்க, மற்ற இதர அரசு அலுவலங்களுக்கு சொத்து சம்பந்தமான வேலைகளை செய்ய என அனைத்து வேலைகளுக்கும் பவர் கொடுத்து ஏஜென்ட் வைத்து கொள்ளுதல் ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி ஆகும்.

🏡 எதுவுமே குறிப்பிடாமல் இரண்டு நபருக்கு பவர் கொடுத்தால் இரண்டு பேரும் சேர்ந்தே அந்த வேலையை செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் . ஆவணங்களில் இரு நபருமே கையெழுத்து இட வேண்டிய நிலை இருக்கும்.

🏡 ஒருவரை ஏஜென்ட்டாக நியமித்து அவரை நீக்கமும் செய்யலாம், அதற்கு தனியாக பவர் ரத்து பத்திரம் ஒன்று எழுதி பத்திர அலுவலகத்தில் பதிய வேண்டும்.

🏡 ஒரு ஏஜென்ட்டை நியமித்து அவரை நீக்கும் வரை அந்த ஏஜென்ட் செய்த எல்லா வேலைகளும் பவர் கொடுத்தவரை கட்டுபடுத்தும். ஏஜென்ட் செய்த வேலைகள் எல்லாம் சட்டப்படி பவர் கொடுத்தவர் செய்த வேலைகளாகவே கருதப்பட வேண்டும்.

🏡 ஒரு ஏஜென்ட்டை நியமித்து விட்டு, அந்த ஏஜென்ட்டை நீக்கமால் பவர் எழுதி கொடுத்தவர் இறந்து விட்டாலோ, மனநிலை பாதிக்கபட்டாலோ, அந்த பவர் பத்திரம் செல்லாததாகி விடும்.

🏡 ஒரு பவர் பத்திரத்தில் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவரிடமிருந்து எந்த பணமும் வாங்கவில்லை என்ற உறுதிமொழியும் எழுதி இருக்க வேண்டும். பவர் பத்திரத்தில் பணபரிமாற்றம் நடைபெறுதல் காட்டக்கூடாது.

🏡 பவர் எழுதி கொடுக்கும் நபர், நல்ல நபர்களை ஏஜென்ட்டாக வைக்கவில்லை என்றால் , பவர் கொடுக்கும் நபர் பெயரில் பணமோ அல்லது நிலமோ மோசடி செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பவர் கொடுத்தவரும் அலைக்கழிக்கப்படுவார்கள்.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex  and Glow Sign Boards, LED Board, Vinyl Printing,  Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

Friday, March 24, 2023

கோவை தடாகம் ரோடு TVSநகரில் 3Bhk வீடு விற்பனைக்கு | 3Bhk HOUSE FOR SALE in Thadagam Road, TVS Nagar,COIMBATORE

கோவை  தடாகம் ரோடு TVSநகரில் 3Bhk வீடு விற்பனைக்கு | 3Bhk HOUSE FOR SALE in Thadagam Road, TVS Nagar,COIMBATORE

🪄 *3 BHK*

🪄 *2.5 CENT*
      Building Area 1700sqft.,

🔸 _HALL (16*16)_
🔸 _Kitchen (16*8)_
🔸 _POOJA ROOM (Partition)
🔸 _BEDROOM (8*16)_
🔸 _ BATHROOM (8*4)_
First Floor
🔸 _BEDROOM (10*16)_ *2Nos
🔸 _ BATHROOM (8*4)_*2Nos.
🔸 _ Portico (15*12)
    
🪄 *North FACING SITE*
🪄 *North FACING DOOR*

🪄 *PRICE: 85 Laksh
--------------------------------
Sree Kongu Promoters 
R.Karthikeyan
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
_______________________________
Sree Kongu Promoters
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you.
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex  and Glow Sign Boards, LED Board, Vinyl Printing,  Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore
Regards.
R.Karthikeyan
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB 

Blog :
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook :
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram :
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
We do video posting for sellers property land, Plot, House, vacant land, agriculture land,  &etc..kindly contact us any relevant requirements..
தமிழ்நாடு எங்கும் வீடுகள் விற்பனைக்கு உள்ளவர்கள் வீடியோ மார்க்கெட்டிங் செய்ய எங்கள் சேனலை தொடர்பு கொள்ளவும்

என்.ஓ.சி (N.O.C. -No Objection Certificate)

என்.ஓ.சி (N.O.C. -No Objection Certificate)

🏡 என்.ஓ.சி என்பது ஒரு சட்ட ஆவணம் ஆகும். நீங்கள் சட்ட ரீதியாக பெறவேண்டிய தடையின்மை சான்றிதழ் தான் என்.ஓ.சி. இது நீங்கள் வாங்கக் கூடிய நிலத்திற்கு கட்டாயம் பெற வேண்டிய ஒரு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.

🏡 வீட்டு மனை வாங்கும்போது என்.ஓ.சி - ன் தேவை மற்றும் அதனின் முக்கியத்துவத்தை பற்றி பார்ப்போம்.

🏡 நீங்கள் வீட்டு மனை வாங்கும்போது அருகில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தே வாங்க வேண்டும். ஏனென்றால், மனையோ நிலமோ குறிப்பிட்ட இடங்களுக்கு அருகில் இருந்தால், அதற்கான தடையில்லாச் சான்றிதழை நீங்கள் பெற வேண்டும்.

🏡 உங்களது மனைக்கு அருகில் குளமோ, ஏரியோ 15 மீட்டர் தூரத்தில் இருந்தால், நீங்கள் அந்த மனைக்கு பொதுப் பணித்துறை அல்லது தொடர்புடைய துறைகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

🏡 நீங்கள் வாங்கிய மனைக்கு 30 மீட்டர் தொலைவிற்குள் இரயில்வே இருப்புப் பாதை இருந்தால், இரயில்வே துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

🏡 மேலும் மனைக்கு அருகில் குப்பைக் கிடங்கு இருந்தால், உள்ளாட்சித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

🏡 உங்களது மனைக்கு 90 மீட்டர் தொலைவிற்குள் மயானப் பூமியோ இருந்தால், சுகாதாரத் துறை அதிகாரியிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

🏡 கல்குவாரிக்கு 300 மீட்டர் தூரத்தில் உங்களது மனை இருந்தால் நீங்கள் சுரங்கத்துறையிடம் கட்டாயம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும்.

🏡 விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் மனை இருந்தால் விமான நிலைய ஆணையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

🏡 இதை தவிர்த்து உங்களது மனைக்கு 30 ஆண்டுகளுக்கான வில்லங்கமில்லாச் சான்றிதழும் அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையும் தேவைப்படும்.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex  and Glow Sign Boards, LED Board, Vinyl Printing,  Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore.

Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

Thursday, March 23, 2023

4 Yrs old North facing Beautiful 3Bhk Housefor Sale in Luna NagarNearby Thadagam Road, Coimbatore

,
🌟🇮🇳கோவை  தடாகம் ரோடு லூனா நகரில் 3Bhk வீடு மறுவிற்பனைக்கு | 🌟4 Yrs old 
North facing Beautiful 3Bhk House
for Sale in Luna NagarNearby Thadagam Road, Coimbatore

🪄 *3 BHK*

🪄 *2.75 CENT* (20*60)
      Building Area 1800sqft.,

🔸 _HALL (16*16)_
🔸 _Kitchen (16*8)_
🔸 _POOJA ROOM (Partition)
🔸 _BEDROOM (8*16)_
🔸 _ BATHROOM (8*4)_
First Floor
🔸 _BEDROOM (10*16)_ *2Nos
🔸 _ BATHROOM (8*4)_*2Nos.
🔸 _ Portico (20*12)
     
🪄 *North FACING SITE*
🪄 *North FACING DOOR*

🪄 *PRICE: 80 Laksh (Nago)
--------------------------------
Sree Kongu Promoters  
R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
_______________________________
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex  and Glow Sign Boards, LED Board, Vinyl Printing,  Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore
Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
We do video posting for sellers property land, Plot, House, vacant land, agriculture land,  &etc..kindly contact us any relevant requirements..
தமிழ்நாடு எங்கும் வீடுகள் விற்பனைக்கு உள்ளவர்கள் வீடியோ மார்க்கெட்டிங் செய்ய எங்கள் சேனலை தொடர்பு கொள்ளவும்.

Glow sign board and Vinyl Printing Stickers work