Wednesday, March 22, 2023

வீடுகட்டும் முன்..டி.டி.பி.சி (DTCP) ஒப்புதல் வாங்குவதற்கான வழிமுறைகள்



டி.டி.பி.சி (DTCP) ஒப்புதல் வாங்குவதற்கான வழிமுறைகள்

டி.டி.பி.சி (DTCP) :

🏡 டி.டி.சி.பி. (DTCP) ஒப்புதல் என்றால் குறிப்பிட்ட லே-அவுட்டில் பூங்கா, சமூக நலக்கூடம், பள்ளிக்கூடம், கடைகள் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்க வேண்டும். அது தொடர்பான இடத்தை உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

🏡 நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல் (Conversion), அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் (Directorate of Town and Country Planning – DTCP) அனுமதி தேவைப்படுகிறது.

🏡 சி.எம்.டி.ஏ. எல்லையைத் தாண்டிய மனைகளுக்கு டி.டி.சி.பி. அப்ரூவல் வழங்கப்படுகிறது.

🏡 லே-அவுட் மொத்த இடம் ஐந்து ஏக்கருக்குள் (2,17,800 சதுர அடி) இருந்தால், மாவட்டங்களில் செயல்படும் டி.டி.சி.பி. பிராந்திய அலுவலகங்களில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

🏡 லே-அவுட் ஐந்து ஏக்கருக்கு மேல் இருக்கும் பட்சத்தில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரு அலுவலகங்களுக்கும் விண்ணப்பம் செய்வதிலோ அல்லது விதிமுறைகளிலோ பெரிய வித்தியாசம் இல்லை.

வழிமுறைகள் :

🏡 உங்கள் வீட்டு மனைக்கு உண்டான வில்லங்கச் சான்றிதழ், பட்டா நகல், உங்கள் பெயரிலான தாய்ப்பத்திரம் நகல், நீங்கள் வாங்கிய மனைக்கு உண்டான வரைபட அங்கீகார நகல், சிட்டா, அடங்கல் நகல்கள், புகைப்படம் வைத்து நகர ஊரமைப்பு இயக்ககத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு கட்டணம் உண்டு. 

🏡 முறையாக விண்ணப்பித்த பிறகு குறிப்பிட்ட நாட்களுக்குள் நீங்கள் மனைக்கு டி.டி.சி.பி. கேட்டு விண்ணப்பிப்பதற்கான பதில், வீடு கட்டுவதற்கான திட்ட வரைபடத்தை மொத்தமாக வைத்து அங்கீகாரம் கேட்பது நல்லது. தனித்தனியாக அங்கீகாரம் வாங்க ஆகும் அலைச்சலைத் தவிர்க்கலாம்.

🏡 பொதுவாக இவை விலை குறைவாக இருப்பதால் பலரும் பஞ்சாயத்து அனுமதி பெற்ற வீட்டுமனைகளை வாங்கி விடுகின்றனர். ஒவ்வொரு மனைகளுக்கும் டி.டி.சி.பி அங்கீகாரம் உள்ள மனைகளுக்கு நம்பகத்தன்மை அதிகம் என்பதால் டி.டி.சி.பி. அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கினால் அதற்காக நாம் தான் அலைய வேண்டியிருக்கும். மேலும் பணமும் கூடுதலாகச் செலவாக வாய்ப்புண்டு.

🏡 எனவே வாங்கும் போதே டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற மனைகளா என்பதைப் பார்த்து வாங்கவும். மனை விற்பவர்கள் உங்களிடம் காட்டும் திட்ட வரைபடத்தில் அங்கீகார எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்ணை வைத்து மனையின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

🏡 டி.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது. எனவே டி.டி.சி.பி. ஒப்புதலின் முக்கியத்துவம் இங்கு அதிகரிக்கிறது. அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டி.டி.சி.பி. அனுமதியே மிக மிக முக்கியமானது. ஒப்புதல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம் எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின் டி.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை. இதை தவிர, லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டி.டி.சி.பி. தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

🏡 இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று அவர்களிடம் நமது லே-அவுட் திட்டத்தை சமர்பிக்க வேண்டும். அவர்கள் அதை சரிபார்த்துவிட்டு, மாவட்ட டி.டி.சி.பி. அலுவலகத்துக்கு அந்த திட்டத்தை அனுப்பி வைப்பார்கள். டி.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானை பல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அதற்கு அனுமதி கொடுப்பார்கள். சில சமயங்களில் அவர்களே ஒரு திட்டத்தை தயாரித்துக் கொடுக்கலாம்.

🏡 அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்து இருப்பார்கள். அதைத்தான் லே-அவுட் புரமோட்டர்கள் அல்லது உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும். பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், அதில் வேறு எந்த மாற்றமும் செய்யக் கூடாது. அந்த திட்டத்தில் உள்ள படியே பிளாட்களை விற்கவே விளம்பரம் செய்யவோ வேண்டும்.

🏡 24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப் பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6 சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியை தனியாக வாங்கவோ அதில் கட்டடம் கட்டவோ பஞ்சாயத்து அனுமதி தேவைப்படும். அந்த 24 செண்ட் அளவுக்கு மேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் ஒப்புதல் மட்டுமல்லாது, வேறு எந்தவிதமான திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது. அவை அனைத்துமே டி.டி.சி.பி. உடைய கட்டுப்பாட்டின் கீழ் வரும். எனவே, பஞ்சாயத்து அனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப் பகுதியை வாங்குவது நல்ல விஷயம் அல்ல.

🏡 விவசாய நிலத்தை மட்டுமல்லாது, உற்பத்தி / தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றவும் டி.டி.சி.பி. அனுமதி தேவை. சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்ற திட்டமிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan), நிலப்பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டி.டி.சி.பி. அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர, குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தை எந்த விஷயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

🏡 டி.டி.சி.பி. அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட நிலத்தை ஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத்தைப் பற்றிய தகவல்களையும், அதற்கு ஆட்சேபணைகளையும் கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள். எந்த ஆட்சேபணையும் வரவில்லை என்றால், உடனடியாக Zone Conversion-னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.

🏡 நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள் அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங்களாகக் கருதப்படுகின்றன. இதில் கட்டப்படுகின்ற கட்டிடத்தின் அருகே உள்ள சாலையின் அகலம், நிலத்தின் அகலம், ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின் அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.

🏡 இவற்றில் ஏதேனும் ஒன்று சரியாக வரவில்லை என்றாலும் அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்படாது. சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ள சாலையின் அகலம் குறைந்த பட்சம் 80 அடியும், கட்டிடம் கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்க வேண்டும். இதில் சிறிது குறைந்தாலும் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படும்.

Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com

Call/Whatsup :   🇮🇳+91 8248479255

 #SreeKonguPromoters #RealEstateKovai #RKRealEstateKovai

No comments:

Post a Comment