Friday, March 24, 2023

என்.ஓ.சி (N.O.C. -No Objection Certificate)

என்.ஓ.சி (N.O.C. -No Objection Certificate)

🏡 என்.ஓ.சி என்பது ஒரு சட்ட ஆவணம் ஆகும். நீங்கள் சட்ட ரீதியாக பெறவேண்டிய தடையின்மை சான்றிதழ் தான் என்.ஓ.சி. இது நீங்கள் வாங்கக் கூடிய நிலத்திற்கு கட்டாயம் பெற வேண்டிய ஒரு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.

🏡 வீட்டு மனை வாங்கும்போது என்.ஓ.சி - ன் தேவை மற்றும் அதனின் முக்கியத்துவத்தை பற்றி பார்ப்போம்.

🏡 நீங்கள் வீட்டு மனை வாங்கும்போது அருகில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தே வாங்க வேண்டும். ஏனென்றால், மனையோ நிலமோ குறிப்பிட்ட இடங்களுக்கு அருகில் இருந்தால், அதற்கான தடையில்லாச் சான்றிதழை நீங்கள் பெற வேண்டும்.

🏡 உங்களது மனைக்கு அருகில் குளமோ, ஏரியோ 15 மீட்டர் தூரத்தில் இருந்தால், நீங்கள் அந்த மனைக்கு பொதுப் பணித்துறை அல்லது தொடர்புடைய துறைகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

🏡 நீங்கள் வாங்கிய மனைக்கு 30 மீட்டர் தொலைவிற்குள் இரயில்வே இருப்புப் பாதை இருந்தால், இரயில்வே துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

🏡 மேலும் மனைக்கு அருகில் குப்பைக் கிடங்கு இருந்தால், உள்ளாட்சித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

🏡 உங்களது மனைக்கு 90 மீட்டர் தொலைவிற்குள் மயானப் பூமியோ இருந்தால், சுகாதாரத் துறை அதிகாரியிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

🏡 கல்குவாரிக்கு 300 மீட்டர் தூரத்தில் உங்களது மனை இருந்தால் நீங்கள் சுரங்கத்துறையிடம் கட்டாயம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும்.

🏡 விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் மனை இருந்தால் விமான நிலைய ஆணையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

🏡 இதை தவிர்த்து உங்களது மனைக்கு 30 ஆண்டுகளுக்கான வில்லங்கமில்லாச் சான்றிதழும் அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையும் தேவைப்படும்.
Sree Kongu Promoters 
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you. 
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex  and Glow Sign Boards, LED Board, Vinyl Printing,  Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore.

Regards.
 R.Karthikeyan 
Call/Whatsup :   🇮🇳+91 8248479255

Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup :   🇮🇳+91 8248479255


No comments:

Post a Comment