வாங்கிய வீட்டு மனைக்கான வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
🏡 வில்லங்கச் சான்றிதழ் (Encumbarance Certificate - EC), ஒரு சொத்துக்கு யார் உரிமை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாகும். வில்லங்கச் சான்றிதழ் என்பது ஒரு சொத்து யாருடைய கைகளில் இருந்து எப்படி மாறி வந்துள்ளது, சொத்து உரிமை யாருக்கு மாற்றப்பட்டது போன்ற விபரங்களை அறிந்துகொள்ளும் ஆவணமாக உள்ளது. வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிட்ட சொத்தின் மீதான சட்டபூர்வமாக வில்லங்கங்கள் தெரியவரும்.
🏡 எனவே சொத்தினை வாங்குவதற்கு முன், அச்சொத்து குறித்த வில்லங்கச் சான்றிதழைப் பத்திரப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற்று, சொத்து குறித்தும், அதன் உண்மையான உரிமையாளர்களை குறித்தும் சரிபார்க்க வேண்டும்.
🏡 ஒரு சொத்தை வாங்க விரும்புபவர்கள், அந்தச் சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா? சொத்தை விற்பவர் பெயரில்தான் அந்தச் சொத்து உள்ளதா? என்பதை அறிவதற்காக சொத்து விபரத்தைத் தெரிவித்து வில்லங்கச் சான்றிதழை பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி பெற வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத் துறை இணையதளத்திலும் வில்லங்கச் சான்றிதழைப் பெறலாம்.
வில்லங்கச் சான்றிதழ் என்பது என்ன?
🏡 ஒருவர் தான் வாங்குகிற சொத்துக்களை உரிய முறையில் பதிவு செய்வது மிக அவசியம். ஆனால் பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாக பல சொத்துப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வில்லங்க சான்றிதழ் எனப்படும் EC (Encumbrance Certificate) மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விபரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
வில்லங்க சான்றிதழின் அவசியம்
🏡 வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்குகிற போது அதற்கு சட்ட ரீதியான வழிமுறை என்ன என்பதை அறியாமல் கேள்விப்படும் விபரங்களைக் கொண்டும், தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் என்றும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். ஒருவேளை அந்த சொத்தானது சரியான முறையில் பதிவு செய்யப்படாத நிலையில் சொத்தினை வாங்குபவர்கள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகக் கூடும். சில சமயங்களில் சொத்துக்களை இழக்கும் நிலை கூட வரலாம். எனவே வாங்குகிற சொத்தில் வில்லங்கம் ஏதும் இருக்கிறதா? என்று பார்த்து வாங்கினால் எந்த வில்லங்கமும் வராது. அப்படியே வில்லங்கம் இருந்தால் அதை வாங்காமல் வில்லங்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வில்லங்க சான்றிதழில் என்னென்ன விபரங்கள் இருக்கும்?
🏡 சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விபரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், தொகுதி மற்றும் பக்க எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்.
🏡 மேற்கண்ட இவற்றின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது போன்ற முழு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். வில்லங்க சான்றிதழை வைத்தே தாய்பத்திரத்தில் இருந்து யாரிடம் நிலம் வாங்கப்படுகிறதோ அதுவரைக்கும் உள்ள அனைத்து பத்திரங்களையும் சரிபார்த்து கொள்ளலாம்.
🏡 அதுமட்டுமின்றி அந்த சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் பதிவு செய்யப்பட்ட அடமானத்தில் இருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
வில்லங்க சான்றிதழுக்கு எங்கே விண்ணப்பிப்பது?
🏡 எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கே வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் வில்லங்க சான்றிதழ் பெற முடியும்.
விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
🏡 அந்தந்த ஏரியா பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இதற்கான விண்ணப்பம் கிடைக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது?
🏡 விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, சொத்து விபரம் மற்றும் கிரையப்பத்திர விபரம் முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் பெற முடியும்?
🏡 பொதுவாக முப்பது ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தான் வில்லங்கச் சான்றிதழ் கேட்கப்படுகின்றது. அவரவர் தேவையைப் பொறுத்து வருடங்கள் மாறுபடலாம்.
கட்டணம் எவ்வளவு?
🏡 பத்து வருடங்களுக்கு எனில் முதல் வருடத்திற்கு 15 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படும். இதனுடன் விண்ணப்பத்திற்கு 11 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆன்லைனில் வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
🏡 தற்போது பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணிணி மயமாக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 26 ஆண்டுகளுக்கு அதாவது 1987 ஆம் ஆண்டு முதல் சொத்துவிபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே 1987க்குப் பிறகான வில்லங்க சான்றிதழை பெறுவது எளிது. அதற்கு மேல் வேண்டுமெனில் தேடி கைப்பட எழுதித்தான் தருவார்கள்.
🏡 ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும். http://www.tnreginet.net/ என்ற இணையதளத்திற்கு சென்று அனைத்து விபரங்களையும் பதிவிட்டு EC பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் ஒரு ரூபாய் மட்டுமே ஆகும்.
வில்லங்க சான்றிதழில் தெரிந்து கொள்ள முடியாத சில தகவல்கள்:
🏡 சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் போட்டிருந்தாலோ, அடமானம் வைத்திருந்தாலோ இது குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது.
🏡 1.11.2009க்குப் பின்னர் சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு Power of attorney யாக யாரையாவது நியமித்திருந்தால் அதைத் தெரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அதற்கு முன் அதனை பதிவு செய்யும் முறையை அரசு அமல்படுத்தவில்லை. எனவே 1.11.2009க்கு முன் உள்ள Power of attorney குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது.
வில்லங்க சான்றிதழ் இணையத்தில் பெறும் முறை :
🏡 வீடு, நிலம் போன்ற சொத்துக்களை வாங்குவோர் அதன் முந்தைய உரிமையாளர்கள் பற்றி அறிந்துகொள்ளவும், சொத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா எனத் தெரிந்துகொள்ளவும் வில்லங்க சான்று பெறுவது வழக்கம்.
🏡 முதலில் Browser- ல் தமிழகப் பதிவுத்துறையின் tn.reginet.net என்ற இணையதள முகவரியை Search செய்ய வேண்டும். அந்த இணையதளத்தில் வில்லங்க சான்றை பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் தனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
🏡 வில்லங்க சான்றை பார்ப்பதற்கு, "To view encumbrance certificate" என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பார்க்க முடியும்.
🏡 வில்லங்க சான்றை பெற, "Apply Online" என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் படிவம் திறக்கப்படும். அதில் உங்கள் பெயர், தொலைபேசி எண், பதிவு மண்டலம், பதிவு மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம், சர்வே எண், தேதி மற்றும் மாதங்கள் உட்பட எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் தேவைப்படுகிறது என்ற விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
🏡 பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள ஊர் ஆகிய தகவல்களை பதிவு செய்தும் வில்லங்க சான்று விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். அதே பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டு எண்ணை தருவதன் வாயிலாக 10 நிமிடங்களுக்குள் வில்லங்கச் சான்று விபரங்களை இணையத்தில் பார்க்க இயலும்.
🏡 அத்துடன் PDF வடிவத்திலும் வில்லங்கச் சான்று விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
🏡 தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையத்தின் மூலம் வில்லங்க சான்று விபரங்களை இலவசமாகப் பெறுவது சுலபமான ஒன்றாகிவிட்டது.
🏡 மேலும் விபரங்களறிய வாங்கவிருக்கும் சொத்து, எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் எல்லைக்குட்பட்டதோ அந்த சார்பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளுங்கள்.
🏡 மேலும் வில்லங்கச் சான்றிதழில் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தின் மூலம் வாங்கவிருக்கும் சொத்து, எந்த தேதியில் பதிவு செய்யப்பட்டது? யார் பெயரில் எந்தெந்த ஆண்டுகளில் இந்த சொத்து அனுபவத்தில் இருந்தது? யார் யாரிடம் கைமாறி வந்திருக்கிறது? உள்ளிட்ட விபரங்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
Sree Kongu Promoters
We are one of the 🏡 Building Construction Business and Real Dealer in Real Estate Business (House,land buying & selling) in Coimbatore, Tamilnadu, India. 🙏🎉
Now Many Properties are available for sale all over Coimbatore. We are able to arrange the property as required by you.
Our service charge is Rs.500 (First time) and Commission 1.5% if the purchase or sale value beyond Rs.2 Crore. We assure our best services at all times.
Flex and Glow Sign Boards, LED Board, Vinyl Printing, Stickers, 🏠 Glass, Aluminium,🚪UPVC & Netlon 🪟Windows and Doors 🚪Manufacturers in Coimbatore
Regards.
R.Karthikeyan
Call/Whatsup : 🇮🇳+91 8248479255
xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB
Blog :
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook :
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram :
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Call/Whatsup : 🇮🇳+91 8248479255
No comments:
Post a Comment