Wednesday, March 22, 2023

வீட்டு மனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை


வீட்டு மனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

சொந்தமாக ஒரு நிலம் வாங்கி அதில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாகும். அந்தகனவை செயல்படுத்தும் போது எந்த எந்த விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும் என்பதை பற்றி காண்போம்.

வீடு கட்டுவதற்கு முன் நாம் முதலில் செய்யும் செலவு வீட்டு மனை வாங்குவது.

வீட்டு மனை வாங்கும் முன் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் :

🏡 நாம் வாங்கும் நிலம் நல்ல சுற்று சூழல் மற்றும் சாலை வசதியுடன் இருக்கிறதா என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

🏡 இபி ஒயர் நிலத்திற்கு மேலே செல்கிறதா என பார்க்க வேண்டும்.

🏡 நிலத்தின் உரிமையாளர் யார் ? அவர் தான் நமக்கு நிலத்தை விற்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அந்த உரிமையாளருக்கு நிலத்தை விற்பதற்கான முழு உரிமையும் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னறே நிலத்தை வாங்கும் முடிவு எடுக்க வேண்டும்.

🏡 30 வருடங்களுக்கு உண்டான வில்லங்க சான்றுதலை சரிபார்ப்பது அவசியம்.

🏡 வில்லங்கம் என்பது சொத்து யாரிடமிருந்து யாருக்கு மாறியது என்பதை தெளிவாக விளக்கும்.

🏡 மூலப்பத்திரம் ஒரிஜினல் சரிபார்ப்பதின் மூலமே அந்த சொத்தில் எதாவது வில்லங்கம் உள்ளதா என்பதை சரிபார்க்க முடியும்.

🏡 அந்த மனையில் வீடு கட்டுவதற்கு தகுந்த இடம் எனில், அதற்கான ஒப்புதல் வாங்கப்பட்டதா? CMDA அல்லது DTCP அங்கிகாரம் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

🏡 மேலும் நாம் வாங்கும் உரிமையாளரின் பெயரில் நிலத்திற்கான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

🏡 நாம் வாங்க கூடிய இடத்தின் மதிப்பு என்ன என்பதை விசாரித்து அதன் அடிப்படையில் 7 சதவிகித ஷ்டாம் பேப்பர் வாங்க வேண்டும்.

🏡 அந்த நிலத்திற்கு முன்பணம் கொடுத்தால், அதற்குண்டான ஒப்பந்த தாளை வாங்கிக் கொள்ள வேண்டும், (நான் இவருக்கு தான் நிலத்தை விற்கிறேன், நான் இவரிடமிருந்து தான் நிலத்தை வாங்கிக் கொள்கிறேன் என சாட்சியுடன் கையொப்பம் பெற்றுக் கொள்வது சிறந்தது.)

🏡 பட்டா, சிட்டா, வில்லங்கம் என அனைத்தையும் சரிப்பார்த்து கொள்வது மிக அவசியம்.

🏡 ஒரு நிலத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) சரியாக உள்ளதா என கவனத்தில் கொள்ள வேண்டும்.

🏡 பொதுவாக நாம் நிலம் வாங்கும் போது என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ்நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விபரங்கள் தெரிவதில்லை. அதை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

🏡 நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விபரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai
Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com

Call/Whatsup : 🇮🇳+91 8248479255

 #SreeKonguPromoters 

No comments:

Post a Comment